சென்னை: இளம் வயதிலேயே உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று குகேஷ் இந்தியாவிற்கே பெருமை தேடி தந்துள்ளார். ஆனால் தற்போது முகேஷ் தமிழ்நாட்டுக்கு சொந்தமானவரா அல்லது தெலுங்கரா என்ற விவாதம் சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளது.
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் குகேஷ் வெற்றி பெற்றதை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆகிய இருவருமே வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வியாழக்கிழமை அன்று மாலை சரியாக 7:25 மணி அளவில் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் குகேஷூக்கு வாழ்த்து தெரிவித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் "இளம் வயது உலக செஸ் சாம்பியன்ஷிப் ஆனதற்கு வாழ்த்துக்கள் குகேஷ். செஸ் விளையாட்டு போட்டியில் இந்தியாவின் பாரம்பரியத்தை தொடரும் வகையில் உங்களுடைய சாதனை அமைந்துள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் உலகத்தரமாய்ந்த மற்றொரு வீரரை உருவாக்கியதன் மூலம் உலகளாவிய செஸ் தலைநகரம் சென்னை என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாடு உங்களால் பெருமை கொள்கிறது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டு இருந்தார். குகேஷுக்கு தான் தங்கப் பதக்கத்தை அணிவிக்கும் புகைப்படத்தையும் முதலமைச்சர் ஸ்டாலின் பகிர்ந்து இருந்தார்.
இதனைத் தொடர்ந்து சில நிமிட இடைவெளிகளிலேயே ஆந்திர பிரதேச மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவும் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் குகேஷுக்கு வாழ்த்து கூறியிருந்தார். அதில் "எங்கள் சொந்த தெலுங்கு பையனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களின் அபாரமான சாதனையை ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடுகிறது "என குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் தான் குகேஷின் வெற்றி தமிழ்நாட்டுக்கு பெருமையா அல்லது ஆந்திராவுக்கு பெருமையா என்ற விவாதம் இணையதளங்களில் எழுந்துள்ளது.
குகேஷின் முழுமையான பெயர் குகேஷ் தொம்மராஜு என்பதாகும். இவர் தெலுங்கு பாரம்பரியத்தை கொண்ட குடும்பத்தை சேர்ந்தவர். ஆனால் பிறந்து வளர்ந்தது அனைத்தும் சென்னையில் தான். சமூக வலைத்தளங்களில் ஆந்திராவை சேர்ந்தவர்களும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களும் இந்த விஷயத்தை இனம் சார்ந்த மொழி சார்ந்த பிரச்சினையாக மாற்றியுள்ளனர்.
தெலுங்கு மொழி பேசும் குடும்பத்தை பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும் அவர் சென்னையில் தான் பிறந்து வளர்ந்தவர் அவருடைய பெற்றோர் இருவருமே மருத்துவத்துறை சார்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என ஒரு பயனர் கூறியுள்ளார்.
ஒரு பயனர் குகேஷ் இந்த நிலையை அடைவதற்கு தமிழ்நாடு அரசு தான் மிகப்பெரிய அளவில் உதவி செய்துள்ளது என்றும் தமிழ்நாடு அரசு குகேஷுக்கு 75 லட்சம் ரூபாயை நிதி உதவியாக வழங்கியதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். குகேஷின் தந்தை ரஜினிகாந்த் சென்னையில் காது, மூக்கு, தொண்டை நிபுணராக இருந்தவர், தாயார் பத்மா மைக்ரோபயாலஜிஸ்ட்டாக இருக்கிறார்.
Story Written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications