ராஜஸ்தான்: பல்வேறு தொழில் மேற்கொண்டு அதில் சரிவை கண்டவர்களுக்கு சில வெற்றிக் கதைகளை கேட்கும்போது ஒரு உத்வேகம் கிடைக்கும். அப்படி ஒரு வெற்றி கதை தான் இது. ஹல்திராம்ஸ் இந்தியர்கள் மத்தியில் புகழ்பெற்ற ஒரு தின்பண்ட பிராண்ட்.
பெரிய சூப்பர் மார்க்கெட்டுகள் தொடங்கி எங்கு சென்றாலும் ஹல்திராம்ஸின் தின்பண்டங்களை நம்மால் காண முடியும். ஒரு சிறிய கடையாக தொடங்கப்பட்ட ஹல்திராம்ஸ் எப்படி மிகப்பெரிய பிராண்ட் ஆக மாறியது என்பதன் சுவாரசியமான கதையை இங்கே நாம் பார்க்கலாம்.

1937 ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் கங்கா பிஷன் அகர்வால் என்பவர் தன்னுடைய அத்தையிடமிருந்து தின்பண்டங்கள் தயாரிப்பதை கற்றுக் கொள்கிறார். அவ்வாறு தான் கற்றுக்கொண்ட தின்பண்டங்களை அவர் மக்களுக்கு விற்பனை செய்ய தொடங்குகிறார்.
தன்னுடைய தின்பண்டங்களுக்கு "டங்கர் சேவ்" என பெயரிடுகிறார். இதன் மூலம் அந்த பகுதியில் பிரபலமாகும் கங்கா பிஷன் அகர்வாலை அப்பகுதி மக்கள் ஹல்திராம் என அழைக்கின்றனர். பின்னாளில் இந்த பெயரிலேயே ஒரு கடையை தொடங்குகிறார் அகர்வால். இவர் கடையில் கிடைக்கும் பூஜியாவிற்கு ராஜஸ்தான் முழுவதும் ரசிகர்கள் கிடைக்கின்றனர்.
தொடக்கத்தில் ஒரு கிலோ பூஜியா 2 பைசாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. டிமாண்ட் அதிகரிக்க அதிகரிக்க விலை 25 பைசா என மாறுகிறது. இப்படி படிப்படியாக தொழில் விரிவடைந்து ராஜஸ்தானின் பல பகுதிகளில் ஹல்திராம்ஸ் ஸ்னேக்ஸ் கடை திறக்கப்படுகிறது. இதனை அடுத்து கொல்கத்தா,நாக்பூர், டெல்லி என இந்தியாவின் முக்கிய நகரங்களில் கடைகள் நிறுவப்படுகின்றன.
ஹல்திராம்ஸின் வெற்றிக்கு காரணம், பாக்கெட்டுகளில் தின்பண்டங்களை அடைத்து சூப்பர் மார்க்கெட்டுகளிலும் உணவகங்களிலும் விற்பனை செய்ய தொடங்கியது தான். இதற்காக முக்கிய நகரங்களில் இவர்கள் ஆலைகளையும் நிறுவினர்.
இனிப்பு, காரம், ரெடி டு ஈட் வகையிலான பொருட்கள் என 500 வகையான பொருட்களை தற்போது விற்பனை செய்து வருகிறது. இந்தியா மட்டுமின்றி பிரிட்டன், அமெரிக்கா ,ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் இந்த தின்பண்டங்கள் மிக ஜோராக விற்பனையாகி வருகின்றன. தற்போது பிரிட்டானியா உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களுடன் போட்டி போட்டுக் கொண்டு ஹல்திராம்ஸும் தங்களுடைய பொருட்களை விற்பனை செய்து வருகிறது.
2024 ஆம் நிதியாண்டில் 14,500 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது இந்த நிறுவனம். கடந்த ஐந்து ஆண்டுகளில் இவர்களின் வணிகம் ஆண்டுதோறும் 18 சதவிகிதம் என வளர்ச்சியை கண்டுள்ளது. பொதுவாக இவர்கள் தங்களது தயாரிப்புகளில் 14 முதல் 15 சதவீதம் வரை லாபம் காண்கிறார்கள்.
தற்போது இந்திய உலகின் முக்கிய ஈக்விட்டி ஃபண்ட் நிறுவனங்களான பிளாக் ஸ்டோன் உள்ளிட்ட மூன்று நிறுவனங்கள் ஹல்திராம்ஸ் நிறுவனத்தை வாங்குவதற்கு தயாராகி வருகின்றன. நிறுவனத்தில் உள்ள 70% பங்குகளை இந்த நிறுவனங்கள் வாங்க தயாராக இருப்பது தெரியவந்துள்ளது.
இதன் மூலம் ஹல்திராம்ஸ் நிறுவனத்தின் மதிப்பு என்பது 70 ஆயிரம் கோடிகள் வரை உயரக்கூடும் என எக்னாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 2023ஆம் ஆண்டில் டாடா குழுமம் இதனை வாங்க முயற்சி செய்தது ஆனால் அந்த வாய்ப்பு தவறிப்போனது.
Story written by: Devika
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications