H1B Visa மொத்தமாக சுருட்டிக்கொண்ட இந்தியர்கள்.. அமெரிக்காவுக்கு எதிர்பார்க்காத ஷாக்..!

அமெரிக்காவுக்கு சென்று ஒரு வெளிநாட்டினர் பணியாற்ற வேண்டுமாயின் உறுதியான வேலைவாய்ப்பு மற்றும் விசா வேண்டும், அப்படி உலகளவில் அதிகப்படியானோர் அமெரிக்காவுக்கு சென்று பணியாற்ற தேர்வு செய்யும் முக்கியமான விசா ஹெச்1பி.

ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் இருந்து ஐடி ஊழியர்கள் முதல் ஆராய்ச்சியாளர்கள் வரையில் பலதரப்பட்ட மக்கள் அமெரிக்காவுக்கு சென்று பணியாற்ற ஹெச்1பி விசா விண்ணப்பம் சமர்ப்பித்து வருகின்றனர். அமெரிக்க கனவுடன் இருக்கும் கோடான கோடி இந்திய மக்களின் முக்கிய வாய்ப்பாக இருப்பது H1B Visa.

H1B Visa மொத்தமாக சுருட்டிக்கொண்ட இந்தியர்கள்.. அமெரிக்காவுக்கு எதிர்பார்க்காத ஷாக்..!

அமெரிக்க அரசின் 2022 ஆம் நிதியாண்டில் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை அமைப்பு ஒப்புதல் அளித்த ஹெச்1பி விசா விண்ணப்பத்தில் எப்போதும் இல்லாத வகையில் அதிகப்படியான இந்தியர்களின் விண்ணப்பம் ஒப்புதல் பெற்று பெரிய அளவிலான ஆதிக்கம் செலுத்தியுள்ளது இந்தியா.

2022 ஆம் நிதியாண்டில் மட்டும் அமெரிக்க அரசு சுமார் 4.4 லட்சம் ஹெச்1பி விசா விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது, இதில் சுமார் 3.2 லட்சம் விசா விண்ணப்பங்கள் இந்தியர்களின் விண்ணப்பம் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது மொத்த ஹெச்1பி விசா விண்ணப்பத்தில் இந்தியர்கள் சுமார் 72.6 சதவீத விசாக்களை பெற்றுள்ளனர்.

இதன் மூலம் அமெரிக்க அரசு கொடுத்துள்ள ஒவ்வொரு 4 ஹெச்1பி விசாவில் 3 விசாக்களை இந்தியர்கள் பெற்றுள்ளனர். இது வியக்க வைக்கும் எண்ணிக்கை என்றால் மிகையில்லை.

H1B Visa மொத்தமாக சுருட்டிக்கொண்ட இந்தியர்கள்.. அமெரிக்காவுக்கு எதிர்பார்க்காத ஷாக்..!

இந்தியாவை தொடர்ந்து சீனா சுமார் 55,038 ஹெச்1பி விசா விண்ணப்பங்களை பெற்றுள்ளது, இது மொத்த எண்ணிக்கையில் 12.5 சதவீதமாகும். 3வது இடத்தில் கனடா உள்ளது, 2022 ஆம் நிதியாண்டில் அண்டை நாடான கனடாவுக்கு அமெரிக்கா 4,235 விசா விண்ணப்ப ஒப்புதல்கள் அளிக்கப்பட்டு உள்ளது, இது மொத்த எண்ணிக்கையில் 1 சதவீதமாகும்.

ஒரு வருடத்தில் 4.4 லட்சம் ஹெச்1பி விசா விண்ணப்பத்திற்கு ஒப்புதலா..? என குழம்ப வேண்டாம், இதில் புதிய விண்ணப்ப ஒப்புதல்களும், விசா நீட்டிப்பு விண்ணப்பங்களும் அடக்கம். பொதுவாக ஹெச்1பி விசா காலம் 6 வருடம், இந்த நிலையில் உரிய நபரின் பணி ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டாலோ, அல்லது விண்ணப்பதாரர் கிரீன் கார்டு பெற விண்ணப்பித்து முயற்சி செய்தாலோ ஹெச்1பி விசா நீட்டிக்க விண்ணப்பம் அளிக்கப்படும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+