அமெரிக்க அதிபரான டிரம்ப் போட்ட கையெழுத்து இந்திய ஐடி நிறுவனங்களின் 10 சதவீத லாபத்தை ஏப்பம் விடும் அளவுக்கு பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது என்றால் மிகையில்லை. இந்திய ஐடி நிறுவனங்களின் மொத்த வர்த்தகத்தில் சுமார் 50 சதவீத வர்த்தகத்தை அமெரிக்காவில் வைத்திருக்கும் வேளையில், இந்திய ஊழியர்களை அதிகளவில் அமெரிக்க சந்தையில் பணியில் அமர்த்தி அதிகப்படியான லாபத்தையும், வருமானத்தையும் பார்த்து வருகிறது.
ஆனால் இந்த செயல்பாடுகள் அமெரிக்கர்களை டெக் வேலைவாய்ப்பு சந்தையில் இருந்து ஒதுக்கி வைப்பதாகவும், வேலைவாய்ப்புகளை இழக்கும் சூழ்நிலை இருப்பதாகவும் டிரம்ப் அரசு குற்றம்சாட்டுகிறது.
இத்தகைய சூழ்நிலையில் தான் இனி அமெரிக்காவில் வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் வெளிநாட்டில் இருந்து ஊழியர்களை நியமிப்பத்தை குறைக்கவும், உள்நாட்டில் அமெரிக்கர்களை டெக் துறையில் பயிற்றுவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இனி ஒவ்வொரு விசாவுக்கும் 1 லட்சம் டாலர் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

