அமெரிக்க அதிபர் டிரம்ப் என்னதான் கடுமையான கட்டுப்பாடுகள் விதித்தாலும், இந்திய ஐடி நிறுவனங்களும், இந்திய ஐடி ஊழியர்களுக்கும் அமெரிக்காவுக்கு போவதை குறைக்கப்போவது இல்லை. டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ, டெக் மஹிந்திரா ஆகியவை அமெரிக்காவுக்கு அனுப்பும் ஐடி ஊழியர்களின் எண்ணிக்கையை சிறிய அளவில் குறைத்தாலும் ஐடி ஊழியர்களுக்கு மொத்தமாக அமெரிக்க செல்லும் கதவுகள் மூடப்படவில்லை.
இந்த நிலையில் தான் அமெரிக்க குடிவரவு மற்றும் குடியுரிமை சேவைகள் (USCIS) 2026 நிதியாண்டுக்கான H-1B விசா பெறுவதற்கான கதவுகள் திறக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு வருடமும் அதிக ஹெச்1பி விசா பெறுவதில் அமெரிக்க நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தினாலும், இந்திய ஐடி நிறுவனங்கள் பெரும் பங்கீட்டை கொண்டு உள்ளது. இதேபோல் மொத்த ஹெச்1பி விசா கேப்-ல் அதிகம் விசா பெறும் நாட்டினர் பட்டியலில் இந்தியர்கள் தொடர்ந்து டாப் 3 இடத்தில் உள்ளனர் என்பதை மறுக்க முடியாது.

USCIS அமைப்பு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2026 நிதியாண்டுக்கான H-1B விசா பெறுவதற்கான பதிவு காலம் இந்திய நேரப்படி மார்ச் 7, 2025 அன்று இரவு 10:30 மணிக்கு தொடங்கி மார்ச் 24, 2025 அன்று இரவு 10:30 மணி வரை நீடிக்கும் என தெரிவித்துள்ளது.
இந்த காலகட்டத்தில், அனைத்து தரப்பினரும் ஹெச்1பி விசா பெறுவதற்கான தங்களுடைய ரிஜிஸ்ட்ரேஷனை USCIS தளத்தின் மூலம் மின்னணு முறையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் தனித்தனியாக பதிவு செய்ய வேண்டும் மற்றும் ஒவ்வொரு சமர்ப்பிப்புக்கும் ஒரு குறிப்பிட்ட கட்டணம் செலுத்த வேண்டும்.
மேலும் ஹெச்1பி விசா விண்ணப்பதாரர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகள் USCIS ஆன்லைன் கணக்கை பயன்படுத்தி பதிவு செய்ய வேண்டும். USCIS இல் இதுவரை ஆன்லைன் கணக்கு இல்லாத நிறுவனங்கள் முதலில் ஒரு நிறுவன கணக்கை உருவாக்க வேண்டும். இந்த கணக்கின் மூலம் அவர்கள் தங்கள் H-1B ரிஜிஸ்ட்ரேஷன் நிர்வகிக்க முடியும்.
இந்த குறிப்பிட்ட காலத்தில் எந்த நேரத்திலும் விண்ணப்பிக்கலாம், ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் 215 டாலர் கட்டணத்தை செலுத்த வேண்டும். H-1B விசாக்களை பெறுவோரை லாட்டரி முறையில் தேர்ந்தெடுக்கும் செயல்முறை இந்த பதிவு காலம் முடிந்த பிறகு தான் நடைபெறும்.


Click it and Unblock the Notifications