தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் ஹன்சிகா மோத்வானி. சின்ன குஷ்பூ என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர். குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய நடிப்பு பயணத்தை தொடங்கியவர், பின்னாளில் நடிகையாக உயர்ந்தார். தமிழில் இவர் நடித்த பெரும்பாலான படங்கள் ஹிட்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த ஹன்சிகா மோத்வானி முதன் முதலில் சகலக பூம்பூம் சீரியலில் குழந்தை நட்சத்திரமாக தோன்றினார். இதனை அடுத்து பல்வேறு ஹிந்தி சீரியல் மற்றும் படங்களில் நடித்தார். 2007 ஆம் ஆண்டு தெலுங்கு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதனை அடுத்து தமிழ் தெலுங்கு ஹிந்தி என பல்வேறு படங்களிலும் நடித்தார். தமிழில் தனுஷுடன் மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

இதனை அடுத்து எங்கேயும் எப்போதும், ரோமியோ ஜூலியட், நடிகர் விஜய்யுடன் வேலாயுதம் , பின்னர் ஒரு கல் ஒரு கண்ணாடி என பல்வேறு திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு மும்பையை சேர்ந்த தொழிலதிபர் சோஹைல் கதூரியாவை திருமணம் செய்து கொண்டார். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு அரண்மனையில் பிரம்மாண்டமாக இவர்களுடைய திருமணம் நடைபெற்றது.

திருமணமான நான்கு ஆண்டுகளிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இதனை அடுத்து இருவரும் பரஸ்பரம் சம்மதத்தோடு திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ள விரும்பினர். 2024 ஆம் ஆண்டிலிருந்து இருவரும் பிரிந்து தனித்தனியாகவே வசித்து வந்தனர். இந்த சூழலில் மும்பை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி விண்ணப்பம் செய்தனர்.
இருவரின் சம்மதத்தின் அடிப்படையிலும் மும்பை குடும்ப நல நீதிமன்றம் ஹன்சிகா மோத்வானி மற்றும் கணவருக்கு சட்டரீதியாக விவாகரத்து வழங்கி உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தன்னுடைய கணவரிடமிருந்து சட்ட ரீதியாக விவாகரத்து பெற்றிருக்கும் ஹன்சிகா மோத்வானி ஜீவனாம்சமாக அவரிடம் எதுவுமே கேட்கவில்லை என்பதுதான் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
வழக்கமாகவே விவாகரத்து வழக்கு குறிப்பாக பிரபலங்களின் விவாகரத்து வழக்கு என்றால் அந்த பெண்ணுக்கு எவ்வளவு தொகை ஜீவனாம்சமாக கிடைக்கிறது என்பதுதான் அனைவராலும் உற்று நோக்க கூடிய ஒரு விஷயமாக இருக்கும். ஆனால் ஹன்சிகா மோத்வானி ஒரு ரூபாய் கூட ஜீவனாம்சம் வேண்டாம் எனக் கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார்.
1991 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தவர் ஹன்சிகா மோத்வானி. இவருடைய தந்தை ஒரு பிசினஸ்மேன், தாயார் ஒரு பல் மருத்துவர். வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் தான் திரைத்துறையிலும் இவருக்கு நல்ல வருமானம் கிடைத்தது. கிட்டத்தட்ட 50 திரைப்படங்கள் வரை இவர் நடித்த முடித்திருக்கிறார். இவரின் சொத்து மதிப்பு 37 கோடி ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
திரைப்படங்களில் நடிப்பது மற்றும் விளம்பரங்களில் தோன்றுவது உள்ளிட்டவற்றின் மூலம் இவருக்கு வருமானம் கிடைக்கிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இவர் பெரிய அளவில் திரைப்படங்களில் தோன்றவில்லை. இவருக்கு சொந்தமாக மும்பையில் ஒரு வீடு இருக்கிறது. ரியல் எஸ்டேட் முதலீடு, தொழில் முதலீடு என முதலீட்டை பன்முகப்படுத்தி வைத்துள்ளார். இதன் மூலம் இவருக்கு ஒரு கணிசமான வருமானம் வருகிறது. இனி இவர் திரைப்படங்களிலும் பழைய படி கவனம் செலுத்துவார் என சொல்லப்படுகிறது.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications