H1B Visa: வாயை திறக்காத.. சுந்தர் பிச்சை, சத்ய நாதெல்லா.. வெளுத்து வாங்கும் சசி தரூர்..!
அமெரிக்க அரசாங்கம் ஹெச்1பி விசா நடைமுறையில் பல்வேறு கெடுபிடிகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறது. அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்கள் திறன்மிகு வெளிநாட்டு ஊழியர்களை பணிக்கு அமர்த்த பயன்படுத்தக்கூடிய ஒரு விசா தான் ஹெச்1பி விசா.
அமெரிக்காவில் ஹெச்1பி விசாவில் வேலை செய்பவர்களில் 71% பேர் இந்தியர்கள் . தற்போது கூகுளின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் சத்ய நாதெல்லா என பெரும் தலைகள் எல்லாம் கூட இந்தியாவில் இருந்து ஹெச்1பி விசாவில் அமெரிக்கா சென்று வேலையில் சேர்ந்தவர்கள் தான்.
தற்போது ஹெச்1பி விசாவை பெறுவதற்கு தான் அமெரிக்கா அரசாங்கம் பல்வேறு கெடுபிடிகளை அறிவித்திருக்கிறது விசாவிற்கு என 1 லட்சம் டாலர்கள் கட்டணத்தையும் விதித்திருக்கிறது. அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களில் முன்னணி பதவிகளிலும் வேலைகளிலும் இருப்பவர்கள் பெரும்பாலும் இந்திய தொழில் நுட்ப நிபுணர்கள் தான்.
இப்படி இருக்கும்போது ஹெச்1பி விசா விவகாரத்தில் ஏன் அமெரிக்காவில் இருக்கக்கூடிய இந்தியர்களும், இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்களும் எந்த கேள்வியையும் எழுப்பாமல் மௌனம் காக்கிறார்கள் என காங்கிரஸ் எம்பி சசி தரூர் கேள்வி எழுப்பி இருக்கிறார். அண்மைக்காலமாகவே இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே வர்த்தக மோதல்கள், ஹெச்1பி விசா சர்ச்சை என அடுத்தடுத்த பிரச்சனைகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன .
இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்று அமெரிக்க நிறுவனங்களில் பல ஆண்டுகாலம் வேலை செய்து தலைமை பொறுப்புகள் வரை பல்வேறு இந்தியர்களும் உயர்ந்த இருக்கக்கூடிய சூழலில் இந்தியா சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் என வரும்போது இவர்கள் ஏன் மௌனம் காக்கிறார்கள் என சசித்தரூர் வினவி இருக்கிறார்.
இந்தியாவையும் இந்தியர்களையும் பெருமளவில் பாதிக்கப்படக்கூடிய விஷயங்களுக்கு கூட ஏன் வாய் திறக்க மாட்டேன் என்கிறீர்கள் என்ற கேள்வியை அவர் முன் வைத்திருக்கிறார். இந்தியாவிற்கு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு வருகை தந்திருக்கிறது. அவர்களை வரவேற்று அவர்களுடன் கலந்துரையாடிய பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது சசிதரூர் இந்த கேள்வியை முன் வைத்தார் .
அப்போது அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எந்த ஒரு இந்தியா அமெரிக்கரும் என்னை இதுவரை தொடர்பு கொண்டு இந்த விவகாரங்கள் குறித்து ஒரு முறை கூட பேசியது கிடையாது எனக் கூறினாராம். அதை சுட்டிக்காட்டி இருக்கும் சசி தரூர் இது எனக்கு மிகவும் ஆச்சரியத்தை அளிக்கிறது என தெரிவித்திருக்கிறார் . அமெரிக்க வாழ் இந்தியர்கள் இந்தியா மீது அக்கறையுடன் இருக்கிறார்கள் என்றால் நிச்சயம் இந்த விவகாரங்களில் அவர்கள் குரல் கொடுக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறார் .
சுந்தர் பிச்சை, சத்ய நாதெல்லா என அமெரிக்க நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளில் இருக்கும் இந்தியர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. ஆனால் இதனால் என்ன பிரயோஜனம், இந்திய பிரச்சினைகளுக்காக இவர்கள் குரல் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள் . அமெரிக்காவில் அதிகம் வசிக்கும் வெளிநாட்டு பூர்வீககாரர்களாக இந்தியர்கள் பெரிய எண்ணிக்கையில் இருக்கிறார்கள்.
இந்தியர்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குகிறார்கள் , தேர்தல் காலங்களில் பிரச்சாரங்களில் கூட ஈடுபடுகிறார்கள். அப்படி இருக்கும்போது ஏன் தங்களுக்கு எதிராக ஒரு விஷயம் வரும்போது குரல் கொடுத்தது மறுக்கிறார்கள் என்ற கேள்வி இயற்கையாகவே எழுகிறது.
ஒருவேளை அமெரிக்க அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுத்தால் தங்களின் அமெரிக்க வாழ்க்கை கனவு பறிபோய் விடுமா என்ற அச்சம் இந்தியர்கள் மத்தியில் நிலவுகிறதா என்ற ஒரு கேள்வியும் முன் வைக்கப்படுகிறது. பொதுவெளியில் இதுபோல விமர்சனம் செய்தால் தங்களின் வேலைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என சுந்தர் பிச்சை சத்ய நாதெல்லா போன்றோர் கருதுகிறார்களா என்றும் எண்ண தோன்றுகிறது.
இருந்தாலும் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து குரல் கொடுக்கும் போது நிச்சயம் அமெரிக்கா அரசாங்கம் இதனை இன்னும் தீவிரமாக கவனத்தில் கொண்டு தன்னுடைய கொள்கைகளை மாற்றிக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பு கூட இருக்கிறது. ஆனால் அமெரிக்க வாழ் இந்திய சமூகம் இதை செய்யுமா என்பது தான் கேள்வி. அமெரிக்காவில் இருந்து கொண்டு பூர்வீகத்தை மறக்க மாட்டேன் என பண்டிகைகளை கொண்டாடுவதோடு நின்றுவிடாமல் இவற்றுக்கும் குரல் கொடுத்தால் மாற்றம் நிச்சயம்.
Share This Article
English summary
H1B visa: Congress MP Sasi Tharoor questions the silence of Indian diaspora
Eng summary: Congress MP Sasi Tharoor questions the silence of Indian-American community on issues affecting India as well as a large number of issues affecting them, such as H-1B visa restrictions and trade tariffs.Title: H1B visa: Congress MP Sasi Tharoor questions the silence of Indian diasporaKeyword: Congress MP Sasi Tharoor, Congress MP Sasi Tharoor H1B visa, Trump introduces $100,000 annual fee for H-1B visas, $100,000 annual fee for H-1B visas , H1b visa fees, how to get h1b visa, h1b visa gets costly, indian IT sector employees, Indian techies h1b visa, ஹெச்1பி விசா, 1 லட்சம் டாலர் ஆண்டு ஹெச்1பி விசா கட்டணம், விசா கட்டணத்தை உயர்த்திய டிரம்ப், ஹெச்1பி விசா இந்திய டெக்கிகள், இந்திய ஐடி நிறுவனங்கள் ஹெச்1பி விசா, இந்தியர்கள் விசா, இந்தியா அமெரிக்கா விசா, அமெரிக்காவில் ஹெச்1பி விசா, ஹெச்1பி விசா விண்ணப்பம் செய்வது எப்படி, ஹெச்1பி விசாவுக்கு மாற்று என்ன, ஹெச்1பி விசா, USA, trump visa, Indians h1b visa, h1b visa USA, USA visa, L1 visa, O-1 visa, EB-5 Visa, Trump, சசி தரூர் ஹெச்1பி விசா, சுந்தர் பிச்சை சசி தரூர்Tag: sasi tharoor, ஹெச்1பி விசா, H1B visa, சசி தரூர், சுந்தர் பிச்சைH1B Visa: வாயை திறக்காத.. சுந்தர் பிச்சை, சத்ய நாதெல்லா.. வெளுத்து வாங்கும் சசி தரூர்..!அமெரிக்க அரசாங்கம் ஹெச்1பி விசா நடைமுறையில் பல்வேறு கெடுபிடிகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறது. அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்கள் திறன்மிகு வெளிநாட்டு ஊழியர்களை பணிக்கு அமர்த்த பயன்படுத்தக்கூடிய ஒரு விசா தான் ஹெச்1பி விசா.அமெரிக்காவில் ஹெச்1பி விசாவில் வேலை செய்பவர்களில் 71% பேர் இந்தியர்கள் . தற்போது கூகுளின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் சத்ய நாதெல்லா என பெரும் தலைகள் எல்லாம் கூட இந்தியாவில் இருந்து ஹெச்1பி விசாவில் அமெரிக்கா சென்று வேலையில் சேர்ந்தவர்கள் தான்.தற்போது ஹெச்1பி விசாவை பெறுவதற்கு தான் அமெரிக்கா அரசாங்கம் பல்வேறு கெடுபிடிகளை அறிவித்திருக்கிறது விசாவிற்கு என 1 லட்சம் டாலர்கள் கட்டணத்தையும் விதித்திருக்கிறது. அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களில் முன்னணி பதவிகளிலும் வேலைகளிலும் இருப்பவர்கள் பெரும்பாலும் இந்திய தொழில் நுட்ப நிபுணர்கள் தான்.