அமெரிக்காவில் பணியாற்றும் இந்திய டெக் ஊழியர்கள் தற்போது பெரும் நெருக்கடியில் உள்ளனர், இதனால் அமெரிக்கா நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.
டிரம்ப் அரசின் புதிய கொள்கையின்படி அனைத்து ஹெச்1பி, ஹெச்4 விசா விண்ணப்பதாரர்களின் சமூக ஊடக செயல்பாடுகளை கடுமையாக விதிமுறைகளின் கீழ் சோதனை செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்புதிய விதிமுறை டிசம்பர் 15 முதல் நடைமுறைக்கு வந்த நிலையில், டிசம்பர் மாதம் விசா விண்ணப்பம் செய்யவர்களின் நேர்முகத் தேர்வுகள் மார்ச் முதல் ஜூன் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதனால் டிசம்பர் விடுமுறையில் இந்தியா வந்து விசா புதுப்பித்து திரும்ப திட்டமிட்ட ஊழியர்கள் இந்தியாவில் தங்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனாஸ் அமெரிக்க நிறுவனங்கள் இந்த ஊழியர்கள் இல்லாமல் அவர்களின் வர்த்தகம், செயவ்பாடுகள் அனைத்தும் முடங்கியுள்ளது. இது 1 நாள், 1 வாரம் பிரச்சனையில்லை, கிட்டத்தட்ட விசா நேர்முக தேர்வு மார்ச் - ஜூன் மாதம் வரையில் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்க அரசு தேசிய பாதுகாப்பு நோக்கில் இப்புதிய சமுக ஊடக சோதனை திட்டத்தை செயல்படுத்துகிறது. H-1B விசா வைத்துள்ள இந்திய ஊழியர்கள் டிசம்பர் மாதத்தில் விடுமுறைக்காக இந்தியா வந்து விசாவை புதுப்பிப்பது வழக்கம்.
இதேபோல் இந்த ஆண்டும் திட்டமிட்டு விசாவுக்கான நேர்முக தேர்வை திட்டமிட்டு இருந்த வேளையில், புதிய விதிமுறையால் அனைத்தும் தலைகீழாக மாறியுள்ளது. அமெரிக்காவில் இருக்கும் போது விசா காலாவதியானாலும் அமெரிக்காவில் தங்கி பணியாற்றலாம். ஆனால் இந்தியாவுக்கு வந்தவர்கள் மீண்டும் அமெரிக்காவுக்கு நுழையும் போது விசா கட்டாயம் தேவை. இதனால் விசா காலம் நெருங்கியும், விசா காலம் முடிந்தும் இந்தியா வந்தவர்கள் அனைவரும் தற்போது 3-6 மாதம் தங்கியிருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இந்திய ஊழியர்கள் இல்லாமல் அமெரிக்க நிறுவனங்கள் தவித்து வரும் வேளையில், இந்த பிரச்சினைக்கு தீர்வு காண பல வகையில் முயற்சி செய்து வருகின்றனர். சில நிறுவனங்கள் ஊழியர்களை இந்தியாவில் இருந்து பணியாற்ற அனுமதிக்கின்றன, இது விசா புதுப்பிக்கும் வரை இது தொடரும். ஆனால் இக்காலக்கட்டத்தில் இந்திய ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு இழப்பு ஏற்படும் அச்சமும் உள்ளது.
பல நிறுவனங்கள் முக்கியமான ஊழியர்களை விரைவாக அமெரிக்காவுக்கு அழைத்து வர அமெரிக்க நிறுவனங்கள் இம்மிக்ரேஷன் ஆலோசகர்களை அணுகி முன்கூட்டிய நேர்முகத் தேர்வு ஏற்பாடு செய்ய முயல்கின்றன. விசா புதுப்பிக்க நேரம் உள்ள ஊழியர்களை உடனடியாக அமெரிக்கா திரும்ப அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இது அமெரிக்க டெக் துறைக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.
இதேபோல் அமெரிக்க தூதரகம் தற்போது அதிகளவில் விசாக்களை ரத்து செய்யும் போக்கை கடைபிடிக்கும் காரணத்தால் விசா ரினிவல்-க்கு வரும் நபர்கள் அதிகளவில் ரிஜெக்ஷனை சந்தித்து வருகின்றனர்.
More From GoodReturns

சிலிண்டர் பிரச்சனைக்கு தீர்வு: அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தடைந்தது மிகப்பெரிய எல்பிஜி கப்பல்!!

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!



Click it and Unblock the Notifications