சமீபத்தில் டெல் நிறுவனத்தில் பணிபுரிந்து, தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு, சொந்தமாக ஒரு நிறுவனம் தொடங்கிய போது தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து ஒரு டெக்கி X-இல் பகிர்ந்துள்ளார். டெல் நிறுவனத்தில் அவர் பணியாற்றிய காலத்தில் அவரது சக ஊழியர்கள் யாரும் ரிசைன் செய்கையிலும் கூட தனக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று வருத்தத்துடன் பதிவிட்டிருக்கிறார்.
ப்ரொபைல் கிராஃப்ட் என்ற ரெஸ்யூம் தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கியுள்ள ஷஷாங்க் ரஸ்டாகி, தன்னுடன் பணிபுரிந்த சக ஊழியர்கள் ரிசைன் செய்யும் போதும் தனக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று தனது X பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இதற்கெல்லாம் காரணம் அவர்களின் பொறாமை தான் என்றும் கூறியிருக்கிறார்.

தனது X பக்கத்தில் "டெல்லியில் என்னுடன் பணிபுரிந்த சக ஊழியர்கள் என்னை வாழ்த்தவில்லை. பொறாமைக்கு ஒரு முகம் இருந்தால் இப்படித்தான் இருக்கும்," என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இவர் டெல் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது பார்ட் டைமாக ரெஸ்யூம் தயார் வருமானம் ஈட்டி வந்துள்ளார். அதன் பிறகு டெல் நிறுவனத்தில் இருந்து வெளியேறி, ரெஸ்யூம் தயார் செய்வதை ஒரு முழு நேர தொழிலாக மாற்ற முடிவு செய்துள்ளார். அவருடைய லிங்க்டின் விவரங்களின் அடிப்படையில் அவர் டெல் நிறுவனத்தில் சுமார் 2 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார் என்று தெரிகிறது.
இவருடைய சோகப் பதிவிற்கு பலரும் கருத்து தெரிவிக்க தொடங்கினர். சிலர் அவருடைய தொழில் முனைவோர் பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர். அவருடைய சக ஊழியர்கள் அல்லாத நபர்களும் சேர்ந்து இந்த டெக்கியின் பதிவிற்கு ஆதரவு வழங்கினர்.
ஒரு X பயனர், டெல் நிறுவனத்தில் தான் பயன்படுத்தும் கீபோர்டில் இருந்து மெசேஜ்-ஐ டைப் செய்வதாக தெரிவித்து, பாராட்டுக்கள் ஷஷாங்க்! என்று பதிவிட்டிருந்தார். மற்றொரு X பயனர், "நான் என்னுடைய தொழிலில் மிக வேகமாக வளர்ந்து வந்தேன். அப்போது என்னுடைய நெருங்கிய நண்பர்கள் கூட எனக்கு வாழ்த்து தெரிவித்ததே இல்லை. அதன் பிறகு சிலர் என்னுடன் பேசுவதையே நிறுத்திவிட்டனர். பின்னர் நான் திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றேன். அப்போது மீதி இருந்த நண்பர்களின் தொடர்பும் நின்று விட்டது", என்று ஒரு பயனர் கருத்து தெரிவித்திருந்தார்.
சிலர் ஷஷாங்கின் பதிவுக்கு விமர்சனங்களையும் முன்வைத்தனர். உங்களுடைய ரெஸ்யூமில் ப்ரொபஷனலிசம் என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது. அதை என்னால் பார்க்கவே முடியவில்லை, என்று ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார்.
ஷஷாங்கின் போஸ்ட்-டிற்கு ஒரு சிலர் சக ஊழியர்களின் ஆதரவு எவ்வளவு முக்கியம் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் பாராட்டு தெரிவித்திருந்தனர். மறுபுறம் தொழில் வாழ்க்கையில் எப்படிப்பட்ட அணுகுமுறை அவசியம் என்பதை சிலர் சுட்டிக்காட்டினர்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications