பார்லே ஜி இந்தியாவின் மிகப் பெரிய பிராண்டுகளில் ஒன்று. அதற்கு அடிக்கல் ஒரு நூற்றாண்டுக்கு முன்பாகவே நாட்டப்பட்டது. 1900களில் குஜராத்தின் தென்பகுதியில் உள்ள வால்சாட் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த மோகன்லால் சௌகான் என்பவர் வீட்டை விட்டு மும்பைக்கு ஓடிவந்தார்.
மும்பையில் ஒரு தையற்கடையில் உதவியாளராக வேலைக்கு சேர்ந்த மோகன்லால் சௌகான் பின்னர் அவரே ஒரு டெய்லரானார். அவருக்கு 18 வயதிருக்கும் போது மும்பையின் காம்தேவி பகுதியில் ஒரு கடையைத் தொடங்கினார். மோகன்லாலின் வேலைப்பாடு நன்றாக இருந்ததால் தொழில் விறுவிறுப்படைந்தது. கையில் நிறைய காசும் சேர்ந்தது. இதைத் தொடர்ந்து டி மோகன்லால் அண்டு கோ, சிப்பா தர்லாப் ஆகிய இரண்டு கடைகளை மேலும் தொடங்கினார்.

பின்னர் தனது ஐந்து மகன்களுக்கு நன்கு பயிற்சி தந்து கடைகளை அவர்களிடம் ஒப்படைத்தார். ஆனால் அவர்களோ முதலாம் உலகப் போர் சமயத்தில் டெய்லரிங் கடைகளுக்கு மூடுவிழா நடத்திவிட்டு ஒரு மிட்டாய் மற்றும் கம்பெனியைத் தொடங்கினர். இதுதான் பார்லே குரூப் உருவாக்கத்தின் ஆரம்பம்.
மோகன்லால் சௌகான் ஒரு பேக்கரியை வைத்திருந்தார், அங்கு அவர் ரொட்டி, ரொட்டி, ரஸ்க், ஸ்கோன்ஸ், நான்கதை போன்ற பொருட்களை உற்பத்தி செய்தார். அதன்பின்னர் மோகன்லால் சௌகான் தனது சேமிப்பில் இருந்த ரூ.60,000ஐ வைத்து ஜெர்மனியில் இருந்து நவீன இயந்திரங்களை இறக்குமதி செய்து உற்பத்தியை அதிகப்படுத்தி விற்பனையை விரிவாக்கம் செய்தார்.
நாடு விடுதலையடைந்ததும் மோகன்லாலின் பார்லே ஜி பிரிட்டிஷ் ஸ்நாக்ஸ் ஐட்டங்களுக்கு கடும் போட்டியைத் தந்தது. அதை தொடர்ந்து சில காலத்திலேயே கோகோ கோலாவுக்குப் போட்டியாக தம்ஸ்அப், கோல்டு ஸ்பாட், லிம்கா, ஃப்ரூட்டி ஆகிய பானங்களை பார்லே அறிமுகப்படுத்தியது. மக்கள் இதற்கு ஏகோபித்த ஆதரவு அளித்தனர்.
அப்போது பெப்சி எல்லாம் இந்தியாவில் அறிமுகமாகவில்லை. கோகோ கோலாவின் கோலா, ஃபேன்ட்டா, ஸ்பிரைட் இந்தியாவுக்குள் காலடி எடுத்து வைத்த பின்னர் சிறிய அளவில் இருந்த குளிர்பான நிறுவனங்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போயின. தமிழ்நாட்டின் பெருமைக்குரிய சின்னாளபட்டி புகழ் லவ்வோ பானங்களுக்கும் அதே கதிதான்.
ஆனால் பார்லே ஜி தலையெடுத்த பிறகு நிலைமை தலைகீழானது.
கோகோ கோலாவின் கோலாவுக்குப் போட்டியாக பார்லே ஜியின் தம்ஸ்அப், ஃபேன்டாவுக்குப் போட்டியாக கோல்டு ஸ்பாட், ஸ்பிரைட்டுக்குப் போட்டியாக லிம்கா.
கோகோ கோலாவை பார்லே ஜி விற்பனையில் புரட்டிப் போட்டது.
70களின் இறுதியில் கோகோ கோலா அமெரிக்காவுக்கு தனது தொழிலை ஏறக்கட்டி விட்டது. பின்னர் 90களில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தாராளமயமாக்கல் கொள்கை அறிமுகமான பின்னர்தான் கோகோ கோலா இந்தியாவுக்குத் திரும்பியது. அதனுடன் பெப்சியும் வந்து சேர்ந்தது.
கோகோ கோலாவும் பெப்சியும் சேர்ந்து இந்தியாவில் கோடிகோடியாக பணத்தை இறைத்து விளம்பரம் செய்தாலும் பார்லே ஜி-யை அசைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
தற்போது பார்லே ஜி நிறுவனத்தை விஜய் சௌகான் கவனித்து வருகிறார். அந்த நிறுவனத் தயாரிப்புகளின் வருமானம் 2 மில்லியன் அமெரிக்க டாலர்களைத் தொட்டுவிட்டது. தற்போதைய வருவாய் ரூ.16,202 கோடியாக உள்ளது.
விஜய் சௌகான் மற்றும் அவரது குடும்பத்தினரின் நிகர சொத்து மதிப்பு தற்போது 5.5 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இந்திய மதிப்பில் ரூ.45,238 கோடி ஆகும்.
ஏதோவொரு கிராமத்தில் இருந்து குடும்பத்தை விட்டுவிட்டு மும்பைக்கு வந்த 12 வயதான மோகன்லால் சௌகான் என்ற சிறுவனின் அயராத உழைப்பால் இன்றைக்கு இந்தியாவிலேயே மிகப் பெரிய தொழில் நிறுவனமாக பார்லே ஜி உருவெடுத்துள்ளது.
உண்மையான உழைப்பு என்றைக்குமே வீண் போகாது என்பதற்கு பார்லே ஜி அதிபர் மோகன்லால் சௌகானின் வாழ்க்கையே ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications