இந்தியா ஐடி துறையில் டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல் போன்ற டாப் ஐடி சேவை நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் அனைத்து ஐடி நிறுவனங்களும் மூன்லைட்டிங்-கிற்கு எதிரான நடவடிக்கை எடுத்து வருகிறது.
குறிப்பாக ஊழியர்கள் மத்தியில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே மற்றொரு நிறுவனத்தில் பணியாற்றினால் பணிநீக்கம் செய்யப்படும் என்பதைக் காட்ட வேண்டும் என்பதற்காக முதலில் மூன்லைட்டிங் செய்து சிக்கும் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது Happiest Minds டெக்னாலஜிஸ் நிறுவனமும் மூன்லைட்டிங் செய்த ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
ஐடி சேவை நிறுவனங்கள்
இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் Happiest Minds டெக்னாலஜிஸ் முன்லைட்டிங் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது ஊழியர்களின் வேலை ஒப்பந்த விதிமுறைகளை மீறும் நடவடிக்கையாகும் எனத் தெரிவித்துள்ளது.
Happiest Minds டெக்னாலஜிஸ்
இது மட்டும் அல்லாமல் Happiest Minds டெக்னாலஜிஸ் நிறுவனம் கடந்த 6-12 மாதத்தில் மூன்லைட்டிங் செய்த பல ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. அதாவது ஒரு வேலையில் இருந்துகொண்டே மற்றொரு நிறுவனத்தில் ப்ரீலான்ஸ் முறையிலோ அல்லது ஒப்பந்த அடிப்படையிலோ பணியாற்றுவது தான் மூன்லைட்டிங்.
லாபம், வருவாய்
Happiest Minds டெக்னாலஜிஸ் நிறுவனம் செப்டம்பர் காலாண்டில் 33.7 சதவீத லாப உயர்வையும், 31.1 சதவீத வருவாய் உயர்வையும் பெற்றுள்ளது. இக்காலகட்ட முடிவில் Happiest Minds நிறுவனத்தில் 4581 ஊழியர்களைக் கொண்டு உள்ளது.
முன்லைட்டிங் பணிநீக்கம்
இந்திய ஐடி சேவைத் துறையில் முன்லைட்டிங் செய்தாக முதன் முதலில் சுமார் 300 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது. இதைத் தொடர்ந்து இன்போசிஸ், தற்போது Happiest Minds பணிநீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
இன்போசிஸ் முடிவு
முன்லைட்டிங் பிரச்சனையை இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் கடுமையான கட்டுப்பாடுகள் விதிமுறைகள் மூலம் எதிர்கொண்டு வரும் நிலையில் இன்போசிஸ் நிறுவனம் மட்டும் தனது ஊழியர்களுக்கு ப்ரீலான்சிங் வேலையைச் செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.
More From GoodReturns

இன்போசிஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் புது CEO.. சலில் பாரிக் நிலைமை என்ன..?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications