டிரம்ப் கிளம்பிய ஹெச்1பி விசா சூறாவளி பெரும் குழப்பத்திற்கும் பின்பு தற்போது தனிந்துள்ளது என்றால் மிகையில்லை. டிரம்ப் அரசு முதலில் ஒவ்வொரு ஹெச்1பி விசா ஊழியருக்கும் 1 லட்சம் டாலர் அதாவது 88 லட்சம் கணக்கம் செலுத்த வேண்டும், அதுவும் ஒவ்வொரு ஆண்டும் செலுத்த வேண்டும் என அறிவித்தது.
இதனால் ஒட்டுமொத்த அமெரிக்க நிறுவனங்களும் ஆடிப்போயிருந்தனர். இந்தியர்கள், சீனர்களின் துணை இல்லையெனில் அமெரிக்க டெக் துறை ஜீரோவாகும் என்ற அச்சம் அதிகரித்தது.

இதை உணர்ந்த டிரம்ப் அரசு 24 மணிநேரத்தில் புதியதாக ஹெச்1பி விசா பெறுவோருக்கு மட்டுமே 1 லட்சம் டாலர் கூடுதல் கட்டணம் என அறிவிக்கவே அமெரிக்க நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் அமெரிக்காவில் இருக்கும் வெளிநாட்டவர்களுக்கும் நிம்மதி அடைந்தனர்.
இதேபோல் இந்த புதிய கட்டணம் 2026 லாட்டரியில் இருந்து தான் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளதால் இன்னும் 2 வருட காலம் அமெரிக்க நிறுவனங்களுக்கு கால அவகாசம் உள்ளது.
இதேவேளையில் இந்த உத்தரவை எதிர்த்து அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும், இதன் மூலம் இதன் நடைமுறைப்படுத்துவதில் இருந்து நீக்கப்படும் என கருத்துக்களும் ஒருப்பக்கம் நிலவுகிறது. இப்படியிருக்கும் சூழ்நிலையில், அமெரிக்க டெக் நிறுவனங்களின் அடுத்தக்கட்ட முடிவுகள் என்னவாக இருக்கும்..? இந்திய ஐடி மற்றும் டெக் ஊழியர்களின் நிலை என்ன..?
அமெரிக்க டெக் துறையின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருப்பது இந்திய டெக் ஊழியர்கள் தான், இதேபோல் அமெரிக்காவில் அதிகம் சம்பாதித்கும், அதிகளவில் அந்நாட்டு பொருளாதாரத்திற்கும் பங்கீடு செய்யும் வெளிநாட்டவர்கள் பட்டியிலிலும் முதல் இடத்தில் இருப்பது இந்தியர்கள் தான்.
இப்படியிருக்கையில் ஓரே உத்தரவில் டிரம்ப் இந்திய டெக் ஊழியர்களை அந்நாட்டை விட்டு வெளியேற்ற முடியாது, அப்படி செய்தால் யானை தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக்கொள்வது போன்றாகும்.
இந்த 1 லட்சம் டாலர் கட்டணம் மூலம் இனி புதிதாக அமெரிக்காவுக்கு நுழைவது மிகவும் கடினமாகும், இதில் எவ்விதமான மாற்றமும் இல்லை. இத்தகைய சூழ்நிலையில் செலவுகளையும் குறைத்து, அதேவேளையில் இந்தியர்களின் திறனையும் பயன்படுத்த வேண்டும் என்றால் அமெரிக்க நிறுவனங்களுக்கு இருக்கும் ஓரே வழி இந்தியாவில் அலுவலகத்தை திறப்பது அல்லது ஏற்கனவே இருக்கும் அலுவலகத்தையும், ஊழியர்கள் எண்ணிக்கையும் விரிவாக்கம் செய்வது தான்.
இந்தியாவில் ஏற்கனவே ஜிசிசி அலுலகங்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் வேளையில் டிரம்ப்-ன் உத்தரவு இந்த வேகத்தை பல மடங்கு உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அடுத்த 2 வருடத்தில் இந்தியாவில் அதிகப்படியான ஜிசிசி அலுவலகங்கள் வரும், வேலைவாய்ப்புகளை உருவாக்கும், அதிகப்படியான சம்பளத்தை தரும் (ஐடி சேவை நிறுவனங்களின் சம்பளத்தை விட அதிகம்).
அதேபோல் அமெரிக்காவில் ஹெச்1பி விசா உடன் தற்போது பணியாற்றி வரும் ஊழியர்கள் தொடர்ந்து அமெரிக்காவிலேயே பணியாற்றுவார்கள். சொல்லப்போனால் தற்போது ஹெச்1பி விசாவில் இருக்கும் ஊழியர்களுக்கு தான் ஜாக்பாட், தொடர்ந்து அமெரிக்காவிலேயே பணியாற்றலாம், அவர்களின் விசா ரினிவல்-க்கு 1 லட்சம் டாலர் செலுத்த தேவை இல்லாத காரணத்தால் இந்திய ஐடி நிறுவனங்களும் சுமை குறையும்.
இதேவேளையில் இந்திய ஐடி ஊழியர்களுக்கு டிமாண்ட் அதிகமாக இருக்கும் காரணத்தால் ஹெச்1பி விசா ஊழியர்களை தேடி தேடி பணியில் அமர்த்த வாய்ப்புகள் அதிகமாக உள்ளதால் அமெரிக்க ஊழியர்களின் அட்ரிஷன் விகிதம் அதிகமாகலாம்.
மேலும் புதிதாக வரும் ஜிசிசி அலுவவகங்களை ஈர்க்க தமிழ்நாடு சிவப்பு கம்பளம் போட்டு இருக்கும் வேளையில், தமிழ்நாட்டு டெக் ஊழியர்களுக்கு அதிகளவிலான வாய்ப்புகள் கிடைக்கும். அப்புறம் என்ற ஊருக்கு ஊர் ஐடி பார்க் கட்ட வேண்டியது தான், ரியல் எஸ்டேட் துறைக்கும் இது பெரும் வாய்ப்பாக அமையும்.
More From GoodReturns

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!



Click it and Unblock the Notifications