பெங்களூர் ரியல் எஸ்டேட் நாளுக்கு நாள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது, கர்நாடக அரசு பெங்களூர் நகரின் நிர்வாகத்தை 5 பிரிவுகளாக பிரித்து நகரின் உள்கட்டமைப்பை வேகமாக மேம்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால் பல பகுதிகள் தற்போது மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளது.
அப்படி பெங்களூருவின் கிழக்கு பகுதியில் அமைந்த குன்சூர் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போது பெங்களூர் நகரின் வீட்டு சந்தையில் மிகவும் பரபரப்பான இடமாக மாறியுள்ளது குன்சூர், இதற்கு முக்கியமான காரணம் கடந்த 4 வருடத்தில் இப்பகுதியில் ஏற்பட்ட நிலத்தின் விலை உயர்வு தான்.

புராப்இக்விட்டி என்ற நில ஆய்வு நிறுவனத்தின் தரவுகளின்படி, 2020இல் சதுர அடிக்கு ரூ.4,800 ஆக இருந்த வீட்டு மதிப்பு, 2024இல் ரூ.11,850 ஆக உயர்ந்துள்ளது, இது 146 சதவீதம் வளர்ச்சியை குறிக்கிறது. 2025இன் இரண்டாம் காலாண்டு வரை, இப்பகுதியில் 9,031 வீடுகள் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்த நிலையில் 7,635 வீடுகள் விற்பனையாகியுள்ள பெங்களூரின் முக்கிய ரியல் எஸ்டேட் பகுதியாக மாறியுள்ளது.
குன்சூர் பகுதியின் இருப்பிடம் தான் இதன் விலை உயர்வுக்கு முக்கியமான காரணியாக உள்ளது. ஆம், பெங்களூரு ஐடி மையங்களான வைட்டுஃபீல்டு, புருக்ஃபீல்டு, சர்ஜாபூர் சாலை மற்றும் ஆவுர்ட்டர் ரிங் சாலை போன்ற இடங்களுக்கு அருகாமையால் குன்சூர் உள்ளது. இதனால் ஐடி ஊழியர்கள் மத்தியில் மிகவும் பிடித்தமான பகுதியாக மாறியுள்ளது.
2024இல் மட்டும் குன்சூர் பகுதியில் 2,828 வீடுகள் விற்பனையாகி, 10 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது, இப்பகுதியில் வீடு மற்றும் நிலம் வாங்கியவர்கள் பெரும்பாலும் ஐடி மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவன ஊழியர்கள் தான். 2025இன் முதல் ஆறு மாதங்களில் 1,100 வீடுகள் விற்பனையாகி பெங்களூரின் முக்கிய பகுதியாக ரியல் எஸ்டேட் பகுதியாக உயர்ந்துள்ளது.
குன்சூர் பகுதியை சுற்றி முக்கியமான உள்கட்டமைப்பு வசதிகளும் உள்ளது, பெரிஃபெரல் ரிங் சாலை (PRR), குன்சூர் பால்யா சாலை மற்றும் வர்த்தூர்-சர்ஜாபூர் சாலை போன்ற இணைப்பு சாலைகள், இப்பகுதியை பெங்களூரு போக்குவரத்து வலையமைப்புடன் இணைத்துள்ளன.


Click it and Unblock the Notifications