அமெரிக்காவில் H-1B விசா திட்டத்தில் மிகப்பெரிய அளவிலான சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என எலான் மஸ்க் முதல் டிரம்ப் வரையில் பலரும் பேசியிருக்கும் வேளையில், இதுக்குறித்த விவாதங்கள் அமெரிக்க மக்கள் மத்தியில் மட்டும் அல்லாமல் இந்தியாவிலும் வெடித்துள்ளது.
இந்திய IT சேவை நிறுவனங்கள் நீண்ட இடைவெளிக்கு பின்பு பெரும் வளர்ச்சி அடைய தயாராகி வரும் வேளையில், ஹெச்1பி விசா-வில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று புதிதாக அமைய உள்ள டிரம்ப் அரசு அதிகாரிகள் பேசுவது இந்திய ஐடி ஊழியர்களை சோகத்திலும், அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது.

இந்திய ஐடி நிறுவனங்கள் பெறும் விசா எண்ணிக்கை என்பது ஒட்டுமொத்த H-1B விசா விநியோகத்தில் சிறிய பங்கு மட்டுமே. இதேவேளையில் அமெரிக்காவில் நிலவும் டெக் ஊழியர்களின் தட்டுப்பாட்டை போக்குவதும் இந்தியர்கள் தான் என்பதில் எவ்விதமான மாற்று கருத்தும் இல்லை. இப்படியிருக்கையில் இந்திய ஐடி நிறுவனங்களின் வர்த்தகம், அமெரிக்கா வரும் இந்தியர்களின் எண்ணிக்கை இந்த சீர்திருத்தம் காரணமாக மாறுமா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் என பல நிபுணர்கள் கூறுகின்றனர்.
Macquarie Research சமீபத்திய வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க தொழில்நுட்ப துறையில் திறன் இடைவெளியை குறைப்பதில் H-1B விசாக்களின் முக்கிய பங்கை வகிக்கிறது. இருப்பினும், H-1B விசா பெற குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்யும் முக்கியமான மாற்றத்தை அமெரிக்காவில் கொண்டு வர வேண்டும் என ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.
அமெரிக்கா முழுவதும் ஒரே மாதிரியான குறைந்தபட்ச ஊதியம் நடைமுறைக்கு கொண்டு வருவது என்பது நடைமுறைக்கு ஏற்றதாக இருக்காது, இத்தகைய நடைமுறை கொண்டுவரப்பட்டால் அமெரிக்காவில் ஏற்கனவே உள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை மேலும் அதிகரிக்கும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வாழ்க்கைச் செலவு அதாவது லிவ்விங் காஸ்ட் என்பது குறிப்பிடத்தக்க அளவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் பெரிய அளவில் மாறுப்படுகிறது. இப்படியிருக்கும் வேளையில் நியூயார்க்கில் ஹெச்1பி விசாவில் பணியாற்ற வரும் ஒரு வெளிநாட்டு ஊழியருக்கும் டெக்சாஸ் மாநிலத்தின் சான் ஆண்டனியோ நகரில் பணியாற்ற வரும் ஊழியருக்கும் ஓரே சம்பள நிலைப்பாடு வைத்தால் அது பெரிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தக் பிரச்சனைகளை சமாளிக்க, Macquarie Research நிறுவனம் H-1B விசாவை ஒரு நிறுவனத்தை சார்ந்த விசாவாக இருக்கும் நிலையை மாற்றலாம். இதேபோல் இது தற்காலிகமான விசாவாகவும் மாற்றலாம். அதாவது இந்த விசா வாங்குபவர் எந்த நிறுவனத்திற்கு வேண்டுமானாலும் பணியாற்றும் வகையில் மாற்றலாம். மேலும் இதை தற்காலிகமான விசாவாக மாற்றினால் மறுபதிவு செய்யும் முறையில் வெளிநாட்டினரை கட்டுப்படுத்த முடியும் என பரிந்துரைக்கிறது.
அமெரிக்க அரசு தற்போது நடக்கும் விவாதத்தின் படி ஹெச்1பி விசா பெற சம்பள கட்டுப்பாடு, ஓவ்வொரு வருடமும் அதை தக்கவைத்துக்கொள்ள கட்டணம் போன்றவற்றை விதித்தாலும் இந்திய நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ போன்றவற்றுக்கு எவ்விதமான பிரச்சனையும் இல்லை என தெரிவித்துள்ளது.
உதாரணமாக அமெரிக்காவில் விசா கட்டுப்பாடுகள் விதித்தால் ஐடி துறையில் சிறந்து விளங்குவது இந்தியர்கள், எனவே இவர்களுக்கான வாய்ப்பு மேலும் அதிகரிக்கும். இதேவேளையில் குறைந்த சம்பளம் வாங்கும் துவக்க நிலை ஊழியர்களை அமெரிக்காவுக்கு அழைத்து வந்து அதிகம் லாபம் பார்க்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே இது முட்டுக்கட்டையாகும்.
விசா கட்டுப்பாடுகள் அதிகமாகும் பட்சத்தில் இந்தியாவில் ஐடி நிறுவனங்களின் விரிவாக்கம் பெரிய அளவில் அதிகரிக்கும் என இது இந்திய ஐடி சேவை துறைக்கு கூடுதல் பலத்தை சேர்க்கும்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது



Click it and Unblock the Notifications