அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டிப்போடும் விவேக் ராமசாமியின் புகழ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மட்டும் அல்லாமல் பெரும் முதலீட்டாளர்கள், தொழிலதிபர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளார். விவேக் ராமசாமி இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பதால் இவருடைய பேச்சுகளும், முடிவுகளும் மக்களால் அதிகம் கவனிக்கப்படுகிறது.
இந்த நிலையில் கோடிக்கணக்கான இந்தியர்களின் கனவு நினைவாவதை தடுக்கும் விதமாக அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் பணியாற்ற அனுமதிக்கும் ஹெச்1பி விசா அளிக்கும் முக்கியமான லாட்டரி முறையை மொத்தமாக நீக்க திட்டமிட்டு இருப்பதாக அறிவித்துள்ளார். இவருடைய பேச்சு இந்திய மக்களுக்கும், அமெரிக்கா செல்ல வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் இந்தியர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அமெரிக்காவில் 2024 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடக்கும் வேளையில் டெமாக்ரடிக் கட்சி சார்பாக மீண்டும் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் கூட்டணி மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டிப்போட உள்ளனர். இதுவே எதிர்கட்சியான ரிபப்ளிக் கட்சி சார்பாக பலர் அதிபர் தேர்தலுக்கு போட்டிப்போட உள்ளனர். ரிபப்ளிக் கட்சி கட்சியில் 4 இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் அதிபர் பதவிக்கு நிற்க போட்டிப்போட்டு வருகின்றனர்.
ரிபப்ளிக் கட்சி கட்சி சார்பாக மீண்டும் டொனால்டு டிரம்ப் அதிபர் தேர்தலில் போட்டிப்போட திட்டமிட்டு வரும் வேளையில், இக்கட்சியில் விவேக் ராமசாமி-யின் ப்ரொபைல் மற்றும் மக்கள் மத்தியிலான வரவேற்பும் மிகப்பெரிய அளவில் உள்ளது.
இதில் முக்கியமாக மத்தியில் தமிழ் பேசும் குடும்பம், கேரளாவை சேர்ந்த பெற்றோர்களுக்கு அமெரிக்காவில் பிறந்தவர் தான் விவேக் ராமசாமி. அமெரிக்காவில் முதல் தலைமுறை இந்தியரான விவேக் ராமசாமிக்கு அந்நாட்டு மக்களுக்கு இருக்கும் அனைத்து உரிமையும் உள்ளது.
விவேக் ராமசாமி ஏற்கனவே பிரபலமான தொழிலதிபராக இருக்கும் காரணத்தால் உயர்மட்ட கார்பரேட் உலகிற்கு மிகவும் நெருங்கியவர். அதிபர் தேர்தலில் விவேக் ராமசாமி நிற்பதாக அறிவித்த பின்பு பில் அக்மேன், சமீபத்தில் எலான் மஸ்க் போன்ற பலர் இவரை பாராட்டி பேசியுள்ளனர்.
இந்த நிலையில் விவேக் ராமசாமி 2024 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் வெற்றிப்பெற்றால் ஹெச்1பி விசா லாட்டரி முறையை ரத்து செய்துவிட்டு மெரிட் அடிப்படையில் விசா வழங்கும் முறையை கொண்டு வர திட்டமிட்டு உள்ளதாக வாக்கு கொடுத்துள்ளார். இது அமெரிக்க மக்கள் மத்தியில் பெரிய அளவிலான கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications