அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியற்றிய நாளில் இருந்து விசா மற்றும் குடியேற்ற விதிகளைத் தொடர்ந்து தளர்த்தி வரும் காரணத்தால் இந்தியர்களுக்குப் பெரிய அளவில் பலன் அளிக்கிறது. இந்த நிலையில் அமெரிக்க அரசு 2004 ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்து ஒரு சேவையை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வர திட்டமிட்டு வருகிறது.
அமெரிக்காவில் பணியாற்ற வேண்டும், அமெரிக்காவிலேயே குடியுரிமை பெற வேண்டும் என நினைக்கும் அனைத்து இந்தியர்களுக்கும் பலன் அளிக்கும் வகையில் பல அறிவிப்புகளை வெளியிட்ட ஜோ பைடன் அரசு, இன்று விசா ரினவல் முறையில் முக்கியமான மாற்றத்தைக் கொண்டு வரும் முறையைச் செயல்படுத்த உள்ளது.
இதன் மூலம் தற்போது அமெரிக்காவில் ஹெச்1பி மற்றும் எல்1 விசா-வில் பணியாற்றுவோர் சொந்த நாட்டுக்கு வராமலேயே விசா-வை ரினினவல் செய்துகொள்ள முடியும்.
அமெரிக்க அரசு
அமெரிக்க அரசு பல ஆயிரம் வெளிநாட்டு ஊழியர்களுக்குப் பலன் அளிக்கும் வகையில் சில ஹெச்1பி மற்றும் எல்1 விசா பிரிவில் இருப்பவர்களுக்கு மட்டும் "domestic visa revalidation" திட்டத்தை மீண்டும் அறிமுகம் செய்து ஒப்புதல் வழங்கத் திட்டமிட்டு வருகிறது.
சோதனை ஓட்டம்
அமெரிக்க அரசு "domestic visa revalidation" திட்டத்தின் சோதனை ஓட்டத்தை 2023 ஆம் ஆண்டுப் பிற்பகுதியில் செய்ய உள்ளது. இதன் வெற்றி மற்றும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு அடுத்த சில வருடத்தில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
விசா ரினிவல்
அமெரிக்காவில் 2004 வரையிலான காலகட்டத்தில் non-immigrant visas கீழ் சில பிரிவுகளுக்கு மட்டும் குறிப்பாக ஹெச்1பி விசா வைத்துள்ளவர்களுக்கு, அமெரிக்காவிலேயே domestic visa revalidation திட்டத்தின் மூலம் அமெரிக்காவிலேயே விசா ஸ்டாம்ப் செய்து ரினிவல் செய்யப்படும்.
விசா இண்டர்வியூவ்
ஆனால் 2004-க்கு பின்பு வெளிநாட்டு நாடு ஹெச்1பி மற்றும் எல்1 விசா ஊழியர்கள் அவர் அவர் சொந்த நாட்டிற்கு வந்து தான் விசா இண்டர்வியூவ்-க்கு சென்று பாஸ்போர்ட்-ல் விசா ஸ்டாம்ப் செய்து ரினிவல் செய்ய வேண்டும். இது தான் இன்று வரையில் கடைப்பிடிக்கும் முறை.
சொந்த நாடுக்குப் பயணம்
அனைத்து ஹெச்1பி விசா உரிமையாளர்களும், விசா ரினிவல் செய்ய வேண்டும் என்றால் உரிய நாளுக்குள் பாஸ்போர்ட்-ல் விசா ஸ்டாம்ப் செய்யப்பட வேண்டும். இதனால் இதற்காகவே ஹெச்1பி விசா ஊழியர்கள் அவசர அவசரமாகச் சொந்த நாட்டிற்குச் சென்று, திரும்ப அமெரிக்க வர வேண்டும்.
ஹெச்1பி விசா
பொதுவாக அமெரிக்க அரசு வெளிநாட்டில் இருந்து அந்நாட்டில் பணியாற்ற அனுமதி அளிக்கும் முக்கியமான விசா தான் இந்த ஹெச்1பி விசா. இந்த விசா மூலம் 3 வருடத்தில் அமெரிக்காவில் தங்கி பணியாற்ற முடியும், இது முடிந்த பின்பு 6 வருடத்திற்கு நீட்டிக்க முடியும். இந்த விசாவில் தான் ஏராளமான இந்திய ஐடி மற்றும் டெக் ஊழியர்கள் அமெரிக்காவில் பணியாற்ற செல்கின்றனர்.
domestic visa revalidation திட்டம்
தற்போதைய நிலையில் domestic visa revalidation திட்டத்தின் கீழ் வருடத்திற்கு எத்தனை விசா ரினிவல் செய்யப்படும் என்பதை அந்நாட்டு அரசு அதிகார தெரிவித்துள்ளார். மேலும் இந்தச் சோதனை திட்டம் மற்றும் அதன் விரிவாக்கத்தின் கீழ் தான் செய்யமுடியும். மேலும் இது non immigrant visa பிரிவுக்கு மட்டுமே அளிக்க முடியும் என அறிவித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications