அமெரிக்க H-1B விசா: ஐடி ஊழியர்கள் கண்ணீர்.. ஐடி நிறுவனங்களுக்குப் பெரிய செக்..!

அமெரிக்க அரசுக்கு ஒவ்வொரு வருடமும் குவியும் விசா விண்ணப்பத்தைச் சமாளிக்க முடியாமல், புது புது கட்டுப்பாடுகளை விதிக்க துவங்கியுள்ளது. இதில் முக்கியமாக விசா கட்டணத்தில் அறிவிக்கப்பட்ட கட்டண உயர்வு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

H-1B விசா கட்டணங்களில் அறிவிக்கப்பட்ட கடுமையான உயர்வு, இந்திய IT துறை சேவை நிறுவனங்கள் தொழில் செய்வதை மிகவும் கடினமாக்கி, அவர்களின் லாப அளவில் பாதிக்கும் அளவிற்கு நிலைமை உருவாகியுள்ளது என ஐடி துறை வல்லுனர்களும், ஈமிகிரேஷன் நிபுணர்களும் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்க H-1B விசா: ஐடி ஊழியர்கள் கண்ணீர்.. ஐடி நிறுவனங்களுக்குப் பெரிய செக்..!


இந்த கட்டண உயர்வு மூலம் ஒரு விசா விண்ணப்பத்திற்கு எவ்வளவு செலவாகும் என கணக்கிடப்படு உள்ளது. இதைப் பார்க்கும் போது ஐடி ஊழியர்களின் அமெரிக்கக் கனவு காற்றில் பறந்து விடுமா என்ற அச்சம் நிலவுகிறது.

அமெரிக்காவில், ஐடி துறையில் சிறப்புத் திறமைகளைக் கொண்ட பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுவதால், அந்நாட்டில் இயங்கி வரும், சேவை அளித்து வரும், இந்திய IT துறை நிறுவனங்கள், ஒவ்வொரு வருடமும் 10000-த்திற்கும் அதிகமான இந்தியத் தொழில் வல்லுநர்களை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல, H-1B விசாவை பெரிதும் நம்பியுள்ளது.

இதேவேளையில் இந்திய ஐடி ஊழியர்களும் தங்களுடைய அமெரிக்கக் கனவை நினைவாக்கிக்கொள்ள ஹெச்1பி விசா கிடைத்துவிடாதா என தவம் கிடக்கின்றனர்.

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம், அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்றச் சேவைகள் துறை (USCIS) விசா கட்டணங்களைப் பெரிய அளவில் உயர்த்தியது. இந்த கட்டண உயர்வுக்கு 3 முக்கிய காரணங்கள் உள்ளது.

ஒன்று - விசா விண்ணப்பம் லாட்டரி முறையில் தேர்வு செய்யப்படுவதால் வாய்ப்புகளை அதிகரிக்க ஒருவர் 2 விண்ணப்பம் சமர்ப்பிக்கின்றனர். இரண்டு - லாட்டரி முறை சேர்வில் அதிகப்படியான தேர்வுகளைப் பெற வேண்டும் என்பதற்காக ஒரு நிறுவனத்திலிருந்து அதிகப்படியான விண்ணப்பங்கள் குவிக்கப்படுகிறது. மூன்று - அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் USCIS இந்த அதிகப்படியான விசா விண்ணப்பத்தைக் கையாள முடியவில்லை.

இதேவேளையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்த ஹெச்1பி விசா மற்றும் லாட்டரி முறையில் சிறப்பு திறன் அல்லாத, ஐடி சேவையை கையாளும் அளவிற்கான திறன் கொண்ட ஊழியர்கள் அமெரிக்கா வருவதாகவும், இதன் மூலம் நிறுவனங்கள் அதிகப்படியான லாபத்தைப் பெறுவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைக்கப்பட்டு வந்தது.

இந்த பிரச்சனைகள் அனைத்தையும் சமாளிக்க விசா கட்டணத்தை உயர்த்தியது. இதன் மூலம் நிறுவனங்கள் தேவையில்லாமல் அதிக விண்ணப்பங்களை சமர்ப்பிக்காது, திறன் குறைவான ஊழியர்களை பணியில் அமர்த்துவது குறையும் என்பது அமெரிக்க அரசு நம்புகிறது.

H-1B விசாக்களுக்கு, பதிவுக் கட்டணத்தை $10 இல் இருந்து 2050% அதிகரித்து $215 ஆகவும், விண்ணப்பக் கட்டணத்தை $460 இல் இருந்து 70% அதிகரித்து $780 ஆகவும் உயர்த்தியுள்ளது. மேலும், H-1B மற்றும் பிற மனுக்களைத் தாக்கல் செய்யும் போது $600 asylum fee இணைத்துள்ளது. இந்த asylum fee-க்கு H-1B போன்ற விசாவுடன் எந்த தொடர்பும் இல்லை என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

"கட்டணத்தில் கடுமையான அதிகரிப்பும், கூடுதலாக asylum fee ஒரே நேரத்தில் சேர்க்கப்பட்டுள்ளதால் இந்திய ஐடி நிறுவனங்கள் அமெரிக்காவில் வர்த்தகம் செய்வது மிகவும் கடினமாகிறது," என்று நாஸ்காம் (Nasscom) தொழில்துறை சங்கத்தின் துணைத் தலைவர் சிவேந்திர சிங் தெரிவித்தார்.

இந்த விசா கட்டண உயர்வு காரணமாக, தொடக்க வேலைவாய்ப்பு அல்லது வேலை நீட்டிப்புக்கான H-1B விசாவுக்கு மனு தாக்கல் செய்யும் ஒவ்வொரு முறையும், நிறுவனங்கள் சட்ட மற்றும் அரசு கட்டணங்களாக $33,000 க்கும் மேற்பட்ட தொகையைச் செலவிட வேண்டியிருக்கும் என்று அவர் கூறினார். இத்தகவல் தேசிய அமெரிக்கக் கொள்கை நிறுவனத்தின் (National Foundation for American Policy) கணக்கீட்டின் மூலம் தெரிய வந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+