உலகம் முழுக்க நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், ஐடி நிறுவனங்கள் பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றன. இதன் காரணமாக கூகுள் தொடங்கி மைக்ரோசாப்ட், விப்ரோ என பல நிறுவனங்களும் பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. பெரும் நிறுவனங்களே இப்படி எனில் சிறு சிறு நிறுவனங்கள் பெரும் அழுத்தத்தினை எதிர்கொண்டுள்ளன.
பல நிறுவனங்களும் சரிவினை எதிர்கொள்ள முடியாமல் நிறுவனத்தினை விற்பனை செய்யும் அளவுக்கு தள்ளப்பட்டுள்ளன.
ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ்& SMI
ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம், ஸ்ரீ மூகாம்பிகா இன்ஃபோசொயூசன்ஸ் (SMI) நிறுவனத்தின் 100% பங்கினையும் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. மதுரையை தலைமையிடமாகக் கொண்ட இந்த லாபகரமான நிறுவனத்தினை 111 கோடி ரூபாய்க்கு வாங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நிபுணத்துவம் கொண்ட நிறுவனம்
ஸ்ரீ மூகாம்பிகா இன்ஃபோசொயூசன்ஸ் (SMI) நிறுவனம் அதன் விரைவான செயல்பாடுகள், தரமான சாப்ட்வேர் சேவை என மேம்படுத்தப்பட்ட சேவைகளை செய்து வரும் நிறுவனமாகும். இந்த நிறுவனம் பல ஆண்டுகளாகவே ஹெல்த்கேர் துறையில் ஆழமான நிபுணத்துவம் கொண்ட ஒரு நிறுவனம் என ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் தெரிவித்துள்ளது.
திறமையான குழு
இது குறித்து ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸின் நிர்வாக தலைவர் & CFO வெங்கட்ராமன் நாரயணன், ஸ்ரீ மூகாம்பிகா இன்ஃபோசொயூசன்ஸ் ஹெல்த்கேர் துறையில் நிபுணத்துவம் பெற்ற ஒரு திறமையான குழுவை கொண்ட ஒரு நிறுவனமாகும். தொலை நோக்கு பார்வை கொண்ட இந்த நிறுவனத்தினை எங்கள் நிறுவனத்துடன் இணைப்பதில் நாங்கல் பெருமை அடைகிறோம்.
எத்தனை ஊழியர்கள்?
இந்த நிறுவனத்தில் 400 ஊழியர்கள் உள்ளதாகவும், இதன் ஆண்டு வருவாய் விகிதம் 9 மில்லியன் டாலர் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர். இது வலுவான லாபகரமான நிறுவனமாகும். இந்த நிறுவனத்தினை எங்கள் குழுமத்திற்கு வரவேற்பதில் நாங்கள் மிக மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் இணைந்து எங்கள் வாடிக்கையாளர்களுக்கு இன்னும் சிறந்த ஸ்வையை அளிப்போம். இது மதுரை மற்றும் கோயம்புத்தூர் என டயர்2 நகரங்களில் வளர்ச்சி கண்டு வரும் இந்த நிறுவனம் தொலை நோக்கு பார்வையுடன் உள்ளதாகவும் வெங்கராமன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் பங்கு விலை
ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த புதன் கிழமையன்று 1.33% சரிவினைக் கண்டு, 865 ரூபாய் என்ற லெவலில் முடிவடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications