ஆன்லைன் உணவு டெலிவரி சேவை நிறுவனமான சோமேட்டோ-வின் இணை நிறுவனர் மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரி குஞ்சன் படிதார் திங்கள்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்ததாகத் தெரிவித்துள்ளது.
சோமேட்டோ நிறுவனத்தின் முதல் சில ஊழியர்களில் குஞ்சன் படிதார் ஒருவர் மட்டும் அல்லாமல் மிகவும் முக்கியமானவர். இவரின் தலைமையில் தான் சோமேட்டோ நிறுவனத்திற்கான முக்கியத் தொழில்நுட்ப அமைப்புகளை உருவாக்கப்பட்டது.
குஞ்சன் படிதார் ராஜினாமா-வை சோமேட்டோ நிறுவனம் பங்குச்சந்தையில் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சோமேட்டோ
இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி மற்றும் குவிக் காமர்ஸ் நிறுவனமான சோமேட்டோ, Blinkit நிறுவனத்தின் இணைப்பிற்குப் பின்பு பணிநீக்க அறிவிப்பை எதிர்பார்த்திருந்த நிலையில் சிறப்பான காலாண்டு முடிவுகளை வெளியிட்ட காரணத்தால் சில காலம் பணிநீக்க அறிவிப்பை ஒத்திவைத்தது.
3% ஊழியர்கள் பணிநீக்கம்
ஆனால் மும்பை பங்குச்சந்தையில் சோமேட்டோ பங்குகள் தொடர்ந்து சரிவை சந்தித்த காரணத்தால் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் 3 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டு அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்புக்கு முன்னும் பின்னும் பல உயர் அதிகாரிகள் சோமோட்டோ நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
குஞ்சன் படிதார்
சோமேட்டோ-வின் இணை நிறுவனர் மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரி குஞ்சன் படிதார் 4வது உயர் அதிகாரியாகத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சோமேட்டோ ஐபிஓ வெளியிடும் போது பல முக்கிய அதிகாரிகளுக்கு உயர் பதவி அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது தொடர்ந்து ஊழியர்கள் ராஜினாமா செய்து வருகின்றனர்.
மோஹித் குப்தா
குஞ்சன் படிதார்-க்கு முன்பு சோமேட்டோ நிறுவனத்தின் இணை நிறுவனராக இருந்த மோஹித் குப்தா சுமார் 4.5 வருடம் இந்த நிறுவனத்தில் பணியாற்றிய பின்பு தனது பதவியை ராஜினாமா செய்தார். மோஹித் குப்தா 2018 ஆம் ஆண்டில் சோமேட்டோ உணவு விநியோக பிரிவின் தலைவராகச் சேர்ந்தார். இதன் பின்பு 2021ல் ஐபிஓ-வுக்கு முன்பு இணை நிறுவனர் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.
ராகுல் கஞ்சூ
சோமேட்டோவின் புதிய முன்முயற்சிகள் பிரிவின் தலைவரும் முன்னாள் உணவு விநியோகத் தலைவருமான ராகுல் கஞ்சூ இந்த வார துவக்கத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
சித்தார்த் ஜாவர்
இதற்கு முன்பு சோமேட்டோ நிறுவனத்தின் இன்டர்சிட்டி லெஜெண்ட்ஸ் சேவை பிரிவின் தலைவரான சித்தார்த் ஜாவர் ராஜினாமா செய்து நிறுவனத்தை விட்டு வெளியேறியதாக அறிவித்தார்.
1 பில்லியன் டாலர் மார்க்
சோமேட்டோ நிறுவனம் வெளியிட்ட செப்டம்பர் காலாண்டு முடிவில் அட்ஜெஸ்ட் வருவாயாக 2,107 கோடி ரூபாய் அதாவது 1.05 பில்லியன் டாலர் என்ற 1 பில்லியன் டாலர் மார்க் அளவீட்டை முதல் முறையாக எட்டி வரலாற்று உச்சத்தைத் தொட்டுச் சாதனை படைத்துள்ளது. இது கடந்த வருட அளவீட்டை ஒப்பிடுகையில் 48 சதவீதம் வளர்ச்சி அடைந்து உள்ளது.


Click it and Unblock the Notifications