டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு ஹெச்1பி விசாவை லாட்டரி முறையில் வழங்குவதை முழுமையாக நீக்கிவிட்டு, ஊதியம், திறன், கல்வி அடிப்படையில் வழங்கும் திட்டத்தை மார்ச் 2026 முதல் செயல்படுத்த முடிவு செய்துள்ள நிலையில், ஹெச்1பி விசா மூலம் அதிகம் பலன் அடையப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பொதுவாக டெக் ஊழியர்கள் தான் அதிகப்படியாக சம்பளம் பெறுகிறார்கள் என்ற கருத்து அமெரிக்காவில் உள்ளது. இது இல்லை என கூறுவது மட்டும் அல்லாமல் டிரம்ப்-ன் ஊதியம் அடிப்படையிலான ஹெச்1பி விசா முறை நடைமுறைக்கு வந்தால் மருத்துவர்கள் தான் அதிகளவில் பயனடைவார்கள் என்பது தெரிய வந்துள்ளது. இதனால் இந்தியாவில் இருக்கும் மருத்துவர்களுக்கு அமெரிக்காவில் பணியாற்றும் வாய்ப்பு அதிகரிக்க உள்ளது.

அமெரிக்காவின் H-1B விசா திட்டத்தில் அதிக சம்பளம் பெறும் வெளிநாட்டு ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் தொழில்நுட்ப நிபுணர்கள் என்ற பொதுவான எண்ணம் தவறானது என்பது புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. மருத்துவ நிபுணர்களே அதிக ஊதியம் பெறும் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.
அமெரிக்காவில் வயதான மக்கள் தொகை அதிகரிப்பது மூலம் திறன் வாய்ந்த மருத்துவர்களின் தேவை அதிகரித்துள்ளது மற்றும் சுகாதார ஊழியர் பற்றாக்குறை காரணமாக இப்பிரிவினர்களுக்கு டிமாண்ட் அதிகரித்துள்ளது, இனி வரும் காலகட்டத்திலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த குடியேற்ற சட்ட நிறுவனமான மேனிஃபெஸ்ட் லா (Manifest Law) நடத்திய ஆய்வில், அமெரிக்க தொழிலாளர் துறை தரவுகளை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டதில் H-1B விசா திட்டம் பெரும்பாலும் ஐடி நிறுவனங்களுடன் தொடர்புப்படுத்தப்படுகிறது என்றாலும், அதிக ஊதியம் பெறும் பணியிடங்களில் மருத்துவத்துறை முதல் இடத்தில் வகிக்கிறது.

இந்த ஆய்வின்படி, அதிக ஊதியம் பெறும் 15 தொழில்களில் 11 தொழில்கள் மருத்துவத்துறையைச் சேர்ந்தவையாக உள்ளது. இதில் முக்கியமாக கார்டியாலஜிஸ்ட், அனஸ்தீசியாலஜிஸ்ட், ரேடியாலஜிஸ்ட், சர்ஜன் (அறுவை சிகிச்சை நிபுணர்), நியூராலஜிஸ்ட் (நரம்பியல் நிபுணர்) போன்ற சிறப்பு மருத்துவர்களின் சராசரி ஊதியம் 300,000 டாலருக்கு மேல் உள்ளது.
இதற்கு நேர்மாறாக, மருத்துவம் அல்லாத துறைகளில் அதிக ஊதியம் பெறும் பணியிடங்களில் - வழக்கறிஞர்கள், சாப்ட்வேர் மேனேஜர்கள், நிதி மேலாளர்கள் ஆகிய பதவிகளில் அமெரிக்காவுக்கு வருபவர்கள் 100,000 முதல் 200,000 டாலர் வரையிலான சம்பளத்தை பெறுகிறார்கள்.
இதன் படி பார்க்கும் போது ஊதிய அடிப்படைியில் தான் ஹெச்1பி விசா என்றால் மருத்துவர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும். இதன் பின்பு தான் ஐடி ஊழியர்கள். வருடம் 3 லட்சம் டாலர் என்பது 2.72 கோடி ரூபாய். 1 லட்சம் டாலர் எனில் 90 லட்சம் ரூபாய்.

இந்திய மருத்துவர்கள் முன்னிலை
மேலும் இந்த ஆய்வில் ஒரு முக்கிய தகவலை வெளியாகியுள்ளது. அதிக ஊதியம் பெறும் H-1B பணியிடங்களில் மருத்துவர்கள் முதல் இடத்தில் இருந்தாலும், இதிலும் இந்திய வம்சாவளி மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்பது தான். இதன் மூலம் ஐடி இல்லை என்றாலும் இந்தியர்களுக்கு மருத்துவ பிரிவிலும் முன்னிலை வகிக்கலாம்.
இதன் மூலம் இந்தியாவில் இருக்கும் மருத்துவர்கள் அமெரிக்காவில் பணியாற்றுவதற்கான திறன், தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் ஜாலியாக அமெரிக்காவில் பறக்கலாம்.
அமெரிக்காவில் ஹெச்1பி விசா கீழ் இந்திய மருத்துவர்கள் பணியாற்ற வேண்டும் என்றால் வெறுமென அந்நாட்டில் இருக்கும் வேலைவாய்ப்பை பெற்றால் மட்டும் போதாது. இதை தாண்டி ECFMG சான்றிதழ், USMLE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், அமெரிக்காவில் ஒரு மாநிலத்தில் பணியாற்றுவதற்கான உரிமம் ஆகியவை பெற வேண்டும். இதன் பின்பு விசா பிராசஸ் செய்வதில் பல கட்டங்கள் உள்ளது.
ஐடி ஊழியர்கள் செல்வது போல் மருத்துவர்கள் எளிதாக அமெரிக்காவில் சென்று பணியாற்றிவிட முடியாது, இதற்கு நீண்ட நெடிய பிராசஸ் உள்ளது.
More From GoodReturns

Trump முன்னுக்கு பின் முரண்.. வெள்ளை கொடி தூக்கிய பின்பு ஈரானில் தாக்குதல்.. 2 எரிவாயு தளங்கள் துவம்சம்..!!

தமிழ்நாட்டு ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி!! திடீரென ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்த Cognizant!!

இன்போசிஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் புது CEO.. சலில் பாரிக் நிலைமை என்ன..?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications