இந்தியாவில் டெஸ்லா தொழிற்சாலையை அமைக்க வேண்டும் என்று எலான் மஸ்க் சொன்ன நாளில் இருந்து அனைத்து மாநில அரசுகளும் தமிழ்நாட்டை நேரடியாகவும், மறைமுகமாகவும் முயற்சி செய்து வருகிறது. இதேவேளையில் மத்திய அரசிடம் வரி சலுகைக்காக எலான் மஸ்க்-ன் டெஸ்லா வருடக் கணக்கில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
வரிச் சலுகை குறித்து எவ்விதமான முடிவும் எடுக்கப்படாத நிலையில் கடந்த வாரம், குஜராத் மாநிலமும் வைப்ரென்ட் குஜராத் சுமிட் கூட்டத்தில் எலான் மஸ்க் நேரடியாகக் கலந்துகொண்டு குஜராத்தில் டெஸ்லா ஜிகாபேக்டரி-ஐ அமைப்பது குறித்து அறிவிப்பார் எனத் தகவல் வெளியானது. இது டெஸ்லா-வை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்ட அனைத்து மாநிலங்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு விடாப்பிடியாகக் குஜராத்தில் டெஸ்லா முதலீட்டுக்கு போட்டியாகவும், எலக்ட்ரிக் வாகன தயாரிப்புக்குப் போட்டியாகவும் புதிய முதலீட்டை ஈர்த்துள்ளது. வியட்நாம் நாட்டின் எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்ட் தமிழ்நாட்டில் எலக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரி உற்பத்தி ஆலையை அமைக்கவே முடிவு செய்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசின் முதலீட்டு மாநாடு அடுத்த வாரம் நடக்க உள்ள நிலையில் வின்ஃபாஸ்ட் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அப்போது வெளியிடப்படும் எனத் தெரிகிறது. இந்தப் பேட்டரி தொழிற்சாலை தூத்துக்குடி மாவட்டத்தில் அமையும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கவும், இந்தியாவில் தயாரிக்கும் எலக்ட்ரிக் கார்களை இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் விற்பனை செய்யத் திட்டமிட்டு, சில மாதங்களுக்கு முன்பு வின்ஃபாஸ்ட் அதிகாரிகள் இந்தியாவுக்கு முக்கியமான சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.
இந்தப் பணத்தில் வின்ஃபாஸ்ட் அமெரிக்கா, இந்தோனேஷியா, வியட்நாம் ஆகிய நாடுகளில் இருக்கும் தனது தொழிற்சாலைக்குத் தேவையான பேட்டரி சப்ளையை உறுதி செய்யும் முக்கியமான தொழிற்சாலையாகத் தூத்துக்குடி தொழிற்சாலை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெஸ்லாவின் முதலீடு பெரியதாக இருக்க வாய்ப்புகள் இருந்தாலும், தமிழ்நாடு சிறிய சிறிய முதலீடுகள் வாயிலாக வேலைவாய்ப்பு, ஏற்றுமதி ஆகியவற்றில் கட்டாயம் ஈடு செய்யும் என தெரிகிறது.
இதேபோல் டெஸ்லாவுக்கான வரி சலுகை குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகாவில்லை என்பது முக்கியமான விஷயமாக பார்க்கின்றனர் ஆட்டோமொபைல் துறையினர். ஆரம்பம் முதல் எலான் மஸ்க் விடாப்பிடியாக கேட்டு வருவது இந்த வரி சலுகையை தான்.


Click it and Unblock the Notifications