இந்த உத்தரவுக்கான ஆணையில் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திட்டு செப்டம்பர் 21ஆம் தேதி முதல் அமல்படுத்தியுள்ளார். ஆனால் இந்த அறிவிப்பும், கையெழுத்திடும் வீடியோவும் வெளியான 24 மணிநேரத்தில் மொத்த கதையும் மாற்றியுள்ளார் டிரம்ப்.
ஆம், இனி ஹெச்1பி விசாவுக்கு, ஏற்கனவே இருக்கும் விண்ணப்ப கட்டணங்களை தாண்டி, 1,00,000 டாலர் செலுத்த வேண்டும் என்ற உத்தரவில் கையெழுத்திடும் வீடியோவில் டிரம்ப் உடன் அமெரிக்காவின் வர்த்தக செயலாளர் Howard Lutnick இருந்தார். அப்போது இந்த புதிய விதிமுறை குறித்து பேசிய அவர் ஒவ்வொரு விசாவுக்கும், ஒவ்வொரு வருடமும் 1 லட்சம் டாலர் விதிக்கப்படுவதை per year என்பதை மிகவும் தெளிவாக குறிப்பிட்டார்.
இதனால் பல ஐடி மற்றும் டெக் சேவை நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை பணியில் இருந்து நீக்க வேண்டுமா..? என்ற கேள்வியை எழுப்பினர். இது மட்டும் அல்லாமல் அமெரிக்காவில் இருக்கும் என்ஆர்ஐ-கள், குடும்பம் குடும்பமாக இந்தியாவுக்கு திரும்ப வேண்டுமான என அச்சம் கொண்டனர்.
ஆனால் 24 மணிநேரத்தில் இந்த அறிவிப்பு அமெரிக்க டெக் துறையை ஆட்டிவைத்தது. இதனால் டிரம்ப் அரசு இந்த புதிய உத்தரவில் குழப்பம் இருப்பதாகவும், இதை விளக்கும் வகையில் Factsheet-ஐ வெளியிட்டது.
இதில் புதிதாக ஹெச்1பி விசா வாங்கும் நிறுவனம் ஒரு முறை மட்டுமே 1 லட்சம் டாலர் கட்டணத்தை செலுத்தினால் போதும், அதுவும் இந்த முறை 2026 லாட்டரியில் இருந்து தான் நடைமுறைப்படுத்தப்படும் என விளக்கம் கொடுத்தது. இதேபோல் ஏற்கனவே ஹெச்1பி விசா வைத்துள்ளவர்கள் இதனால் எவ்விதமான பாதிப்பும் இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்தது வெள்ளை மாளிகை.
முதலில் இதை பார்த்தால் டிரம்ப் டெக் நிறுவனங்களின் எதிர்ப்புக்கு பயந்து பின்வாங்கியுள்ளதாகவே தெரியும், அல்லது விதிகள் தவறாக மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டு உள்ளது என தோன்றலாம். ஆனால் டிரம்ப் ஒவ்வொரு முறையும் இதேபோன்ற நடவடிக்கையை தான் மேற்கொண்டு வருகிறார்.
டிரம்ப் ஒவ்வொரு முறையும் பெரிய அளவிலான, அனைவரையும் பயமுறுத்தும் வகையிலான ஒரு அறிவிப்பை வெளியிடுகிறார். இதன் அடிப்படையில் மொத்த சந்தையும் இந்த அறிவிப்புக்கான பாதிப்பை எதிர்கொள்ள தயாராக இருக்கும் போதும், எதிர்ப்புகள் கிளம்பும் போதும், டிரம்ப் அரசு தனது நிலைப்பாட்டில் இருந்து மாறி சிறிய அளவிலான அறிவிப்பை வெளியிடுகிறது.
இது மக்களுக்கும் சரி, சந்தையிலும் சரி நம்மதி அளிக்கும் அறிவிப்பாக மாறுகிறது. ஆனால் உண்மையில் டிரம்ப்-ன் சாணக்கிய புத்தி இதில் தான் அடங்கியுள்ளது, டிரம்ப்-ன் தேவை என்னவோ கடைசியில் வெளியாகும் அறிவிப்பு தான்.
ஆனால் அதை எவ்விதமான எதிர்ப்பும், தடையும் இல்லாமல் செய்து முடிக்க சிறிய கோட்டிற்கு பக்கத்தில் முதலில் பெரிய கோட்டை போடுகிறார். பின்னர் பெரிய கோட்டை அழித்துவிட்டு சின்ன கோடு தான் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கிறார். இதை மக்களும், சந்தையும் எளிதாக ஏற்றுக்கொள்ள தயார்படுத்தியுள்ளது. இப்படி டிரம்ப் பயமுறுத்தியே தனது காரியத்தை சாதித்து வருகிறார்.
ரெசிப்ரோக்கல் வரியிலும் இதே யுத்தியை தான் டிரம்ப் கையாண்டார், முதல் 50 சதவீதம், 100 சதவீதம் என அதிரடியான வரிகளை விதித்தார். இந்த வரி தான் பிற நாடுகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்க தூண்டுகோளாக இருந்தது.
பேச்சுவார்த்தைக்கு வந்ததே முதல் வெற்றி என்பதால் அமெரிக்கா தனது வர்த்தக ஆதிக்கத்தையும், டாலர் வலிமையும் பயன்படுத்தி தனது என்ன தேவையோ அதை முன்னிறுத்தி காரியத்தை சாதித்துக்கொண்டு வரிகளை குறைக்கிறது டிரம்ப் அரசு. ஆனால் இந்தியாவுடன் இந்த வேலை நடக்கவில்லை என்பது தான் முக்கியமான உண்மை.
More From GoodReturns

ஈரான் போர்: டிரம்ப் வெளியிட்ட ஒரேயொரு அறிவிப்பு..!! டக்குன்னு குறைந்த கச்சா எண்ணெய் விலை..!!

Strait of Hormuz: ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் கூட அனுப்ப முடியாது.. டிரம்ப்-க்கு பதிலடி கொடுத்த ஈரான் IRGC படை!

டிரம்ப் அறிவிப்பால் இந்தியாவுக்கு சவால்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்லும் முக்கிய தகவல்..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!



Click it and Unblock the Notifications