அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை (USCIS) அமைப்பு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பின்படி, உயர்கல்வி பெற்ற வெளிநாட்டுப் பணியாளர்கள் அமெரிக்கா வந்து பணியாற்ற மிகவும் முக்கியமான H-1B விசா லாட்டரி விண்ணப்பங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 40% அளவு குறைந்துள்ளது.
H-1B விசா பெற இந்திய ஐடி ஊழியர்கள் தவமாய் தவம் கிடக்கும் வேளையில், H-1B விசா லாட்டரி விண்ணப்பங்களின் எண்ணிக்கை 40% குறைந்துள்ளது என்பது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாகவே உள்ளது. இந்த சரிவுக்கு என்ன காரணம் என்றும் USCIS அமைப்பு விளக்கம் கொடுத்துள்ளது.

USCIS அமைப்பு இந்த ஆண்டு பல விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் லாட்டரி சிஸ்டத்தை ஏமாற்றும் முயற்சிகளைக் கடுமையாகக் கட்டுப்படுத்துவதன் விளைவாக விண்ணப்பங்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது என கூறப்படுகிறது. ஒருவரே ஒன்றுக்கும் அதிகமான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் லாட்டரி முறையில் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்புகளை அதிகரிக்கும் முயற்சியில் இத்தகைய பணிகள் நடக்கிறது.
மார்ச் மாத இறுதியில் நடந்த ஹெச்1பி விசா லாட்டரியில், அமெரிக்க அரசு சுமார் 470,342 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டின் 758,994 விண்ணப்பங்களுடன் ஒப்பிடுகையில் 38% குறைவு.
விண்ணப்பிக்கும் தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கை ஒப்பீட்டளவில் நிலையாகவே உள்ளது. அதாவது இந்த ஆண்டு சுமார் 442,000 பேர் விண்ணப்பித்திருக்கின்றனர், கடந்த ஆண்டு 446,000 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதனால் விண்ணப்பம் செய்தோர் எண்ணிக்கையில் மாற்றமில்லை, விண்ணப்பத்தின் எண்ணிக்கையில் மட்டுமே வித்தியாசம் உள்ளது.
அமெரிக்க அரசு உலக நாடுகளில் இருக்கும் திறமையான ஊழியர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக 1990 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது தான் H-1B விசா திட்டம். குறிப்பாக அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) துறைகளில் திறன் வாய்ந்த தொழிலாளர் பற்றாக்குறை உள்ள துறைகளில் இளங்கலை பட்டம் அல்லது அதற்கு மேற்பட்ட பட்டம் பெற்ற பணியாளர்களை ஈர்ப்பதற்காக இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இன்ஃபோசிஸ், அமேசான், மைக்ரோசாஃப்ட், ஆப்பிள், மெட்டா மற்றும் கூகுள் உள்ளிட்ட டாப் தொழில்நுட்ப நிறுவனங்கள் H-1B விசாவை பெறும் வாடிக்கையாளர்களில் மிகவும் முக்கியமானவர்களாக உள்ளனர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications