அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், வளைகுடா நாடுகள் எண்ணெய் உற்பத்தியை குறைக்கத் தொடங்கியுள்ளன.
ஈரான் படைகள் ஹார்முஸ் ஜலசந்தி வழித்தடத்தை கைப்பற்றி கிட்டத்தட்ட மூடப்பட்டுள்ளதால், கச்சா எண்ணெய் ஏற்றுமதி பெரிதும் தடைபட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் சேமிக்க இடம் இல்லாமல் உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளது. ஈரான் மீதான போர் தற்போது உலக எண்ணெய் சந்தையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

இதன் வாயிலாக கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 25 சதவீதம் உயர்ந்து ஒரு பேரல் விலை 116 டாலர் அளவீட்டை தொட்டு உள்ளது. இதன் வளைகுடா நாடுகளின் நிதி ஆதாரத்தை குறைப்பது மட்டும் அல்லாமல் வெளிநாட்டு கச்சா எண்ணெய்யை நம்பியிருக்கும் உலக நாடுகளுக்கு பெரும் நெருக்கடியாக மாறியுள்ளது.
ஓபெக் அமைப்பின் ஐந்தாவது பெரிய உற்பத்தியாளராக இருக்கும் குவைத், சனிக்கிழமை ஈரானின் ஹார்முஸ் அச்சுறுத்தலால் எண்ணெய் உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பு அளவை குறைத்ததாக அறிவித்தது.
இதேபோல் ஓபெக் அமைப்பின் இரண்டாவது பெரிய உற்பத்தியாளராக இருக்கும் ஈராக் அந்நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மூன்று முக்கிய எண்ணெய் வயல்களில் உற்பத்தி 70 சதவீதம் குறைந்து 1.3 மில்லியன் பேரல்களாக சரிந்துள்ளது. முன்பு 4.3 மில்லியன் பேரல்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஓபெக் அமைப்பின் மூன்றாவது பெரிய உற்பத்தியாளராக இருக்கும் ஐக்கிய அரபு அமீரகம், அபுதாபி நேஷனல் ஆயில் கம்பெனி கடல் எண்ணெய் உற்பத்தியை கவனமாக குறைத்து வருவதாக தெரிவித்துள்ளது.
வளைகுடா நாடுகளில் இருக்கும் நாடுகள் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட எண்ணெய்யை ஏற்றுமதி செய்ய முடியாமல் தேக்கி வைத்துள்ள நிலையிலும், சேமிப்பு தொட்டிகளும் நிரம்பும் நிலையில் உள்ளதால் கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பை நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த உற்பத்தி குறைப்புக்கு அடிப்படைய காரணம் ஹார்முஸ் மூடலால் எண்ணெய் போக்குவரத்து மொத்தமாக தடைபெற்றுள்ளது. எண்ணெய் ஏற்றுமதி குறைந்துள்ளதால், சேமிப்பு தொட்டிகள் நிரம்பி வருகின்றன. உற்பத்தியை குறைத்தால் மட்டுமே இதை கட்டுப்படுத்த முடியும். இது உலக எண்ணெய் சந்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள காரணத்தால் உலக நாடுகளில் பணவீக்கம் அதிகமாகும், குறிப்பாக இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா போன்ற இறக்குமதி எண்ணெய் மீது அதிகம் சார்ந்துள்ள நாடுகளில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.
கச்சா எண்ணெய் விலை உயர்வால் முதலில் பெட்ரோல்-டீசல் விலை உயரும். இது உணவு மற்றும் போக்குவரத்து விலையை உயர்த்தும். இப்படி படிபடியாக அனைத்து உற்பத்தி பொருட்களின் விலையை உயர்த்தும்.

முக்கிய பங்குகள்:
கச்சா எண்ணெய் விலை திடீரென உயர்ந்துள்ளதால் பங்குச் சந்தையில் எண்ணெய் தொடர்புடைய பல நிறுவனங்கள் முதலீட்டாளர்களின் கவனத்தில் உள்ளன. குறிப்பாக Oil and Natural Gas Corporation (ONGC), Indian Oil Corporation, Bharat Petroleum மற்றும் Hindustan Petroleum போன்ற எண்ணெய் மற்றும் எரிபொருள் நிறுவன பங்குகள் முக்கியமாக கண்காணிக்கப்படுகின்றன.
அதேபோல் கச்சா எண்ணெய் விலை மாற்றத்தால் பாதிக்கப்படும் பெயின்ட், டயர் மற்றும் விமானப் போக்குவரத்து துறைகளும் முதலீட்டாளர்களின் கவனத்தில் உள்ளன. இந்தத் துறைகளில் Asian Paints, Kansai Nerolac, MRF Limited மற்றும் JK Tyre போன்ற நிறுவனங்களின் பங்குகளும் சந்தை நகர்வுகளுக்கு ஏற்ப அதிக கவனத்தை பெறக்கூடும்.
More From GoodReturns

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

அமெரிக்காவுக்கு ஈரான் தந்த ’ரகசிய பரிசு’ – அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகம்..!!

ஈரானை சீண்டும் டிரம்ப்.. மீண்டும் போர் தீவிரமாகுமா..?

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

யாருடைய கட்டுப்பாட்டில் ஹார்முஸ் ஜலசந்தி? அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்லும் புது கணக்கு

'எனர்ஜி லாக்டவுன்' உலகம் நாடுகளை அச்சுறுத்தும் புதிய பிரச்சனை.. இந்த 10 விஷயம் நடக்கணும்..!!

என்னுடைய பவர் தெரியாம பேசுறீங்க.. டிரம்ப் வாயை திறந்த உடன் கச்சா எண்ணெய் விலை 13% வீழ்ச்சி..!

14.2 கிலோ சிலிண்டரில் 10 கிலோ LPG.. மத்திய அரசின் புது திட்டம்.. நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை..!



Click it and Unblock the Notifications