ஹல்திராம்ஸ் ஸ்நாக்ஸ் நிறுவனத்தில் பெரும்பான்மையான பங்குகளைக் கையகப்படுத்துவதற்கான போட்டி கடுமையாகிறது. பெரிய தனியார் முதலீட்டு நிறுவனங்கள் இதில் களம் இறங்கியுள்ளன. இதுவரை இந்தியாவில் நடந்த மிகப்பெரிய தனியார் முதலீட்டு கையகப்படுத்துதலாக இது இருக்கலாம்.
கிலோ 2 பைசாவுக்கு பூஜியா எனப்படும் ஒரு தின்பண்டத்தை விற்பனை செய்த ஹல்திராம்ஸ் தற்போது டாடா முதல் பன்னாட்டு முதலீட்டு நிறுவனங்கள் வரையில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகிறது.

டாடா குழுமம் ஹல்திராம்ஸ் நிறுவனத்தின் பெரும்பகுதி பங்குகளை வாங்க ஆர்வம் காட்டியிருப்பதாகத் தகவல் வந்த நிலையில், இதைப் பல மாதங்களுக்குப் பின்பு டாடா குழுமம் மறுத்தது. அப்போது ஹல்திராம்ஸ் அதிகப்படியாகத் தொகைக்கு மதிப்பு செய்யப்படும் காரணத்தால் டாடா குழுமம் வாங்க மறுத்ததாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில் பிளாக்ஸ்டோன் தலைமையிலான கூட்டணிக்கும், பேயின் கேப்பிட்டல் மற்றும் சிங்கப்பூரின் டெமாசெக் கூட்டணிக்கும் ஹல்திராம்ஸ் பங்குகளைக் கைப்பற்றுவதில் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேயின் கேப்பிட்டல் மற்றும் சிங்கப்பூர் டெமாசெக் கூட்டணி, ஹல்திராம்ஸ் நிறுவனத்தை ரூ.66,400 கோடி முதல் ரூ.70,500 கோடி வரை மதிப்பீடு செய்து, கடந்த வாரம் ஒரு தொகையை முன்வைத்து ஹல்திராம்ஸ் பங்குகளை வாங்க Non-binding Offer சமர்ப்பித்துள்ளது.
தனித்தனி பேச்சுவார்த்தை: இந்த இரண்டு நிறுவனங்களும் ஆரம்பத்தில், 87 ஆண்டுகள் பழமையான ஹல்திராம்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் குடும்பத்தினருடன் தனித்தனியாகப் பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால் போட்டி அதிகமான காரணத்தால் தற்போது இணைந்து போட்டிப்போட முடிவு செய்துள்ளது.
பிளாக்ஸ்டோன் கூட்டணி: உலகின் மிகப்பெரிய தனியார் முதலீட்டு நிறுவனமான பிளாக்ஸ்டோன், அபுதாபி முதலீட்டு ஆணையம் (ADIA) மற்றும் சிங்கப்பூர் அரசின் சவ்ரின் வெல்த் பண்ட் (GIC) ஆகியவற்றுடன் இணைந்து, ஹல்திராம்ஸ் நிறுவனத்தின் 76% பங்குகளை வரை கையகப்படுத்துவதற்கான ஏலத்தில் பங்கேற்கிறது.
ஹல்திராம்ஸ் கருத்து: ஹல்திராம்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கே.கே.சுட்டானி, "இது குறித்து நிறுவனத்திடம் எந்த கருத்தும் இல்லை" என்று தெரிவித்துள்ளார். இதனால் முதலீட்டு விருப்பம், நிறுவனங்கள் முடிவு ஆகியவை பற்றி உறுதியான தகவல்களை அளிக்க முடியாது.
முதல் தொழில்முறை தலைமை: கே.கே.சுட்டானி முன்னாள் டாபர் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆவார். கடந்த ஆண்டு தான் ஹல்திராம்ஸ்-ன் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதுவே இந்நிறுவனத்தின் வரலாற்றில் முதல் முறையாக, தொழில்முறை நிர்வாகி தலைமை பொறுப்பு ஏற்பது.
குடும்ப உறுப்பினர் இல்லாத தலைமை: இதற்கு முன்னதாக, ஹல்திராம்ஸ் நிறுவனத்தை அதை நிறுவிய குடும்பத்தினரே நிர்வகித்து வந்தனர். சுட்டானியின் நியமனம், நிறுவனத்தின் செயல்பாட்டில் மாற்றத்தைக் குறிக்கிறது.
பெரிய வளர்ச்சி: இந்தியாவின் மிகப்பெரிய ஸ்நாக்ஸ் உணவு நிறுவனங்களில் ஒன்றான ஹல்திராம்ஸ், தனியார் முதலீட்டு நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது நிறுவனத்தின் வளர்ச்சிப் பாதையைக் குறிக்கிறது.


Click it and Unblock the Notifications