ஈரான் போர் புதிய திருப்பத்தை நோக்கி திருப்பியுள்ளது, இந்த போரால் பொருளாதார ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் அதிகம் பாதிக்கப்பட்ட சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பஹ்ரைன், குவைத் ஆகிய நாடுகள் அமெரிக்காவுக்கு எதிராக திரும்பியுள்ளது.
இந்த 5 நாடுகள் தான் ஈரான் போரில் அமெரிக்க அரசுக்கும், அமெரிக்க ராணுவத்திற்கும் பக்கபலமாக இருந்தது, ஆனால் தற்போது அனைத்தும் தலைகீழாக மாறியதால் அமெரிக்கா மொத்தமாக வளைகுடாவை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள தகவல் படி ஈரான் விவகாரத்தில்ல டிரம்ப் அரசின் மீதான நம்பிக்கையை சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பஹ்ரைன், குவைத் ஆகிய நாடுகள் இழந்துள்ளது. ஈரான் போர் விவகாரத்தில் அமெரிக்கா ஒரு நிலையான நிலைப்பாடு இல்லாமல் மாறி மாறி முடிவுகளை எடுத்து, போர் சூழ்நிலையை மோசமாக்கி வருகிறது என ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளும் டிரம்ப் அரசுக்கு எதிராக திரும்பியுள்ளது.
இது மட்டுமல்லாமல் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பஹ்ரைன், குவைத் ஆகிய நாடுகள் தங்கள் நாட்டில் இகுக்கும் அமெரிக்க ராணுவ கட்டமைப்புகளுக்கான அனுமதியை ரத்து செய்யவும் திட்டமிட்டு வருவதாகவும் வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
வளைகுடா நாடுகள் அமெரிக்கா மீதான நிலைப்பாடு குறித்து கூறுகையில், ஈரான் மீதான போரை டிரம்ப் துவங்கினார், ஆனால் இதற்கான விலையை நாங்கள் கொடுத்து வருகிறோம் என கோபத்தில் உச்சியில் தெரிவித்துள்ளது. வளைகுடா நாடுகள் மத்தியிலான நட்புறவில் விரிசல் ஏற்பட்டது, OPEC அமைப்பில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் வெளியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அமெரிக்கா - ஈரான் - இஸ்ரேல் போரில் வளைகுடா நாடுகள் தேவையில்லாமல் சிக்கியுள்ளது, இந்த சிக்கலை டிரம்ப் தீர்க்க முடியால் நிலைமையில் உள்ளார். மேலும் ஈரான் போரில் டிரம்ப்-ன் முடிவுகள் மிகவும் ஒழுங்கற்ற முறையிலும், கணிக்க முடியாத நிலையிலும் உள்ளது எனவும் வளைகுடா நாடுகள் குற்றம்சாட்டியுள்ளது.
இதனால் வளைகுடாவில் அமெரிக்க ராணும் இருப்பது எங்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இதுமட்டும் அல்லாமல் போர் அமைதிக்கா செய்யப்பட்ட ஒப்பந்தம் இரு தரப்பாலும் நிறைவேற்றப்படாமல் ஒரு நகைச்சுவையாக விளங்குகிறது.
ஈரான் போர் துவங்கிய பின்பு முதல் முறையாக வளைகுடா நாடுகள் இத்தகைய எதிர்ப்பை காட்டியுள்ளது, மேலும் டிரம்ப் ஈரான் போரை பங்குச்சந்தை முதலீட்டுக்கும், அதில் இருந்து லாபம் சம்பாதிக்கவும் பெரிய அளவில் பயன்படுத்தியுள்ளார் என்ற விமர்சனம் தொடர்ந்து அவர் மீது வைக்கப்பட்டு வருகிறது.
ஈரான் போர் நாளுக்கு நாள் மோசமடைந்து வருவது மட்டும் அல்லாமல் தொடர்ந்து உலக நாடுகளின் பொருளாதாரம் வர்த்தகம் அனைத்தும் பாதிக்கப்பட்டு வருகிறது. ஒரு பக்கம் ஈரான் - ஒமன் மத்தியில் ஹார்முஸ் வழித்தடத்தை எப்படி இயக்குவது என்பது குறித்து பேச்சுவார்த்தை எவ்விதமான கருத்து வேறுப்பாடும் இல்லாமல் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதேபோல் ஹார்முஸ்-ல் சரக்கு கப்பல்கள் எப்படி, எந்த வழியில் வர வேண்டும், செல்ல வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யப்பட்டு விரைவில் இதற்கான வரைப்படம் வெளியிடவும் தயாராகி வருகிறது. ஆனாலும் ஈரான் தரப்பில் வைக்கப்படும் ஒரே கண்டின். ஜூன் மாதம் அமெரிக்காவுடன் செய்யப்பட்ட அமைதி ஒப்பந்தம் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுதான்.
இந்த ஒரு கண்டிஷனை அமெரிக்காவில் நிறைவேற்ற முடியாத நிலையில் கச்சா எண்ணெய் விலை 82 டாலர் வரையில் உயர்ந்து தற்போது பியூச்சர்ஸ் சந்தையில் வர்த்தகமாகி வருகிறது. உலகமே கிரீன் எனர்ஜி மீது கவனம் செலுத்த துவங்கிய நிலையில் டிரம்ப் வந்த பின்பு கச்சா எண்ணெய் மீதான முக்கியதுவம் அதிகரிக்க துவங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications