சென்னை: இந்திய பொருளாதார வளர்ச்சியில் பெரும் பகுதி பங்கீட்டை தென்னிந்திய மாவட்டங்கள் கொண்டிருக்கும் வேளையில், தமிழ்நாடு இதில் அதிகப்படியான பங்கீட்டைக் கொண்டு உள்ளது. டெக்ஸ்டைல், ஆட்டோமொபைல், எலக்ட்ர்ரானிக்ஸ் என பல துறையில் தமிழ்நாடு மாஸ் காட்டி வருகிறது.
குறிப்பாக எலக்ட்ரிக் வாகன சந்தையில் தமிழ்நாடு 70 சதவீத உற்பத்தி வர்த்தகத்தைக் கைப்பற்றி ஆட்டோமொபைல் துறையில் முன்னோடியாக உள்ளது. இந்த நிலையில் வடநாட்டு நிறுவனம் தமிழ்நாட்டைத் தேடி வந்துள்ளது.

குருகிராம்-ஐ தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ரிகோ ஆட்டோ இண்டஸ்ட்ரீஸ், அலுமினியம் மற்றும் இரும்பு உள்ளிட்ட உலோகங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் இயந்திர பாகங்கள் மற்றும் கட்டமைப்புகளை உற்பத்தி செய்வதில் கைதேர்ந்த நிறுவனம் ஆகும்.
இந்த நிறுவனம் OEM இயந்திர பாகங்களை வழங்குநராக உள்ளது, தென்னிந்தியாவில் உள்ள வாகன உற்பத்தி துறை ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், இப்பகுதியில் இருக்கும் ஆட்டோமொபைல் நிறுவனங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, ஓசூரில் உள்ள சூளகிரியில் இருக்கும் சிப்காட் தொழிற்பூங்காவில் 12.31 ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துள்ளது.
ரிகோ ஆட்டோ இண்டஸ்ட்ரீஸ் இந்த வாரம், தனது முதலீட்டாளர்களுக்குக் கொடுத்த தகவல்கள் படி , இந்த நிலக் கையகப்படுத்துதல் குறித்த விபரத்தைத் தெரிவித்தது. மேலும் நிறுவனத்தின் எதிர்கால விரிவாக்கத் திட்டங்களுக்கான ஓசூர் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும், குறிப்பாக, தென்னிந்தியாவில் உள்ள வாகன உற்பத்தியாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் இந்த தொழிற்சாலை அதிகப்படியான கவனத்தைச் செலுத்தும் எனத் தெரிவித்துள்ளது.
ரிகோ ஆட்டோ இண்டஸ்ட்ரீஸ் வெற்றிகரமாகத் தொழிற்சாலையை அமைக்க நிலத்தைக் கையகப்படுத்தியுள்ள வேளையில், ரிகோ ஆட்டோ தொழில்நுட்பம் நிறுவனம், 2023-24 நிதியாண்டில் 23.7% லாப வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
2023-ம் ஆண்டில் ரூ.51 கோடியாக இருந்த லாபம், 2024-ம் ஆண்டில் ரூ.39 கோடியாகக் குறைந்துள்ளது. இதேபோல், நிறுவனத்தின் வருமானமும் 6.3% சரிந்து, ரூ.2,322 கோடியிலிருந்து (FY23) ரூ.2,174 கோடியாக (FY24) குறைந்துள்ளது. நிறுவனத்தின் மொத்த வருவாயில் 79% உள்நாட்டு சந்தையிலிருந்தும், மீதமுள்ள 21% ஏற்றுமதியிலிருந்தும் கிடைக்கிறது.
ரிகோ ஆட்டோ இண்டஸ்ட்ரீஸ்-ன் லாபம், வருவாய் குறைய முக்கிய காரணம், இந்நிறுவனத்தின் ஏற்றுமதி வாடிக்கையாளர்களான ஜி.கே.என் மற்றும் பி.எஸ்.ஏ ஆகிய நிறுவனங்களுக்கான ஒப்பந்தம் முன்கூட்டியே முடிவடைந்ததே காரணம் என்று நிறுவன நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் இழந்த வர்த்தகத்தை மாருதி சுசூகி மற்றும் டோயோட்டா நிறுவனங்களுடனா வர்த்தகத்தின் மூலம் பெற இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இந்த நிலையில் ரிகோ ஆட்டோ இண்டஸ்ட்ரீஸ் ஓசூர் விரிவாக்கம் மூலம் தமிழ்நாடு மற்றும் தென்னிந்தியாவின் பிற மாநிலத்தின் ஆட்டோமொபைல் துறை வர்த்தகத்தைக் கைப்பற்ற முக்கிய காரணமாக உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications