அமெரிக்காவில் பணியாற்றும் பல இந்திய டெக் ஊழியர்கள் டிசம்பர் விடுமுறை காலத்தில் இந்தியா வந்து தங்களுடைய விசாவை புதுப்பித்து திரும்புவது வழக்கம். இந்த ஆண்டு இது பெரிய நெருக்கடியாக மாறியுள்ளது.
டிசம்பர் 15 முதல் 26 வரை அமெரிக்க தூதரகங்கள் பல H-1B விசா நேர்முகத் தேர்வுகளை திடீரென ரத்து செய்துள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான டெக் ஊழியர்கள் மீண்டும் அமெரிக்க செல்ல முடியாமல் இந்தியாவில் தவித்து வருகின்றனர். வாஷிங்டன் போஸ்ட் செய்தியின்படி, இது டிரம்ப் ஆட்சியின் புதிய சமூக ஊடக செக்கிங் கொள்கையால் இந்த புதிய குளறுபடி ஏற்பட்டு உள்ளது.

டிரம்ப் அரசின் H-1B, H-4 விசாவுக்காக விண்ணப்பம் செய்யும் அனைத்து விண்ணப்பதாரரின் சமூக ஊடக கணக்குகளை சோதனை செய்ய வேண்டும் என கொள்கை அளவில் மாற்றம் கொண்டு வரப்பட்ட புதிய உத்தரவு டிசம்பர் 15 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் அமெரிக்க தூதரகங்கள் புதிய கொள்கை மற்றும் நடைமுறைகளை செயல்படுத்த வேண்டும் என்பதற்காக டிசம்பர் மாதம் 2ஆம் பாதியில் திட்டமிடப்பட்ட விசா இண்டர்வியூவ் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இதனால் ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட தூதரகங்களில் ஆயிரக்கணக்கான நேர்காணல்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
அதாவது இந்த சோஷியல் மீடியா ஆய்வில், H-1B, H-4 விசா விண்ணப்பதாரர் அமெரிக்க குறித்தும், அமெரிக்காவின் நிலைபாட்டுக்கு எதிராக ஏதேனும் கருத்துக்களை வெளியிட்டு இருந்தாலோ, அல்லது மற்றவர்களின் கருத்துக்கும், வீடியோவுக்கும், பதிவுக்கும் லைக் அல்லது கமெண்ட் செய்திருந்தாலோ விசா வழங்குவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
இந்த நிலையில் தான் அமெரிக்க தூதரகங்கள் விசா நேர்முகத் தேர்வுகளை மாதக்கணக்கில் ஒத்திவைத்துள்ளதாக மின்னஞ்சல் அனுப்பியுள்ளன. இதில் H-1B, H-4 விசா விண்ணப்பதாரர் மூலம் தேசிய பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்புக்கு ஆபத்து இல்லை என உறுதி செய்ய சமூக ஊடக செயல்பாட்டை ஆய்வு செய்யப்பட உள்ளது.
இந்த கொள்கை வருவது அனைவரும் அறிந்தது என்றாலும், ஏற்கனவே ஷெட்யூல் செய்யப்பட்ட இண்டர்வியூவ் திடீர் ரத்து, முன்னறிவிப்பு இல்லாமல் திடீர் நடந்தது அமெரிக்காவில் பணியாற்றும் இந்திய ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது டிசம்பர் மாதத்தில் அதிக நேர்முகத் தேர்வுகள் நடக்கும் காலம் என்பதால் பாதிப்பு அதிகம்.
பாதிக்கப்பட்ட ஊழியர்கள் அமெரிக்காவில் பணியாற்றும் அனுபவம் வாய்ந்தவர்கள். டெக், இன்ஜினியரிங் போன்ற உயர் திறன் துறைகளில் உள்ளவர்கள். விசா காலாவதியான நிலையில் இந்தியாவில் தங்கியுள்ளனர். வேலைக்கு திரும்ப முடியவில்லை.
இதனால் குடும்பத்தை பிரிந்து இருக்கும் நிலை, நிதி பிரச்சனை, வேலை இழப்பு அச்சம் ஆகியவை ஏற்பட்டுள்ளன. ஹூஸ்டனைச் சேர்ந்த இம்மிக்ரேஷன் சேவை நிறுவனத்தில் மட்டும் 100 வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறது. மற்ற நிறுவனங்களில் ஆயிரக்கணக்கில் இருக்கலாம் என்று கணிக்கின்றனர்.
More From GoodReturns

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!



Click it and Unblock the Notifications