பெரும்பாலான இந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள் அமெரிக்காவில் சென்ற வேலை செய்வதற்கு பயன்படுத்தக்கூடிய ஒரு விசா தான் ஹெச்1பி. அமெரிக்கா மற்றும் இந்தியாவை சேர்ந்த நிறுவனங்கள் திறன்மிகு வெளிநாட்டு ஊழியர்களை மூன்றிலிருந்து ஆறு ஆண்டுகள் வரை அமெரிக்காவில் தங்கி பணி புரிய வைக்க இந்த விசாவை பயன்படுத்துகின்றன.
இந்தியாவை சேர்ந்த ஐடி நிறுவனங்களாகட்டும் அமெரிக்காவை சேர்ந்த டெக் நிறுவனங்களாகட்டும் பெரும்பாலான இந்தியர்களை இந்த விசா மூலமாக தான் அமெரிக்காவில் வேலைக்கு அமர்த்துகின்றன. இந்த சூழலில் ஹெச்1பி விசாவில் வேலைக்கு சென்று தாயகம் வந்திருக்கக்கூடிய ஒரு இந்திய ஊழியர் அமெரிக்காவில் ஹெச்1பி விசாவில் செல்பவர்களுக்கு என்ன நடக்கிறது தெரியுமா என வெளியிட்டு இருக்கக்கூடிய ஒரு பதிவு சமூக வலைத்தளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அந்த நபர் வெளியிட்டு இருக்கக்கூடிய பதிவில் அண்மையில் தான் அமெரிக்காவில் இருந்து திரும்பினேன் . ஹெச்1பி விசா மூலம் அமெரிக்காவிற்கு செல்பவர்களின் நிலைமை என்ன தெரியுமா ? ஏன் அமெரிக்கர்கள் இந்தியர்கள் வந்து அமெரிக்காவில் வேலை செய்வதை வெறுக்கிறார்கள் தெரியுமா என்பது குறித்து என்னுடைய பார்வையை நான் பதிவு செய்கிறேன் என கூறியிருக்கிறார் .
அதில் ஹெச்1பி விசாவில் வரக்கூடிய ஊழியர்களை அங்கே மோசமாக நடத்துகிறார்கள் . அப்படி நடத்துவதும் கூட இந்திய மேலாளர்கள் தான் என சாடியுள்ளார். மேலாளர் பதவிக்கு வந்திருப்பவர்கள் முதலில் இந்த விசாவில் வந்தவர்கள் தான் இருந்தாலும் புதிதாக இந்த விசாவில் வருபவர்களை மோசமாக நடத்துகிறார்கள் என்கிறார்.
பல இந்தியர்களும் அமெரிக்க நிறுவனங்களில் உயர் பதவிகளில் இருக்கிறார்கள். பொதுவாக இந்தியர்களை தான் அவர்கள் பதவியிலும் அமர்த்துகிறார்கள். ஏன் என்றால் இந்தியர்களை தான் அவர்களால் மோசமாக நடத்த முடியும். இந்தியர்களை 24 மணி நேரமும் வேலை செய்யுமாறு நிர்பந்தம் செய்யலாம் , ஆனால் அமெரிக்கர்களை அவ்வாறு செய்ய முடியாது அவர்கள் நேரம் கடந்து வேலை செய்ய மாட்டார்கள் எல்லை மீறினால் கேள்வி கேட்பார்கள் ஆனால் இந்தியாவில் இருந்து செல்லக்கூடிய ஊழியர்கள் அவ்வாறு கேள்வி கேட்பது கிடையாது என குறிப்பிடுகிறார்.
அமெரிக்காவில் உயர் பதிவில் இருக்கக்கூடிய இந்திய மேலாளர்கள் இனம் சார்ந்தும் அந்த நபர் எந்த சமூகத்தை சார்ந்தவர் எந்த பிரிவை சார்ந்தவர் என்பதை பொறுத்து அவர்களுக்கு சாதகமாக நடந்து கொள்ளும் போக்கையும் காணமுடிகிறது என கூறியிருக்கிறார். தெலுங்கு பேசும் மேலாளர் தெலுங்கு பேசும் நபர்களுக்கு தான் வேலை வாய்ப்பு தருகிறார் அதே போல குஜராத்தை சேர்ந்த ஒரு மேலாளர் குஜராத்திகளுக்கு தான் முன்னுரிமை தருகிறார் என தெரிவித்திருக்கிறார்.
இது போன்ற விஷயங்கள் தான் அமெரிக்கர்களுக்கு இந்தியர்கள் மீது வெறுப்பினை உண்டாக்குகிறது என அவர் சுட்டிக் காட்டி இருக்கிறார் .பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தான் ஹெச்1பி விசாவில் செல்லும் இந்தியர்கள் அங்கே வேலை செய்ய வேண்டி இருக்கிறது இந்த சவால்களுக்கு மத்தியிலும் நாம் பல்வேறு பாடங்களையும் கற்றுக் கொள்ள முடிகிறது என கூறியிருக்கிறார்.
அவருடைய பதிவுக்கு பலரும் பதில் தெரிவித்து இருக்கின்றனர் ஒரு நபர் இந்தியாவிலிருந்து வருபவர்களை இந்தியர்களாக பார்க்காமல் ஜாதி ரீதியாகவும் மொழி ரீதியாகவும் அடையாளம் கண்டு அவர்களுக்கு சாதகமாக மட்டுமே செயல்பட வேண்டும் என்பது மோசமான செயல் என கூறியுள்ளார். ஒரு நபர் இதேபோல தனக்கு ஒரு சம்பவம் நடந்ததாகவும் தான் ஒரு நேர்காணலுக்கு சென்றபோது மேலாளர் அவருடைய ஜாதியை சேர்ந்தவர் என்பதற்காகவே மற்றொரு நபரை தேர்வு செய்தார் என்றும் கூறியிருக்கிறார் . ஹெச்1பி விசாவில் அதிகம் செல்பவர்களே இந்தியர்கள் தான் அவர்களை இந்தியர்களே மோசமாக நடத்துகின்றனர் என்பது வருத்தப்பட வேண்டிய விஷயம் என மற்றொரு நபர் கூறியுள்ளார்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications