H1B விசாவுக்கு பெரிய கும்பிடு: இந்திய ஐடி நிறுவனங்களின் முடிவால் டெக் ஊழியர்கள் அதிர்ச்சி..!!

அமெரிக்காவில் திறன் வாய்ந்த வெளிநாட்டு ஊழியர்களை பணிக்கு அமர்த்த ஐடி நிறுவனங்கள் ஹெச்1பி விசாவை தான் பயன்படுத்துகின்றன. இந்த விசாவை அதிகமாக விண்ணப்பம் செய்து பயன்படுத்துவது இந்திய ஐடி நிறுவனங்கள் தான். இந்த விசாவில் லட்சக்கணக்கான இந்தியர்கள் அமெரிக்கா சென்று ஆன்சைட்டில் பணிபுரிகின்றனர்.

அமெரிக்காவில் டிரம்ப் அரசு வந்தது முதலே ஹெச்1பி விசா பெறுவதில் பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. குறிப்பாக விசா விண்ணப்பம் செய்வதற்கான அப்பாயிண்மெண்ட் கூட கிடைப்பது இல்லை. அப்படியே கிடைத்தாலும் பல காரணங்கள் கூறி விசா விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது. இதற்கு மத்தியில் நிறுவனங்களுக்கும் பல கெடுபிடி விதிக்கப்படுகிறது.

H1B விசாவுக்கு பெரிய கும்பிடு: இந்திய ஐடி நிறுவனங்களின் முடிவால் டெக் ஊழியர்கள் அதிர்ச்சி..!!

இந்நிலையில் தங்கள் ஊழியர்களுக்கான ஹெச்1பி விசாவை பெறுவதில், இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளன. 2027 நிதியாண்டிற்கான ஹெச்1பி விசா பதிவுகளில், இந்தியாவின் மிகப்பெரிய ஆறு ஐடி நிறுவனங்களின் விண்ணப்பங்கள் 92 சதவீதம் சரிந்துள்ளது. டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல் டெக், விப்ரோ, எல்டிஎம், டெக் மகேந்திரா ஆகியவை 1763 விண்ணப்பங்களை மட்டுமே தாக்கல் செய்துள்ளன. இது முந்தை ஆண்டில் 21,919 விண்ணப்பங்களாக இருந்ததுள்ளது.

நாஸ்காம் அமைப்பு வெளியிடும் தகவல் படி, இந்திய ஐடி நிறுவனங்கள் அமெரிக்காவில் உள்ளூர் திறமையாளர்களை வேலைக்கு அமர்த்துவதை அதிகரித்துள்ளன. இதன் காரணமாகவே இந்தியாவிலிருந்து ஊழியர்களை அமெரிக்காவிற்கு மாற்ற வேண்டிய அவசியம் குறைந்து, விசா பதிவுகள் இவ்வளவு பெரிய அளவில் சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read

இதுகுறித்து நாஸ்காம் தலைவர் ராஜேஷ் நம்பியார் அளித்துள்ள பேட்டியில் , தற்காலத்தில் பெரும்பாலான இந்திய நிறுவனங்கள் ஹெச்1பி விசாவை அதிகம் சார்ந்திருப்பதில்லை. மாறாக, உள்ளூர் திறமையாளர்களை நியமிப்பது மற்றும் விசா இல்லாமல் இங்கிருந்தே வேலைகளை நிர்வகிப்பதற்கான மாற்று வழிகளை கண்டறிந்துவிட்டன என கூறுகிறார்.

இந்திய ஐடி நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது, அமெரிக்காவின் பெரிய நிறுவனங்கள் விசா விண்ணப்பங்களை குறைக்கவில்லை. மைக்ரோசாஃப்ட் , ஆப்பிள் , ஜேபி மோர்கன் போன்றவை தொடர்ந்து ஹெச்1பி விசா மூலம் இந்தியர்களை பணிக்கு அமர்த்தி கொண்டு தான் இருக்கின்றன. ஆனாலும் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இது சற்றே சரிந்துள்ளது.

Recommended For You

அமெரிக்காவின் புதிய நிர்வாக உத்தரவின்படி வெளிநாட்டு ஊழியர்களை பணியில் அமர்த்தும் நிறுவனங்கள், அதே போன்ற தகுதிகொண்ட அமெரிக்க பணியாளர்களை சமீபத்தில் வேலை நீக்கம் செய்துள்ளனவா என்பதை அரசு மதிப்பீடு செய்யும். எனவே குறைந்த சம்பளம் கொடுக்கலாம் என்பதற்காக அமெரிக்கர்களை பணிநீக்கம் செய்து இந்தியர்களை ஹெச்1பி விசாவில் பணியில் அமர்த்த முடியாது.

மேலும் ஹெச்1பி விசாவில் என்னென்ன முறைகேடுகள் நடந்துள்ளன என்பதை விசாரிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் ஹெச்1பி விசா கட்டணமும் அதில் வர கூடிய ஊழியர்களின் சம்பள வரம்பும் உயர்த்தப்பட்டுள்ளதால் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு அது பெரும் செலவாகவே மாறி வருகிறது. இதனால் இந்திய ஐடி நிறுவனங்கள் படிப்படியாக இந்த விசாவை சார்ந்திருக்கும் போக்கை குறைத்து வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+