அதானி குழுமத்தை சுற்றி பல பிரச்சனைகள் இருக்கும் வேளையில் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அதானி குழுமம் குறித்த கேள்விகள், பேச்சுக்கள் மூலம் கடும் அமளியாகவே உள்ளது.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி லோக்சபாவில் மும்பை விமான நிலையத்தைச் சிபிஐ மற்றும் இடி போன்ற ஏஜென்சிகளைப் பயன்படுத்தி ஜிவிகே நிறுவனத்திடம் இருந்து பறிக்கப்பட்டு, இந்திய அரசால் அதானிக்கு வழங்கப்பட்டது என்று குற்றம் சாட்டினார்.
இதற்கு ஜிவிகே நிறுவனத்தின் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது.
மும்பை விமான நிலையம்
மும்பை விமான நிலையத்தை விற்க அதானி குழுமத்திலோ அல்லது வேறு யாரிடமோ எந்தவித அழுத்தம் கொடுக்கப்படவில்லை என்று ஜிவிகே குழுமத்தின் துணைத் தலைவர் சஞ்சய் ரெட்டி தெரிவித்துள்ளார்.
ஜூலை 2021
ஜூலை 2021ல் மும்பை விமான நிலையத்தின் நிர்வாகத்தை ஜிவிகே குழுமத்திடம் இருந்து அதானி குழுமம் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சஞ்சய் ரெட்டி NDTV-க்குக் கொடுத்த பேட்டியில் மும்பை விமான நிலையத்தை விற்க அதானி குழுமத்திலோ அல்லது வேறு யாரிடமோ எந்தவித அழுத்தம் கொடுக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
ஜிவிகே குழுமம்
ஜிவிகே குழுமத்தின் ஏர்போர்ட் வர்த்தகத்திற்கு நிதி திரட்டும் பணியில் இருந்த நேரத்தில் தான் கௌதம் அதானி தங்களை அணுகியதாகவும், ஏர்போர்ட் வர்த்தகத்தில் அதிகப்படியான ஆர்வம் இருப்பதாகத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து ஜிவிகே குரூப் அதானி குழுமத்திடம் ஒப்பந்தம் செய்தோம் என ஜிவிகே குழுமத்தின் துணைத் தலைவர் சஞ்சய் ரெட்டி இப்பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சஞ்சய் ரெட்டி
மேலும் கௌதம் அதானி ஒரு மாதத்தில் இந்த ஒப்பந்தத்தை முடிப்பதாக உறுதி அளித்தார், இது மிகவும் முக்கியமானதாக எங்களுக்கு விளங்கியது. இதன் மூலம் எங்களுடைய முடிவு அனைத்தும் நிறுவனத்தின் நலனுக்காகத் தான் எனவும் சஞ்சய் ரெட்டி இப்பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஹிண்டன்பர்க் ரிசர்ச்
ஹிண்டன்பர்க் ரிசர்ச் அமைப்பு அதானி குழுமம் குறித்துப் பல்வேறு குற்றச்சாட்டுகள் அடுக்கி அறிக்கை வெயிட்ட காரணத்தால் அதானி குழுமத்தின் பங்குகள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டது. இதன் மூலம் அதானி குழுமத்திற்குக் கடன் கொடுத்த அனைத்து வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் பங்கு முதலீட்டாளர்களின் நெருக்கடியை எதிர்கொண்டது.
சக்திகாந்த தாஸ் விளக்கம்
இந்த நிலையில் தான் இன்று ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்கள் சந்திப்பின் போது தற்போது சந்தையில் நிலவும் அனைத்து கேள்விக்கான அடிப்படையே அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு சரிவது தான். ஆனால் வங்கிகள் ஒரு நிறுவனத்தின் சந்தை மதிப்பு வைத்து கடன் அளிப்பது இல்லை. ஆனால் வங்கிகள் ஒரு நிறுவனத்தின் பலம் மற்றும் அடிப்படையை நம்பி கடன் அளிக்கிறது.
இந்திய வங்கி அமைப்பு
தற்போது இந்திய வங்கி அமைப்பின் பலம், அளவு ஆகியவை சிறப்பாக உள்ளது. ஆர்பிஐ ஏற்கனவே அதானி குழுமம் குறித்து அறிக்கை வெளியிட்டு உள்ளது. தற்போது கூடுதலாகப் பேச எதுவுமில்லை, மேலும் ஒரு தனிப்பட்ட விஷயத்தைப் பொதுத்தளத்தில் ஆர்பிஐ எப்போதும் விவாதிக்காது என ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications