குருகிராம்: மின்சார கட்டணம் அதிகரித்து விட்டது என்று செய்தித்தாள்களில், இணையதளங்களில், அல்லது பிறர் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். ஏன் நமக்கு கூட அதிகமான மின் கட்டணம் சில நேரங்களில் வந்திருக்கும். ஆனால் தற்போது ஒருவர் அவருக்கு வந்த மின் கட்டணத்தை பார்த்துவிட்டு ஷாக் ஆகி மீண்டும் மெழுகுவர்த்தியை உபயோகிக்க போகிறேன் என்று கூறி X தளத்தில் போஸ்டைப் பதிவிட்டுள்ளார். அவரின் சுவாரசியக் கதையை இந்தப் பதிவில் பார்ப்போம்.
குருகிராமைச் சேர்ந்த தலைமை நிர்வாக அதிகாரி ஜஸ்வீர் சிங் அவருடைய இரண்டு மாத மின்சார கட்டணத்தை ஸ்கிரீன்ஷாட் எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். அவருக்கு மொத்தம் ரூ.45,000-க்கு மின் கட்டணம் வந்துள்ளது. இது மிகவும் அதிர்ச்சியூட்டும் தொகையாக உள்ளதால் ஆன்லைன் பயன்பாட்டாளர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால் பல சர்ச்சைகளும் எழுந்துள்ளது.

பேடிஎம் (Paytm) மூலம் மின்சாரத்திற்காக ரூ. 45,491 ரூபாய் செலுத்தப்பட்ட கட்டணத்தை ஸ்கிரீன்ஷாட் செய்து அவருடைய அதிகாரப்பூர்வ X தளத்தில் பகிர்ந்துள்ளார். மே 24-ஆம் தேதி அன்று, அவர் கட்டணத்தை செலுத்தியதாகக் ஸ்கிரீன்ஷாட்டில் காட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டில் சிங் "இப்போது மெழுகுவர்த்திக்கு மாற நினைக்கிறேன்" என்று நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். இந்த நகைச்சுவையான கருத்து சலசலப்பை உண்டாக்கியுள்ளது . இதனால் ஆச்சரியப்பட்ட பயனர்கள் அவர்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். பலர் இந்த போஸ்டை போலியானது என்றும் கூறி வருகின்றனர்.
அந்த போஸ்டில் பயனர்கள் பகிர்ந்த கருத்துக்கள்: சிங் பகிர்ந்த போஸ்டின் மூலம் ஒரு பெரிய விவாதம் தொடங்கியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். பலர் அவர்களின் ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் அது எப்படி இவ்வளவு அதிகமான மின் கட்டணம் வரும் என்ற கேள்வியையும் சிலர் எழுப்புகின்றனர். சில பயனர்கள் அவருடைய சொந்த அனுபவங்களை பகிர்ந்துள்ளனர்.
இதில் பலர் சிங்கின் போஸ்டிற்கு ஆதரவளிக்கின்றனர்.அதிகப்படியான மின்கட்டணத்திற்கு எதிராக பலர் கேள்வி எழுப்புகின்றனர். சிங்கின் எதிர்பாராத இந்த வெளிப்பாடு, பலர் அதிக மின்சார கட்டணத்தை பற்றி பேசுவதற்கு வழிவகுத்துள்ளது. மேலும் அதிக மின்சார கட்டணத்தை பற்றிய பிரச்சனையை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. அதுமட்டுமின்றி இது போன்ற பிரச்சனைகளை எதிர்கொண்ட பலரையும் தொடர்புபடுத்தி உள்ளது. இதை பலர் நம்ப மறுத்து அவர்களுடைய எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.
மின்சார கட்டணங்கள் அதிகரித்து வருவது அனைவரையும் கவலைப்படுத்தும் விஷயமாக இருந்து வருகிறது. மின் கட்டணத்தை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை நாம் கடைப்பிடிப்பது அவசியம். எரிசக்தியை சிக்கனமாக பயன்படுத்துவதன் மூலம் மட்டுமே மின்சார கட்டணத்தை குறைக்க முடியும்.
இந்தப் பதிவு ஜஸ்வீர் சிங் மின்சார கட்டணத்தை உறுதிப்படுத்தவில்லை. இது சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலை அடிப்படையாகக் கொண்டது.


Click it and Unblock the Notifications