நாடு முழுவதும் இன்று குருநானக் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. குறிப்பாக வட இந்திய மாநிலங்களில் குருநானக் ஜெயந்தி பிரசித்தி பெற்றது. இந்த நாளையொட்டி இன்று இந்திய பங்குச்சந்தைகள் செயல்படுமா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.
குருநானக் தேவ் சீக்கிய மதத்தை நிறுவியர் மற்றும் 10 சீக்கிய குருக்களுள் முதன்மையானவர். அவருடைய 556ஆவது ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. சீக்கியர்கள் பலரும் இந்த நாளில் அட்டாரி வாகா எல்லை கடந்து பாகிஸ்தான் சென்று அவருடைய பிறப்பிடத்தில் வழிபடுவார்கள்.

குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு இன்று மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தை ஆகிய இரண்டுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பங்குச்சந்தைகள் நாளைய தினம் வழக்கம் போல செயல்பட தொடங்கும். அதேபோல எம்சிஎக்ஸ் தளத்திலும் இன்று வர்த்தகம் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்திய பங்குச்சந்தைகளுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான விடுமுறைக்கான காலண்டரின் படி நவம்பர் மாதத்தில் இருக்கக்கூடிய ஒரே ஒரு விடுமுறை நாள் இதுவாகும். சீக்கிய மத குருக்களில் ஒருவரான குருநானக்கின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் ஐந்தாம் தேதி குருநானக் ஜெயந்தி என்பது கொண்டாடப்பட்டு வருகிறது.
2025 ஆம் ஆண்டில் வார இறுதி நாட்கள் தவிர்த்து பங்குச் சந்தைகள் மொத்தம் 14 நாட்கள் விடுமுறை பெற்றுள்ளன. இன்றைய விடுமுறையை தொடர்ந்து அடுத்த கட்டமாக கிறிஸ்மஸ் பண்டிகை ஒட்டி டிசம்பர் 25ஆம் தேதி பங்குச் சந்தைகள் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்குச்சந்தைகள் மட்டுமல்ல குருநானக் ஜெயந்தி பண்டிகையை முன்னிட்டு இந்தியாவின் சில மாநிலங்களில் வங்கிகள் இன்றைய தினம் செயல்படாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மிசோரம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ,ஒடிசா, சண்டிகர் உத்தராகண்ட், தெலுங்கானா, அருணாச்சலப் பிரதேசம் ,ராஜஸ்தான் ,ஜம்மு ஸ்ரீநகர், உத்தரப்பிரதேசம், டெல்லி, மேற்குவங்கம் ,ஜார்கண்ட் , இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் குருநானக் ஜெயந்தி மற்றும் பௌர்ணமி உள்ளிட்டவற்றை முன்னிட்டு இன்றைய தினம் வங்கிகள் இயங்காது.
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் வழக்கம் போல வங்கிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ரிசர்வ் வங்கி தேசிய விடுமுறை நாட்கள் என மட்டுமில்லாமல் அந்த மாநிலங்களுக்கான பண்டிகை நாட்களில் விடுமுறை வழங்குவதால் மாநிலங்களுக்கு இடையே வங்கி விடுமுறை நாட்களில் மாற்றம் காணப்படுகிறது.
More From GoodReturns

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications