ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் மோதல் ஒவ்வொரு நாளும் தீவிரமடைந்து வருகிறது. அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டு ராணுவ நடவடிக்கை மூலம் ஈரானின் பல்வேறு பகுதிகளின் மீது குண்டுகளை வீசி வருகின்றன. பதிலுக்கு ஈரானும் இஸ்ரேல் மீதும் கத்தார் துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருக்கக்கூடிய அமெரிக்க தூதரகத்தின் மீதும் தொடர்ச்சியாக டிரோன்கள் மூலமும் ஏவுகணைகள் மூலமும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த சூழலில் கத்தாரில் வசிக்கக்கூடிய இந்திய நாட்டவர்களுக்கு இந்திய தூதரகம் மிக முக்கியமான ஒரு எச்சரிக்கையை வெளியிட்டு இருக்கிறது. தோஹாவில் இருக்கக்கூடிய இந்திய தூதரகம் இது தொடர்பாக வெளியிட்டு இருக்கக்கூடிய அறிவிப்பில், தற்போதுள்ள சூழலை கருத்தில் கொண்டு கத்தார் நாட்டு உள்துறை அமைச்சகம் சில பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டு இருக்கிறது. எனவே கத்தாரில் வசிக்கக்கூடிய இந்தியர்கள் இந்த பாதுகாப்பு வழிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்றும் தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேறு வழியே இல்லை வெளியே சென்று ஆக வேண்டும் என்ற காரணம் இருந்தால் மட்டும் வீட்டை விட்டு வெளியே வாருங்கள் மற்றபடி வீட்டுக்குள்ளே இருங்கள் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல வீட்டிலேயே பால்கனி, ஜன்னல் போன்ற திறந்த பகுதிகளில் இருக்க வேண்டாம் என குறிப்பிட்டுள்ளது.
அதிகாரப்பூர்வமான சமூகவலைதள பக்கங்கள் மற்றும் அதிகாரிகளிடமிருந்து வரக்கூடிய தகவல்களை மட்டுமே நம்புங்கள் என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. முன்னதாக கத்தார் நாட்டு உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தாக்குதல் நடத்தக்கூடிய பகுதிகளில் மக்கள் ஒன்று கூட கூடாது , அங்கே புகைப்படங்கள் வீடியோக்கள் எடுப்பதை தவிர்க்க வேண்டும் மேலும் அவற்றை பகிர்வதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்து இருக்கிறது. இதனை மீறக்கூடிய நபர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
கத்தாரில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது தொடர்ச்சியாக ஈரான் தாக்குதல் நடத்துவதால் தூதரகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசித்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். இதற்கு இடையே கத்தாரில் இருக்கக்கூடிய இந்திய தூதரகம் 24 மணி நேர இலவச தொலைபேசி எண்ணை அறிவித்திருக்கிறது. +974 55647502; +974 55362508 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும், [email protected] என்ற மின்னஞ்சலையும் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.
மேலும் கத்தாரில் வான்வெளி தளம் முழுவதுமாக மூடப்பட்டிருப்பதால் எந்த விமானமும் இயக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே பயணிகள் விமான நிலையங்களுக்கு வர வேண்டாம் தாங்கள் டிக்கெட் முன்பதிவு செய்த ஏர்லைன்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்டு எந்த தேதியில் மீண்டும் விமானம் இயக்கப்படுகிறது என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதற்கிடையே குவைத்தில் இருக்கக்கூடிய இந்திய தூதரகம் மிக முக்கியமான ஒரு தகவலை வெளியிட்டு இருக்கிறது தற்போதுள்ள இந்த சவாலான சூழலுக்கு மத்தியில் குவைத் அரசாங்கம் குவைத்தில் தற்காலிக விசாக்களில் வந்து சிக்கி கொண்டவர்களுக்கு ஒரு மாத காலம் விசா நீட்டிப்பினை வழங்கி இருக்கிறது, மேலும் குவைத்தில் இருந்து வெளிநாட்டுக்கு சென்று இருக்கக்கூடிய மக்கள் மூன்று மாத காலம் வரை அங்கேயே இருக்க அனுமதி வழங்கியுள்ளதாம்.
More From GoodReturns

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ஈரான் மீது பங்கர்-பஸ்டர் குண்டு தாக்குதல்.. டிரம்ப் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு.. அதுவும் இந்த இடத்தில்..!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான்-க்கு அமெரிக்கா, இஸ்ரேல் விட பெரிய ஆபத்து இதுதான்.. ஈரான் மக்கள் பரிதவிக்கும் நிலை வரலாம்..!!

ஈரான் போர்: மூக்கறுபட்ட பாகிஸ்தான்..!! அப்போ டிரம்ப் சொன்னது என்ன ஆச்சு?

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

திடீரென பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய Shell நிறுவனம்..!! வாகன ஓட்டிகளே கவனம்..!!

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

சிலிண்டர் விலை: 3 மாதங்களில் இல்லாத விலை உயர்வு..!! எண்ணெய் நிறுவனங்களின் அறிவிப்பால் அதிர்ச்சி..!!

மீண்டும் மண்ணெண்ணெய்..!! ஈரான் போர் நீடிப்பதால் மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!!

பக்ரைனில் ஈரானின் சைபர் போர்! அமேசான் கிளவுட் முடக்கம்? அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலா?



Click it and Unblock the Notifications