பாலஸ்தீன போராளிகள் அமைப்பான ஹமாஸ், காசா பகுதி வழியாக இஸ்ரேலுக்குள் ஊடுருவியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. காசா பகுதியிலிருந்து சரமாரியாக 5000 மேல் ஏவுகணைகள் இஸ்ரேல் நாட்டில் ஏவப்பட்டதாகவும், இஸ்ரேலில் குறைந்தது 4 பேர் இதன் மூலம் இறந்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன.
காசா பகுதியில் பல இடங்களிலிருந்து 5,000 ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளதாகவும், காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்களைப் போரிடுமாறும் அழைப்பு விடுத்ததாக ஹமாஸின் மூத்த இராணுவத் தளபதி முகமது டெய்ஃப் தெரிவித்தார் எனக் கார்டியன் பத்திரிக்கை கூறுகிறது.

இஸ்ரேலின் அஷ்கெலோனில் உள்ள காசாவில் இருந்து ஏவுகணை சரமாரியாக ஏவப்பட்டு வரும் வேளையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாதுகாப்பு அதிகாரிகளின் அவசர கூட்டத்திற்குப் பின் இஸ்ரேல் ராணுவம் State of War நிலையில் இருப்பதாக அறிவித்தார்.
தெற்கு இஸ்ரேல் பகுதியில் உள்ள நகரங்களில் பாலஸ்தீனிய போராளிகளுக்கும், அந்நாடு பாதுகாப்புப் படையினருக்கும் துப்பாக்கிச் சண்டை நடப்பதாக இஸ்ரேலிய ஊடகங்கள் கூறுகிறது.
ஹமாஸ் அமைப்பின் இந்தத் திடீர் தாக்குதல் 2021 இல் இஸ்ரேலும் ஹமாஸும் 10 நாள் போருக்குப் பிறகு நடந்த மிக மோசமான சம்பவமாக இது விளங்குகிறது. ஹமாஸ் இயக்கத்தின் இராணுவப் பிரிவான Ezz Al-Din Al Qassam militia வின் போராளிகளால் கடலோர காசா பகுதியிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஒரு ஏவுகணை ஏவப்பட்ட புகைப்படங்கள் அதிர்ச்சி கொடுக்கிறது.
இஸ்ரேல் மக்கள் Simchat Torah பண்டிகை விடுமுறையின் கடைசி நாளில் தூங்கிக்கொண்டு இருந்த போது ஏவுகணை தாக்குதலுக்கு மத்தியில் மொத்த தென் இஸ்ரேல் மக்களும் சைரன் சத்தத்துடன் எழுந்து பாதுகாப்பான இடத்திற்கு ஓடினர்.
இஸ்ரேலில் இந்திய முதலீடுகள்: ஏப்ரல் 2000 முதல் மே 2023 வரையில் இந்தியா சுமார் 383 மில்லியன் டாலர்களை இஸ்ரேல் நாட்டில் முதலீடு செய்துள்ளது. இந்திய நிறுவனங்கள் பெரும்பாலும் நிறுவன இணைப்புகள் மற்றும் கையகப்படுத்துதல்கள், கிளை அலுவலகங்களைத் திறப்பதன் மூலம் இஸ்ரேல் நாட்டில் வர்த்தகத்தைத் துவங்குகிறது.
உதாரணமாக டிசிஎஸ் 2005 இல் இஸ்ரேலில் செயல்படத் தொடங்கியது, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா 2007 இல் டெல் அவிவ் பகுதியில் ஒரு கிளையைத் திறந்தது. ஜெயின் இரிகேஷன் 2012 இல் இஸ்ரேலிய நீர்ப்பாசன உபகரண உற்பத்தி நிறுவனமான NaanDan-ஐ முழுமையாகக் கையகப்படுத்தியது. இஸ்ரேலின் டாரோ பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸில் சன் பார்மா 66.7% பங்குகளைக் கொண்டுள்ளது.
இன்போசிஸ், டெக் மஹிந்திரா மற்றும் விப்ரோ இன்ஃப்ராஸ்ட்ரக்சர் இன்ஜினியரிங் ஆகியவை 2015-2016 காலகட்டத்தில் இஸ்ரேலில் குறிப்பிடத்தக்க வகையில் சில முக்கிய நிறுவனங்களைக் கையகப்படுத்தி, நிறுவனங்களில் முதலீடு செய்தது.
டிசம்பர் 2022 இல், இந்தியாவின் அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டல லிமிடெட் (APSEZ) கூட்டமைப்பு, இஸ்ரேல் அரசிடம் இருந்து ஹைஃபா போர்ட் லிமிடெட் நிறுவனத்தைக் கையகப்படுத்த இஸ்ரேலில் சுமார் 785 மில்லியன் டாலர் முதலீடு செய்தது. ஹைஃபா துறைமுகத்தைத் தனியார்மயமாக்குவதற்கான டெண்டரை 1.18 பில்லியன் டாலர் ஏலத்தில் வென்ற கடோட் குழுமம் பெற்ற நிலையில், அதானி போர்ட்ஸ் உடன் இணைந்து கைப்பற்றியது.
இதைத் தாண்டி டாடா குழுமம் 2013 முதல் இஸ்ரேல் நாட்டில் தொழில்நுட்ப சேவைக்காகப் பல முதலீடுகளைச் செய்துள்ளது. மேலும் விப்ரோ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், L&T Technology, ஹைதராபாத்-ஐ சேர்ந்த Anthill Ventures, இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன், ஓலா எலக்ட்ரிக் ஆகியவையும் பல பிரிவுகளில் முதலீடு செய்துள்ளது.

இதேபோல் இஸ்ரேல் நாட்டு நிறுவனங்களும் இந்தியாவில் பல முதலீடுகளையும், கூட்டணிகளையும் கொண்டு இயங்கி வருகிறது. இந்தியாவில் 12 மாநிலத்தில் முழுமையாகச் செயல்படும் சென்டர் ஆப் எக்சலென்ஸ் பல துறைகளைச் சார்ந்து இயங்கி வருகிறது.
இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு முத்துக்கள் மற்றும் விலையுயர்ந்த கற்கள், டீசல், இரசாயன மற்றும் கனிம பொருட்கள், இயந்திரங்கள் மற்றும் மின் உபகரணங்கள், பிளாஸ்டிக், ஜவுளி மற்றும் ஆடை பொருட்கள், அடிப்படை உலோகங்கள், போக்குவரத்து உபகரணங்கள், விவசாயப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இஸ்ரேலில் இருந்து இந்தியாவிற்கு முத்துக்கள் மற்றும் விலைமதிப்பற்ற கற்கள், இரசாயன மற்றும் கனிம/உர பொருட்கள், இயந்திரங்கள் மற்றும் மின் உபகரணங்கள், பெட்ரோலிய எண்ணெய்கள், பாதுகாப்பு, இயந்திரங்கள் மற்றும் போக்குவரத்துச் சாதனங்கள் ஆகியவை இறக்குமதி செய்யப்படுகிறது.
1992 இல் இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையே அரசுமுறை உறவுகள் நிறுவப்பட்டதிலிருந்து, இருதரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகள் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியாவின் பெரும்பாலான முதலீடுகள் தலைநகர் டெல் அவிவ் மற்றும் வடக்கு இஸ்ரேல் பகுதிகளில் இருக்கும் காரணத்தால் எவ்விதமான பாதிப்புகளும் இல்லை.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications