அக்டோபர் 1ஆம் தேதி முதல் சிலிண்டர் விலை, எஸ்பிஐ ஏடிஎம் பயன்பாட்டு முறை எண்ணிக்கையில் குறைப்பு என பல மாற்றங்கள் வரும் வேளையில் இந்தியா முழுவதும் இருக்கும் லட்ச கணக்கான ஐடி ஊழியர்களின் அமெரிக்க கனவை நினைவாக்கும் ஹெச்1பி விசா தேர்வு முறையில் பெரும் மாற்றம் வருகிறது.
டிரம்ப் தலைமையிலான அரசும், குடியேற்ற பிரிவு அதிகாரிகளும்ம் ஹெச்1பி விசா மூலம் பல முறைகேடுகள் நடத்தப்பட்டு வருவதாகவும், இந்த முறைகேடுகளால் அமெரிக்கர்கள் வேலைவாய்ப்புகளை இழப்பதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன்வைத்து வரும் வேளையில்..

டிரம்ப்-ன் உத்தரவின் படி ஹெச்1பி விசாவுக்கான தேர்வு முறையில் பெரும் மாற்றத்தை கொண்ட வர உள்ளது USCIS. இந்த ஆண்டு அக்டோபர் 1 முதல் அமெரிக்கா அரசு அந்நாட்டில் பணியாற்ற அனுமதி அளிக்கும் H1B விசா தேர்வு முறையில் அதிக சம்பளம் பெறும் வேலைவாய்ப்புகளுக்கு (அதிக திறன் தேவைப்படும் வேலைவாய்ப்புகளுக்கு) முன்னுரிமை அளிக்கும் வகையில் புதிய தேர்வு முறையை கொண்டு வர உள்ளது.
இந்த புதிய விதிமுறை 2027ஆம் நிதியாண்டுக்கான ஹெச்1பி விசா வரம்புக்கான தேர்வில் பயன்படுத்தப்படும் என தெளிவுப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் டிசிஎஸ், இன்போசிஸ், HCL போன்ற நாட்டின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் காலம் காலமாக 5-7 வருடம் அனுபவம் கொண்ட டெக் ஊழியர்களை குறைந்த சம்பளத்தில் அமெரிக்காவில் பணியில் அமர்த்தி வந்தது.
இப்புதிய விதிமுறை மூலம் இத்தகைய பணி நியமனத்திற்கான வாய்ப்புகள் இல்லை. தற்போது ஹெச்1பி விசா தேர்வை லாட்டரி முறையில் தேர்வு செய்யப்படும் நிலையில், புதிய முறையில் சம்பளம் அளவை அடிப்படையாகக் கொண்டு தேர்வு செய்யப்பட உள்ளது.
லாட்டரி முறையில் அனைத்து ஹெச்1பி விசா விண்ணப்பங்களும் வேலை, அனுபவம், நிறுவனம், சம்பளம், திறன் போன்ற எவ்விதமான பாகுபாடுகளும் இன்றி ஓரே நிலையில் கருதி விண்ணப்பத்தை Random முறையில் தேர்வு செய்யப்படும். இந்த லாட்டரி முறையில் அதிக பலன் பெற வேண்டும் என்பதற்காக அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பத்தை ஓரே நிறுவனம் பதிவு செய்யும்.
தற்போது இத்தகைய முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சம்பளம் என்ற முக்கிய காரணியை கொண்டு வந்துள்ளது. இதனால் அதிக சம்பளம் வாங்கும் நபர்களுக்கு அமெரிக்க அரசு முன்னுரிமை அளிக்க உள்ளது.
இதனால் மேனேஜர்கள், டெக் லீட் பிரிவில் இருக்கும் மூத்த நிலை ஊழியர்கள் அமெரிக்காவுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும், ஆனால் இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் அதிக சம்பளம் வாங்கும் இத்தகைய ஊழியர்களை அமெரிக்காவுக்கு அனுப்புமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.


Click it and Unblock the Notifications


