உங்ககிட்ட 2 பான் கார்டு இருக்கா? முதல்ல இதை செஞ்சிடுங்க.. இல்லாட்டி பெரும் பஞ்சாயத்து வரும்..!!

சென்னை: ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகளை வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகும். இதனை பின் பற்றாமல் இருக்கும் நபர்களுக்கு ரூ. 10000 வரை அபராதமாக வசூலிக்கப்படுகிறது. எனவே, இந்தப் பதிவில்,இரண்டு பான் கார்டுகள் வைத்திருப்பவர்கள் எவ்வாறு ஒன்றை திருப்பி செலுத்துவது என்பது குறித்து பார்ப்போம்.

உங்களின் வங்கி சார்ந்த அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் தேவைப்படும் முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக இருப்பது பான் கார்டு. உங்கள் வங்கி கணக்குடன், பான் கார்டு கட்டாயம் இணைந்திருக்க வேண்டும். இதன் மூலம் உங்களது அனைத்து பண பரிவர்தனைகளையும் அறிந்து கொள்ளும் பொருட்டு வருமான வரித்துறையினரால் வழங்கப்பட்ட ஆவணம் ஆகும். இந்நிலையில் இதனை சிலர் தவறாக பயன்படுத்தும் நோக்கில் இரண்டு பான் கார்டுகளைப் பெற்று பயன்படுத்தி வருகின்றனர்.

உங்ககிட்ட 2 பான் கார்டு இருக்கா? முதல்ல இதை செஞ்சிடுங்க.. இல்லாட்டி பெரும் பஞ்சாயத்து வரும்..!!

பிரிவு 139A வின்படி தனி நபர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளை வைத்திருக்கக் கூடாது என்று வருமானவரிச் சட்டம் சொல்கிறது. இதன்படி இல்லாமல் பான் கார்டுகளை வைத்திருக்கும் நபர்களுக்கு ரூபாய் 10,000 முதல் அபராதம் விதிக்கப்படும். சில நபர்கள் இந்த டூப்ளிகேட் பான் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் அவற்றை திருப்பித் தருவது சில பேருக்கு, பெரும் சிக்கலாக இருக்கிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகள் வைத்திருப்பது சட்டத்திற்கு எதிரானது மற்றும் இதற்கு நிறைய அபராதம் விதிக்கப்படலாம். எனவே, ஒன்றை திருப்பித் தருவது மிகவும் அவசியமாகும்.

இது குறித்து பேசிய இந்தியன் லா பார்ட்னர் நிதி சிங், பிரிவு 272B யின் கீழ், பிரிவு 139A வின் விதிகளுக்கு ஒரு நபர் இணங்கத் தவறினால், அத்தகைய நபர்களுக்கு ரூ. 10,000 அபராதமாக வசூலிக்கப்படும். மேலும், உங்களிடம் இரண்டு பான் கார்டுகள் இருந்தால் ஒரு பான் கார்டை நீங்கள் திருப்பி செலுத்த வேண்டும். இதனை நீங்கள் NSDL ஆன்லைன் போர்ட்டலில் அல்லது மதிப்பீட்டு அதிகாரிக்கு ஒரு கடிதத்தை சமர்ப்பிக்கும் மூலமாகவோ, நீங்கள் திருப்பி செலுத்தலாம் என்று கூறியுள்ளார்.

இவ்வாறு டூப்ளிகேட் பான் கார்டு பயன்படுத்துவோருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கிய போதிலும், சில தனிநபர்கள் தங்கள் டூப்ளிகேட் பான் கார்டுகளை திருப்பி செலுத்துவதில் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததே காரணங்களாக கூறப்படுகிறது.

பான் கார்டை ஒப்படைப்பதற்கான ஆஃப்லைன் செயல்முறை:

ஸ்டேப் 1: "Request For New PAN Card Or/And Changes Or Correction in PAN Data" படிவத்தைப் பெற்று, பூர்த்தி செய்யவும்.

ஸ்டேப் 2: பூர்த்தி செய்யப்பட்ட படிவம் மற்றும் தேவையான ஆவணங்களுடன் அருகிலுள்ள NSDL சேகரிப்பு மையத்தைப் பார்வையிடவும்.

ஸ்டேப் 3: படிவத்தை சமர்ப்பித்தவுடன் அக்னாலேஜ்மென்ட் ஸ்லிப்பை பெறுங்கள்.

ஸ்டேப் 4: அக்னாலேஜ்மென்ட் ஸ்லிப்பை, 15 நாட்களுக்குள் NSDLக்கு அனுப்பவும்.

ஸ்டேப் 5: டூப்ளிகேட் பான் சிக்கலை விளக்கி, ரத்து செய்யக் கோரும் கடிதத்தை உங்கள் மதிப்பீட்டு அதிகாரிக்கு எழுதுங்கள். மேலும், உங்கள் உள்ளூர் வருமான வரி மதிப்பீட்டு அதிகாரியைப் பார்வையிடவும், நகல் PAN தொடர்பான கடிதத்தை சமர்ப்பித்து, ரத்துசெய்யக் கோரவும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+