அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம், ஹெச்-1பி (H-1B) விசாவுக்கான கட்டணத்தை அதிரடியாக உயர்த்தி அறிவித்துள்ளதால், அமெரிக்க தொழில்நுட்பத் துறையில் பெரும் குழப்பமும், பீதியும் நிலவுகிறது. இந்த புதிய விசா விதிமுறை திருத்தத்தின்படி, புதிய ஹெச்-1பி விசா விண்ணப்பத்திற்கான கட்டணம் 10,000 அமெரிக்க டாலரில் இருந்து 1,00,000 டாலராக (இந்திய மதிப்பில் சுமார் ரூ.83 லட்சம்) உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான், அமெரிக்காவின் மிகப் பெரிய வங்கிகளில் ஒன்றான ஜே.பி. மோர்கன் & சேஸ் (JPMorgan and Chase), டிரம்ப் அரசின் இந்த முடிவால், அமெரிக்காவுக்கு வரும் குடியேறிய தொழிலாளர்களுக்கான பணி அங்கீகாரங்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும் என எச்சரித்துள்ளது.

மாதந்தோறும் 5,500 பணி அங்கீகாரங்கள் ரத்து: ப்ளூம்பெர்க் (Bloomberg) அறிக்கையின்படி, ஜே.பி. மோர்கன் பொருளாதார வல்லுநர்களான அபீல் ரெய்ன்ஹார்ட் மற்றும் மைக்கேல் ஃபெரோலி ஆகியோர், இந்த புதிய கொள்கை மாற்றத்தால் மாதத்திற்கு 5,500 பணி அங்கீகாரங்கள் வரை ரத்து செய்யப்படலாம் என்று மதிப்பிட்டுள்ளனர். இந்த குறைப்பு, முக்கியமாக தொழில்நுட்ப நிறுவனங்களையும், இந்தியாவில் இருந்து வரும் திறமையான குடியேற்ற தொழிலாளர்களையும் பாதிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க ஒட்டுமொத்த தொழிலாளர் சந்தையுடன் ஒப்பிடுகையில் ரத்து செய்யப்படும் அங்கீகாரங்களின் எண்ணிக்கை சிறியதாக இருந்தாலும், வெளிநாட்டுத் திறமையை அதிகம் நம்பியிருக்கும் துறைகளில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய தொழில்நுட்பத் தொழிலாளர்கள் பாதிப்பு : ப்ளூம்பெர்க் அறிக்கையில், 2024ஆம் நிதியாண்டில் ஹெச்-1பி ஒப்புதல்களில் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமாக கணினி தொடர்பான பணிகளுக்கே வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்புதல்களில் சுமார் 71% இந்திய நாட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால், இந்த புதிய கட்டண உயர்வால் மிக அதிகமாக பாதிக்கப்படக்கூடிய குழுவாக இந்தியர்கள் உள்ளனர்.
கடந்த ஆண்டு புதிய வேலைவாய்ப்புக்காக ஒப்புதல் அளிக்கப்பட்ட 1,41,000 ஹெச்-1பி மனுக்களில், சுமார் 65,000 விண்ணப்பங்கள் வெளிநாடுகளில் இருந்து செயலாக்கப்பட்டவை. இந்த 65,000 விண்ணப்பங்களே 6 இலக்கக் கட்டண உயர்வால் மிகவும் பாதிக்கப்படக்கூடியவை.
இதுகுறித்து ரெவெலியோ லேப்ஸின் (Revelio Labs) மூத்த பொருளாதார நிபுணர் லௌஜைனா அப்தெல்வஹேத் கூறுகையில், இந்த கட்டண உயர்வு "ஹெச்-1பி அமைப்பையே சீர்குலைப்பதற்குச் சமம்" என்று எச்சரித்துள்ளார். திறமையான வெளிநாட்டுத் தொழிலாளர்களை நம்பியுள்ள அமெரிக்க நிறுவனங்களில் ஆண்டுதோறும் 1,40,000 புதிய வேலைகளை இந்த கட்டண உயர்வு நீக்கக்கூடும் (மாதத்திற்கு சுமார் 10,000 வேலைகள்) என்றும் கூறப்பட்டுள்ளது.
புளூம்பெர்க் பொருளாதார வல்லுநர்களின் கூற்றுப்படி, இந்தக் கட்டண உயர்வின் உடனடி விளைவு என்னவென்றால், விசாக்கள் அதிக சம்பளம் உள்ள தொழில்நுட்பம், நிதி மற்றும் சுகாதாரப் பணிகளை நோக்கி நகரும். அதேசமயம், கல்வி போன்ற துறைகளில் உள்ள குறைந்த சம்பளம் உள்ள பதவிகள் பாதிக்கப்படும்.
இந்த கட்டணம் புதிய விண்ணப்பங்களுக்கு மட்டுமே பொருந்தும், புதுப்பித்தல்களுக்கு அல்ல என்பதால், தற்போதுள்ள ஹெச்-1பி தொழிலாளர் சக்தி நிலையானதாக இருக்கும். இருப்பினும், இதன் தாக்கம், உள்நாட்டில் சாத்தியமில்லாத வேலைகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கும் வழிவகுக்கும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications