ஒவ்வொரு தெருவுக்கு ஒரு கோடீஸ்வரர்.. இந்தியாவின் செராமிக் தலைநகரம் Morbi பற்றி தெரியுமா உங்களுக்கு?

இந்தியாவில் நாம் பயன்படுத்தும் 80 சதவீத செராமிக் பொருட்கள் குஜராத் மாநிலத்தின் இருக்கும் ஒரு சிறிய நகரில் தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. அந்த வகையில் இந்தியாவின் செராமிக் சந்தையை தனது கைக்குள் வைத்திருக்கிறது குஜராத்தின் இந்த சிறு நகரம்.

குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள இந்த நகரம் மார்பி என அழைக்கப்படுகிறது. இங்குள்ள குடும்பங்களில் சுமார் 90% குடும்பம் டைல்ஸ் மற்றும் செராமிக் உற்பத்தியில் தான் ஈடுபட்டுள்ளன. இதன் மூலம் இவர்கள் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சாம்ராஜியத்தை உருவாக்கியுள்ளனர். சர்வதேச அளவில் செராமிக் மற்றும் டைல்ஸ் விற்பனையில் சீனாவுடன் போட்டி போட்டுக்கொண்டு உலகிற்கே தரமான டைல்ஸ்கள் மற்றும் செராமிக் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

ஒவ்வொரு தெருவுக்கு ஒரு கோடீஸ்வரர்.. இந்தியாவின் செராமிக் தலைநகரம்  Morbi பற்றி தெரியுமா உங்களுக்கு?

1930 களில் மார்பி நகரத்தில் சிறிய அளவில் தொடங்கப்பட்ட செராமிக் மற்றும் டைல்ஸ் உற்பத்தி ஆலைகள் இன்று நாட்டிற்கே 80 சதவீத செராமிக் மற்றும் டைல்ஸ்களை உற்பத்தி செய்யும் ஆலைகளாக வளர்ந்துள்ளன. மார்பி நகரில் சுமார் 900 செராமிக் உற்பத்தியாளர்கள் இருக்கின்றனர். இதனால்தான் இந்த நகரத்தை இந்தியாவின் செராமிக் நகரம் என அழைக்கிறார்கள் .

தரையில் பயன்படுத்தும் டைல்ஸ், சுவற்றில் ஒட்டப்படும் டைல்ஸ் மற்றும் சமையலறை, அலுவலகங்களில் பயன்படுத்தக்கூடிய டைல்ஸ்கள், வணிக வளாகங்களில் பயன்படுத்தக்கூடிய டைம்ஸ்கள் என அனைத்து வகையான செராமிக் டைல்ஸ்களும் இங்கே கிடைக்கின்றன. வாடிக்கையாளர்கள் இங்குள்ள நிறுவனங்களை தொடர்பு கொண்டு தங்களுக்கு விருப்பமான வடிவத்தில் டைல்ஸ்களை ஆர்டர் செய்து கொள்முதல் செய்து கொள்ளலாம்.

பாரம்பரியமாக இந்த நகரை சேர்ந்த பலரும் டைல்ஸ் மற்றும் செராமிக் பொருட்கள் உற்பத்தியில் தான் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் அடுத்தடுத்த தலைமுறையினரின் ரசனைக்கு ஏற்ப புதிய புதிய டைல்ஸ்களை வடிவமைத்து விற்பனை செய்வதே இத்தனை ஆண்டுகள் இந்த தொழிலில் நீடித்து நிலைக்க காரணமாக இருக்கிறது. இந்த நகரத்தை பொறுத்தவரை பெரும்பாலானவர்களுக்கு டைல்ஸ் மற்றும் செராமிக் பொருட்கள் உற்பத்தி தான் குடும்பத்தொழில் என்பதால் இந்த திறன் சார்ந்த ஊழியர்கள் எளிதாக கிடைத்து விடுகின்றனர்.

உலகிலேயே தரம் வாய்ந்த டைல்ஸ்கள் உற்பத்தி செய்யப்படுவதால் சர்வதேச அளவில் குஜராத்தின் மார்பின் நகரில் தயார் செய்யப்படும் டைல்ஸ்களுக்கு டிமாண்ட் அதிகம் என சொல்லப்படுகிறது. இந்த பகுதியில் டைல்ஸ் உற்பத்திக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மாநில அரசு ஏற்படுத்தி தந்துள்ளது. ஆலைகளை நிறுவ நிதியுதவிகளை கூட செய்கிறது. இங்கே டைல்ஸ் தயாரிப்பதற்கான மூலதனப் பொருட்கள் மிக எளிதாகவும் தரமானதாகவும் கிடைக்கின்றன.

உயர்தரமான செராமிக் டைல்ஸ்களை தயாரிக்க தேவையான மணல் உள்ளிட்டவை கிடைப்பது இங்கு உள்ள மக்கள் இந்த தொழிலில் வலுவாக இருப்பதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. மார்பி நகரத்தை பொருத்தவரை அகமதாபாத் ,ராஜ்கோட் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுடன் எளிதாக போக்குவரத்து வசதி கொண்டிருக்கிறது.

இங்குள்ள பலரும் கோடிக்கணக்கிலான சொத்துகளுக்கு உரிமையாளர்களாக இருக்கின்றனர். ஆனால் அவர்கள் அவற்றை பெரிதளவில் வெளியில் காட்டிக் கொள்வது இல்லையாம். இங்க இருக்கும் சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் இந்த தொழிலில் தான் ஈடுபட்டுள்ளனர் கிட்டதட்ட நான்கு லட்சம் பேருக்கு இவர்கள் வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தி தந்துள்ளனர்.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+