டெல்லி: அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான வர்த்தக போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரக்கூடிய நிலையில் சில சீன நிறுவனங்கள் இந்தியாவில் தங்களுடைய தொழிலை விரிவாக்கம் செய்வதற்கு முன் வந்திருக்கின்றன.
சீனாவை சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் அத்தனை எளிதாக தங்களுடைய விற்பனையோ அல்லது உற்பத்தியையோ விரிவாக்கம் செய்து விட முடியாது. சீனாவை சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவை சேர்ந்த நிறுவனங்களோடு கூட்டு நிறுவனத்தை ஏற்படுத்தி கணிசமான அளவு பங்கையும் கட்டுப்பாட்டையும் இந்திய நிறுவனத்திடம் வழங்கினால் மட்டுமே அவர்களால் இந்தியாவில் எளிதாக தங்களுடைய உற்பத்தியையும் விற்பனையையும் மேற்கொள்ள முடியும்.

சீனாவை பொருத்தவரை அமெரிக்கா தான் அதற்கு மிகப்பெரிய சந்தையாக இருக்கிறது. ஆனால் தற்போது சீனா மற்றும் அமெரிக்கா இடையே ஏற்பட்டிருக்கும் இந்த வர்த்தக மோதல் பல்வேறு நிறுவனங்களின் விற்பனையை பாதிக்கும் என கணிக்கப்படுகிறது. இதன் காரணமாக சீன நிறுவனங்கள் இந்திய சந்தையில் தங்களை விரிவாக்கம் செய்வதற்கு முன் வந்திருக்கின்றன.
சீனாவை சேர்ந்த ஷாங்காய் ஹைலி (Shanghai Highly) நிறுவனம் வோல்டாஸ் நிறுவனத்தோடு இணைந்து கூட்டு நிறுவனத்தை ஏற்படுத்தி உற்பத்தி ஆலையை நிறுவுவதற்கு திட்டமிட்டு இருக்கிறதாம். அதேபோல ஹையர் (Haier) நிறுவனம் இந்தியாவில் கூட்டு நிறுவனத்தை உருவாக்கி தங்களுடைய விற்பனையை மேம்படுத்துவதற்கு முடிவு செய்து இருப்பதாக எக்னாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிடுகிறது. சீனா நிறுவனங்களுக்கு அமெரிக்காவும் இந்தியாவும் பெரிய சந்தைகளாக இருக்கின்றன.
தற்போது அமெரிக்க சந்தை கைவிட்டு போகும் சூழலில் இருப்பதால் இதுநாள் வரை இந்திய நிறுவனங்களோடு கூட்டு நிறுவனங்களை அமைக்க தயங்கி வந்த சீன நிறுவனங்கள் இந்திய சந்தையையாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக மத்திய அரசின் விதிமுறைகளுக்கு இணங்கி செயல்படுவதற்கு முன் வந்திருக்கின்றன. இதன்படி சீனாவின் மிகப்பெரிய கம்பரசர் உற்பத்தியாளரான ஷாங்காய் ஹைலி டாட்டாவுக்கு சொந்தமான வோல்டாஸ் நிறுவனத்தோடு இணைந்து கூட்டு நிறுவனத்தை ஏற்படுத்தி கம்ப்ரஸர் உற்பத்தியில் ஈடுபட இருக்கிறது.
இந்தியாவில் இந்த கூட்டு நிறுவனத்தின் பெரும்பாலான பங்கு வோல்டாஸ் நிறுவனத்திடம் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல இந்திய மின்னணு சாதன சந்தையில் மூன்றாவது இடத்தை பிடித்து இருக்கக்கூடிய ஹையர் நிறுவனம் இந்தியாவில் தங்கள் நிறுவன செயல்பாடுகளின் கணிசமான பங்கினை இந்திய நிறுவனத்தின் வழங்குவதற்கு முன் வந்திருக்கிறது.
அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தக மோதல்கள் சீன நிறுவனங்கள் இந்தியாவை அணுகும் போக்கை மாற்றி அமைத்துள்ளன என இந்த துறை சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். இந்திய சந்தையை இழந்து விடக்கூடாது என்பதற்காக தற்போது அரசின் கட்டுப்பாடுகளுக்கு இணங்க முன் வந்திருக்கின்றன என கூறுகின்றனர். இதற்கு முன்பு ஹையர் நிறுவனம் தங்கள் வசம் இருக்கும் பங்குகளில் 26 சதவீதத்தை மட்டுமே இந்திய நிறுவனத்திற்கு வழங்குவதாக இருந்தது தற்போது 55 சதவீதம் வரை இந்தியாவை சேர்ந்த நிறுவனத்திடம் வழங்க முன் வந்திருக்கிறதாம்.
More From GoodReturns

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

கச்சாஎண்ணெய் கையிருப்பு: அமெரிக்கா, சீனா, ஜப்பான் மத்தியில் இந்தியா எங்கே நிற்கிறது?

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!



Click it and Unblock the Notifications