உங்களுக்கு பாலிவுட் மியூசிக் மற்றும் திரைப்படங்கள் பிடிக்கும் என்றால் உங்களுக்கு நிச்சயம் டி-சீரிஸ் என்ற பெயர் தெரிந்திருக்கும். மிகப்பெரிய மியூசிஸ் லேபிள் மற்றும் மூவி ஸ்டூடியோஸின் அதிபர் குல்ஷன் குமாரையும் தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது.
பாலிவுட் இசையுலகத்தின் முடிசூடா மன்னன் இவர். குமார் சானு முதல் சோனு நிகாம் வரை ஹிந்திப் படவுலகின் மிகப்பெரிய கலைஞர்களை தேர்ந்தெடுத்து அறிமுகம் செய்தவர். இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்த தி கிரேட் ஓல்டு மியூசிக் லேபிள் HMV-ஐ ஓரங்கட்டினார்.

ஆடியோ கேசட்டு வடிவத்தை குல்ஷன் குமார் டி-சீரிஸ் தான் அறிமுகப்படுத்தியது. இசையை பல கோடிக்கணக்கான டாலர்கள் தொழிலாக அவர் மாற்றினார். மலிவு விலையில் ஆடியோ கேசட்டுகளை விற்பனை செய்தார். பாலிவுட் இசையுலகத்தைப் புரட்டிப்போட்ட அந்த இசை மகானின் சரித்திரத்தைப் பற்றி பார்க்கலாம்.
குல்ஷன் குமார் துவா, தொழிலதிபர், திரைப்படம் மற்றும் இசையமைப்பாளர், சூப்பர் கேசட்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்- டி சீரிஸ்ஸின் நிறுவனர் என்ற பெருமைகளுக்கு உரியவர்.
1951 ஆம் ஆண்டு பஞ்சாபி-ஹிந்து குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை புதுதில்லியின் தார்யாகஞ்சில் பழஜூஸ் கடை வைத்திருந்தார். இளம்வயதிலேயே இசையில் மிகுந்த நாட்டம் கொண்டிருந்த குல்ஷன் குமார் அதில் பல நுணுக்கங்களை கற்றறிந்தார். அதையே தனது தொழிலாக மாற்றிக்கொண்டார்.
அவரது குடும்பம் விலை மலிவான ஆடியோ கேசட்டுகள் மற்றும் ரிக்கார்டுகளை விற்கும் ஒரு கடையை வாங்கியது. இதுதான் மிகப்பெரிய இசை சாம்ராஜ்ஜியத்தின் வித்தாகும். 1983 ஆம் ஆண்டில் குல்ஷன் குமார் சூப்பர் கேசட்ஸ் இண்டஸ்ட்ரீஸ் எனப்படும் ஆடியோ கேசட் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். பின்னர் இது டி சீரிஸ் என்ற இசை லேபிளாக மாறியது.
இந்திய இசையுலகுக்கு மறுமலர்ச்சியை கொண்டுவருவதில் டி சீரிஸ் முக்கியப் பங்கை ஆற்றியது. அனுராதா பௌத்வால், முகமது அஜீஸ், குமார் சானு, அல்கா யாக்னிக் போன்ற கலைஞர்களை வைத்து பல பிரபல பாடல்களை உருவாக்கினார். தொழில்முறை கலைஞர்கள் வாங்கும் பணத்தில் மிகச் சொற்பத் தொகையில் பல ஆல்பங்களை உருவாக்கி அதன் கவர் பாடல்களை இந்தக் கலைஞர்களை வைத்து தயாரித்தார்.
டிஸ்ட்ரிபியூஷன் நெட்வொர்க்கிலும் குமார் மிகுந்த கவனம் செலுத்தினார். ஆடம்பரமான ரிக்கார்டு விற்பனை கடைகளில் தனது தயாரிப்புகளை கொண்டு சேர்த்தார். இதுதவிர அவரது கேசட்டுகள் எங்கெங்கும் கிடைக்கும்படி செய்தார்.
1988 ஆம் ஆண்டில் டி சீரிஸின் மெகா ஹிட் ஆல்பமான கயாமத் சே கயாமத் தக் முதல் வெற்றியைக் கொண்டு வந்தது. காப்புரிமை கொண்ட இசையை அதிகளவில் விற்பனை செய்ய வைத்தார். சவுண்டுடிராக்கின் வியாபார வெற்றி டி சீரிஸ் நிறுவனத்தின் பாதையை மாற்றியது.
1990 ஆம் ஆண்டு டி சீரிஸ் மற்றொரு மகத்தான படைப்பான ஆஷிக்கியை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் தில் ஹை கே மாந்தா நஹி மற்றொரு சாதனையைப் படைத்தது. இதனால் ஆல்பம் தயாரிப்பதில் மும்முரமானார்கள். பின்னர் குல்ஷன் குமாரின் இசை லேபிள் மிகப் பெரிய பிராண்டாக வளர்ந்தது.
ஆல்பம் தயாரிப்பு, டிஸ்ட்ரிபூஷன் மற்றும் விற்பனையில் பல வெற்றிகளைக் குவித்தது. துரதிர்ஷ்டவசமாக இந்த இசை மன்னர் சில கூலிப்படையினரால் 1997 ஆம் ஆண்டில் கொல்லப்பட்டார். தாவூத் மெர்ச்சென்ட் என அழைக்கப்பட்ட அப்துல் ராப் குல்ஷன் குமார் கொலையைச் செய்ததாக 2002இல் நிரூபிக்கப்பட்டார். பம்பாய் உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட அப்துல் ராப் இந்தியாவை விட்டு வெளியேறினார்.
2016இல் அவர் வங்கதேசத்தில் இருந்து நாடு கடத்தப்பட்டார். இப்போது மும்பையின் அதிக பாதுகாப்பு கொண்ட ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குல்ஷன் குமாரின் சாம்ராஜ்ஜியத்தை அவரது மகன் பூஷண்குமார் இப்போது கவனித்து வருகிறார்.
டி சீரிஸின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக பதவி வகிக்கிறார். டி சீரிஸ் யூடியூப் சேனல் அதிக அளவு சப்ஸ்கிரைபர்களை பெற்றுள்ளது. 2023இல் அந்த சேனலுக்கு 247 மில்லியன் வாடிக்கையாளர்கள் இருந்தனர்.


Click it and Unblock the Notifications