இந்தியாவில் அரசாங்க வேலைகளை தவிர்த்து அனைத்து தனியார் வேலைகளுமே பணி பாதுகாப்பற்றவையாக மாறிவிட்டன. அதுவும் ஐடி துறையில் நீங்கள் வேலை செய்கிறவர் என்றால் எப்போதுமே உங்களுடைய தலையின் மேல் லே ஆஃப் என்ற கத்தி தொங்குகிறது. இதனால் தான் வேலைக்கு செல்லக்கூடிய பல்வேறு இளைஞர்கள் மத்தியிலும் சுயமாக ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் தற்போது அதிகரித்து இருக்கிறது.
நம்முடைய பொறுப்புகள் அந்த கனவினை நிறைவேற்ற விடுவதில்லை அப்படி இருந்தாலும் சிலர் ரிஸ்க் எடுத்து தங்களுடைய கனவை எப்படியாவது நிறைவேற்றுகிறார்கள். அப்படி ஒரு வெற்றி கதை தான் நாம் பார்க்க போகிறோம். மாதத்திற்கு 4.16 லட்சம் ரூபாய் அதாவது ஒரு ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்த வேலையை கைவிட்டு மோமோஸ் தொழிலில் கால் பதித்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் இந்த இளைஞர்.

சாகேத் சவுரப் குர்குவான் பகுதியை சேர்ந்தவர். வாவ் பிளெக்ஸ் என்ற நிறுவனத்தில் பிராடெக்ட் மேனேஜராக வேலை பார்த்து வந்தவர். அங்கே இவருக்கு ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய் அதாவது மாதத்திற்கு 4 லட்சம் ரூபாய் சம்பளம். இவர் 2023 ஆம் ஆண்டு திடீரென தன்னுடைய வேலையை விட்டார். நான்கு லட்சம் ரூபாய் சம்பளம் வந்த வேலையை விடுத்து சாலையோர மோமோஸ் கடை போட்டு இருக்கிறார். உடன் இருந்த அனைவரும் அவரை அப்போது திட்டினார்களோம்.
யாராவது இப்படி ஒரு கை நிறைய சம்பளம் வரக்கூடிய வேலையை விடுவார்களா என அறிவுரை வழங்கினார்களாம். ஆனால் அதை கண்டு கொள்ளாமல் தொழிலை திறம்பட நடத்தி மேலே வரவேண்டும் என்பது மட்டுமே தன்னுடைய நோக்கமாக இருந்தது என கூறுகிறார். சாலையோர கடையாக தொடங்கிய இவருடைய மோமோஸ் மாஃபியா தற்போது நாட்டின் ஏழு மாநிலங்களில் franchise மாடல் அடிப்படையில் பல்வேறு கடைகளை நிறுவி இருக்கிறது.

இவர் தொழில் தொடங்கிய இரண்டரை ஆண்டுகளிலேயே 5 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி இருக்கிறார். ஒரு முறை தானும் தன்னுடைய குடும்பத்தினரும் உணவருந்துவதற்காக வெளியே சென்ற போது ஒரு சிறிய கடையில் மோமோஸுக்கு அதிக டிமாண்ட் இருப்பதை பார்த்தாராம். அப்போதுதான் ஏன் நாம் சொந்தமாக இதை ஒரு தொழிலாக எடுத்து செய்யக்கூடாது என்ற எண்ணம் தோன்றியதாக தெரிவிக்கிறார். சிறிய ரோட்டோர கடையை தொடங்கியதாக கூறுகிறார்.
குர்குவானின் இன்போடெக் பகுதியில் சிறிய மோமோ விற்பனை செய்யும் தள்ளுவண்டி கடையை தொடங்கியிருக்கிறார். அது ஒரு நாளைக்கு 12 ஆயிரம் ரூபாய் வருமானம் தந்ததாம். இதனை எனவே இதனை franchise மாடல் அடிப்படையில் மாற்றி மோமோஸ் மாஃபியா என்ற பெயரில் தொழிலாகவே தொடங்கி இருக்கிறார். ஐந்து பேர் கொண்டு இந்த தொழிலை தொடங்கி இருக்கின்றனர்.
தற்போது 7 மாநிலங்களில் இவர்களின் கடைகள் செயல்படுகின்றன. 20 கடைகள் மற்றும் 40 தள்ளு வண்டிகளில் தொழில் நடைபெறுவதாக கூறுகிறார். முதல் ஆண்டில் தன்னுடைய நிறுவனம் 16 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டியதாகவும் அது படிப்படியாக அது உயர்ந்து இதுவரை 5 கோடி ரூபாய் வருமானத்தை பெற்று தந்திருப்பதாகவும் கூறுகிறார்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications