வாஷிங்டன், அமெரிக்கா: அமெரிக்காவை சேர்ந்த பல்வேறு டெக் நிறுவனங்களும் திறன்மிகு வெளிநாட்டு ஊழியர்களை பணிக்கு அமர்த்துவதற்கு ஹெச்1பி விசாவை தான் பயன்படுத்துகின்றன. இப்படி அமெரிக்காவில் ஹெச்1பி விசாவில் வேலைக்கு சென்று இருப்பவர்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் இந்தியாவை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் தான் .
டிரம்ப் நிர்வாகம் ஹெச்1பி விசாவுக்கான ஆண்டு கட்டணத்தை ஒரு லட்சம் டாலர்கள் அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் 88 லட்சம் ரூபாய் என உயர்த்தி இருக்கிறது. எனவே இனி ஒரு நபரை ஹெச்1பி விசாவில் அமெரிக்க நிறுவனங்கள் வேலைக்கு பணிக்கு அமர்த்த வேண்டும் என்றால் அதற்காக ஆண்டு கட்டணமாக ஒரு லட்சம் டாலர்களை செலுத்த வேண்டியிருக்கும்.

டிரம்ப் நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு பல்வேறு நிறுவனங்களுக்கும் திறன்மிகு வெளிநாட்டு ஊழியர்களை பணிக்கு அமர்த்துவதில் கூடுதல் செலவை ஏற்படுத்தும். டிரம்பின் இந்த அறிவிப்பால் அமெரிக்க டெக் உலகமே பரபரத்துக் காணப்படுகிறது . இதற்கிடையே மைக்ரோசாப்ட் நிறுவனம் அனைத்து ஊழியர்களுக்கும் திடீரென ஒரு மின்னஞ்சலை அனுப்பி இருக்கிறது.
ஹெச்1பி விசாவில் வேலைக்கு அமர்த்தப்பட்டு தற்போது வெளிநாட்டுக்கு சென்று இருக்கக்கூடிய அனைத்து ஊழியர்களும் நாளைக்குள் அமெரிக்காவிற்கு திரும்ப வேண்டும் என கூறியிருக்கிறது. இது தொடர்பாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அனுப்பியுள்ள மின்னஞ்சலில் ஹெச்1பி மற்றும் ஹெச் 4 விசாவில் வேலைக்கு அமர்த்தப்பட்ட அனைவரும் நாளைக்குள் அமெரிக்காவுக்கு திரும்ப வேண்டும் என தெரிவித்திருக்கிறது.
டிரம்பின் ஹெச்1பி விசா கட்டணம் இந்திய டெக் நிறுவனங்கள் மட்டுமில்லாமல் அமெரிக்க டெக் நிறுவனங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்த இருக்கிறது. கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான், மெடா ஆகிய முன்னணி டெக் நிறுவனங்கள் திறன் மிகு இந்திய ஊழியர்களை பணிக்கு அமர்த்த ஹெச்1பி விசாவை தான் பயன்படுத்துகின்றன.
டிரம்ப் நிர்வாகத்தின் இந்த அறிவிப்பால் டெக் நிறுவனங்கள் இனி அவர்களுக்காக கூடுதல் செலவு செய்ய வேண்டியிருக்கும். அதாவது ஒரு ஊழியருக்கு ஆண்டுக்கு 88 லட்சம் ரூபாயை விசா கட்டணமாக மட்டுமே செலுத்த வேண்டும். இது நிறுவனங்களின் செலவை அதிகப்படுத்தும். எனவே மிக அவசியமாக இருந்தால் மட்டுமே ஹெச்1பி விசாவில் ஊழியர்களை வெளிநாட்டில் இருந்து வேலைக்கு அமர்த்துவார்கள். எனவே தானாகவே அமெரிக்காவில் இருப்பவர்களுக்கு இந்த வேலைவாய்ப்புகள் சென்றுவிடும்.
மைக்ரோசாப்ட் போலவே அமேசான், மெட்டா உள்ளிட்ட நிறுவனங்களும் ஹெச்1பி விசாவில் அமெரிக்காவிற்கு வரவழைக்கப்பட்ட ஊழியர்கள் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது , வெளியில் இருப்பவர்களும் செப்டம்பர் 21ஆம் தேதிக்குள் அமெரிக்கா திரும்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளன. இது தாய்நாடு மற்றும் வேறு நாடுகளுக்கு சென்றிருக்க கூடிய ஊழியர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. தங்கள் பயண திட்டங்களை ரத்து செய்து அவர்கள் உடனே அமெரிக்கா திரும்ப வேண்டும்.
More From GoodReturns

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications