அண்மைக்காலமாக அமெரிக்க அரசு h1b விசா வழங்குவதில் பல்வேறு கட்டுப்பாடுகளை நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறது. ஹெச்1பி விசா மூலம் அமெரிக்காவுக்கு வருகை தருபவர்களால் அமெரிக்கர்களுக்கான வேலைவாய்ப்பு பறிபோகிறது என டிரம்ப் நிர்வாகம் கூறுகிறது. இதன் காரணமாகும் விசா நடைமுறையில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தியது.
குறிப்பாக கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து ஹெச்1பி விசாவுக்காக விண்ணப்பம் செய்பவர்கள் மற்றும் அவரை சார்ந்தவர்களின் விண்ணப்பங்களை ஆய்வு செய்யும்போது அவர்களின் சமூக வலைதள பதிவுகளையும் ஆய்வு செய்ய வேண்டும் என குறிப்பிட்டு இருக்கிறது. இதன் காரணமாக விசா நடைமுறைகள் பெரிய அளவில் தாமதமாகின்றன.

இந்த நிலையில் இந்தியாவில் டெல்லி ,மும்பை, சென்னை, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய ஐந்து நகரங்களிலும் செயல்படக்கூடிய அமெரிக்க தூதரகங்களில் ஹெச்1பி விசாவுக்கான வழக்கமான நேர்காணல் தேதிகள் தீர்ந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது புதிதாக நேர்காணல் தேதிகள் 2027 ஆம் ஆண்டில் தான் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருப்பதால் அனைவரும் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.
டிசம்பர் 2025-ல் நேர்காணல் தேதி கொண்டிருந்தவர்களுக்கு 2026 மார்ச்சில் தேதி கிடைக்கும் என்றும் பின்னல் 2026 அக்டோபரில் தேதி கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்ட நிலையில் அந்த தேதிகள் தற்போது 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு மாற்றி மின்னஞ்சல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த துறையில் செயல்படக்கூடிய ஏஜென்சிகள் மற்றும் நிபுணர்கள் ஹெச்1பி விசா விவகாரம் பெரிய பூதாகரமாக வெடிக்கப் போகிறது என கூறுகின்றனர்.
ஏனெனில் அமெரிக்க தூதராக இணையதளங்களில் எல்லாம் அப்பாயின்மென்ட் தேதிகள் இல்லை என்றே காட்டுகின்றன இந்தியா மட்டுமல்ல பல்வேறு நாடுகளிலும் விசா விண்ணப்பத்திற்கான அப்பாயிண்ட்மென்ட்கள் கிடைக்கவில்லையாம். புதிய குடியேற்ற கொள்கைகள் காரணமாக விசா வழங்கும் வழங்குவதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுகிறது. குறிப்பாக அதிகாரிகள் விண்ணப்பதாரர்களின் சமூக வலைதள பக்கங்களை ஆய்வு செய்வதற்கும் அவர்களிடம் நேர்காணல் எடுத்துக் கொள்வதற்கும் அதிக நேரம் தேவைப்படுகிறது.
இது ஒரு புறம் இருக்க இந்தியர்கள், மெக்சிகோ அல்லது கனடா போன்ற நாடுகளுக்கு சென்று விசா ஸ்டாம்பிங் செய்து கொள்ளும் முறை இதற்கு முன்பு இருந்தது. ஆனால் தற்போது அந்த வசதியும் நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்தியர்கள் இந்தியாவில் தான் விசா ஸ்டாம்பிங் செய்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டிருப்பதால் புதிதாக விசா வேண்டி விண்ணப்பம் செய்பவர்களுக்கும் , ஏற்கனவே விசா பெற்று ஒரு அவசர தேவைக்காக வெளிநாடு சென்றவர்களுக்கும் சிக்கல் வந்துள்ளது.
இந்தியா வந்தவர்கள் மீண்டும் ஸ்டாம்பிங் செய்து அமெரிக்கா செல்வதற்கும் முடியாமல் தவிக்கின்றனர். பல மாதங்களாக அமெரிக்கா திரும்ப முடியாமல் இருந்தால் அங்கே வேலை பறிபோகும் அபாயமும் ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் ஹெச்1பி விசா ஊழியர்கள் தேவையற்ற காரணம் இல்லாமல் அமெரிக்கா விட்டு வெளியேறுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அப்படி தாயகம் சென்றால் ஓராண்டு வரை திரும்ப வர முடியாத சூழல் ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளன.
More From GoodReturns

ஈரான் போர்: டிரம்ப் வெளியிட்ட ஒரேயொரு அறிவிப்பு..!! டக்குன்னு குறைந்த கச்சா எண்ணெய் விலை..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

டிரம்ப் அறிவிப்பால் இந்தியாவுக்கு சவால்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்லும் முக்கிய தகவல்..!!

Tech Mahindra-வில் 30000 ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்..? வெளியான உண்மை.. ஆடிப்போன டெக் துறை..!

திண்டுக்கல் பக்கம் வீசும் அதிர்ஷ்ட காற்று!! அமைச்சர் டிஆர்பி ராஜா சொன்ன குட் நியூஸ்!!

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!



Click it and Unblock the Notifications