இப்படி இருக்கும்போது ஹெச்1பி விசா விவகாரத்தில் ஏன் அமெரிக்காவில் இருக்கக்கூடிய இந்தியர்களும், இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்களும் எந்த கேள்வியையும் எழுப்பாமல் மௌனம் காக்கிறார்கள் என காங்கிரஸ் எம்பி சசி தரூர் கேள்வி எழுப்பி இருக்கிறார். அண்மைக்காலமாகவே இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே வர்த்தக மோதல்கள், ஹெச்1பி விசா சர்ச்சை என அடுத்தடுத்த பிரச்சனைகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன .இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்று அமெரிக்க நிறுவனங்களில் பல ஆண்டுகாலம் வேலை செய்து தலைமை பொறுப்புகள் வரை பல்வேறு இந்தியர்களும் உயர்ந்த இருக்கக்கூடிய சூழலில் இந்தியா சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் என வரும்போது இவர்கள் ஏன் மௌனம் காக்கிறார்கள் என சசித்தரூர் வினவி இருக்கிறார்.இந்தியாவையும் இந்தியர்களையும் பெருமளவில் பாதிக்கப்படக்கூடிய விஷயங்களுக்கு கூட ஏன் வாய் திறக்க மாட்டேன் என்கிறீர்கள் என்ற கேள்வியை அவர் முன் வைத்திருக்கிறார். இந்தியாவிற்கு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு வருகை தந்திருக்கிறது. அவர்களை வரவேற்று அவர்களுடன் கலந்துரையாடிய பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது சசிதரூர் இந்த கேள்வியை முன் வைத்தார் .அப்போது அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எந்த ஒரு இந்தியா அமெரிக்கரும் என்னை இதுவரை தொடர்பு கொண்டு இந்த விவகாரங்கள் குறித்து ஒரு முறை கூட பேசியது கிடையாது எனக் கூறினாராம். அதை சுட்டிக்காட்டி இருக்கும் சசி தரூர் இது எனக்கு மிகவும் ஆச்சரியத்தை அளிக்கிறது என தெரிவித்திருக்கிறார் . அமெரிக்க வாழ் இந்தியர்கள் இந்தியா மீது அக்கறையுடன் இருக்கிறார்கள் என்றால் நிச்சயம் இந்த விவகாரங்களில் அவர்கள் குரல் கொடுக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறார் .சுந்தர் பிச்சை, சத்ய நாதெல்லா என அமெரிக்க நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளில் இருக்கும் இந்தியர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. ஆனால் இதனால் என்ன பிரயோஜனம், இந்திய பிரச்சினைகளுக்காக இவர்கள் குரல் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள் . அமெரிக்காவில் அதிகம் வசிக்கும் வெளிநாட்டு பூர்வீககாரர்களாக இந்தியர்கள் பெரிய எண்ணிக்கையில் இருக்கிறார்கள்.இந்தியர்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குகிறார்கள் , தேர்தல் காலங்களில் பிரச்சாரங்களில் கூட ஈடுபடுகிறார்கள். அப்படி இருக்கும்போது ஏன் தங்களுக்கு எதிராக ஒரு விஷயம் வரும்போது குரல் கொடுத்தது மறுக்கிறார்கள் என்ற கேள்வி இயற்கையாகவே எழுகிறது.ஒருவேளை அமெரிக்க அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுத்தால் தங்களின் அமெரிக்க வாழ்க்கை கனவு பறிபோய் விடுமா என்ற அச்சம் இந்தியர்கள் மத்தியில் நிலவுகிறதா என்ற ஒரு கேள்வியும் முன் வைக்கப்படுகிறது. பொதுவெளியில் இதுபோல விமர்சனம் செய்தால் தங்களின் வேலைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என சுந்தர் பிச்சை சத்ய நாதெல்லா போன்றோர் கருதுகிறார்களா என்றும் எண்ண தோன்றுகிறது.இருந்தாலும் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து குரல் கொடுக்கும் போது நிச்சயம் அமெரிக்கா அரசாங்கம் இதனை இன்னும் தீவிரமாக கவனத்தில் கொண்டு தன்னுடைய கொள்கைகளை மாற்றிக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பு கூட இருக்கிறது. ஆனால் அமெரிக்க வாழ் இந்திய சமூகம் இதை செய்யுமா என்பது தான் கேள்வி. அமெரிக்காவில் இருந்து கொண்டு பூர்வீகத்தை மறக்க மாட்டேன் என பண்டிகைகளை கொண்டாடுவதோடு நின்றுவிடாமல் இவற்றுக்கும் குரல் கொடுத்தால் மாற்றம் நிச்சயம்.
Story first published: Wednesday, September 24, 2025, 17:39 [IST]
Other articles published on
Sep 24, 2025