அண்மையில் ஒரு இளம் பெண் பிரிட்டனில் தனக்கு இருந்த நல்ல வேலை வாய்ப்பை விட்டுவிட்டு இந்தியாவிற்கு திரும்பி இருப்பது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பரூல் என்ற எக்ஸ் தள பயனாளர் ஒருவர் நான்கு மாதங்களுக்கு முன்னர் தன்னுடைய பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டிருந்தார். அதில் தான் பிரிட்டனில் வேலை செய்து வருவதாகவும் மீண்டும் இந்தியாவுக்கே திரும்பி விடலாமா என யோசிப்பதாகவும் கூறி இருந்தார். நிச்சயமாக இந்தியாவில் எனக்கு இங்கு கிடைக்கும் அளவு ஊதியம் கிடைக்காது. ஆனால் அங்கே நான் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருப்பேன். என்னுடைய தாய் நாட்டை நான் எப்பொழுதும் மிஸ் பண்ண மாட்டேன் என கூறியிருந்தார்.
இப்படி ஒரு முடிவை எடுப்பதற்கு என்னை சுற்றி இருப்பவர்கள் நான் ஒரு முட்டாள் என கூறலாம், ஏனெனில் என்னிடம் ஐந்து ஆண்டுகளுக்கான விசா இருக்கிறது. இதன் மூலம் எனக்கு பிரிட்டனில் குடியுரிமை கூட கிடைப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால் அதற்காக நான் எவ்வளவு செலவிட வேண்டி இருக்கிறது தெரியுமா. நான் என்னுடைய இந்திய பாஸ்போர்ட்டை கைவிட தயாராக இல்லை என கூறி இருந்தார். அவரது இந்த பதிவு சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை பெற்றது.

உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் இந்தியா திரும்பி விடுங்கள் என சிலர் கருத்து பதிவிட்டு இருந்தனர். இந்தியாவிலும் உங்களுக்கு நல்ல ஊதியத்துடன் பணி கிடைக்கும் நீங்கள் முயற்சி செய்து பாருங்கள் என ஒரு பயனாளர் பதிவிட்டு இருந்தார். ஒரு பயனாளர் உடனடியாக அப்படி ஒரு முடிவினை எடுக்க முடியாது. சிறிது காலம் விடுப்பு எடுத்துவிட்டு இந்தியா வந்து ஒரு மாதம் தங்கி இருங்கள். அதன் பின்னர் முடிவு செய்யுங்கள் என கூறியிருந்தார்.
இதனிடையே பரூல் நான்கு மாதங்கள் கழித்து மீண்டும் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் நான் என்னுடைய வேலையை விட்டுவிட்டேன். நான் மீண்டும் இந்தியாவுக்கு திரும்புகிறேன் இந்த முடிவு என்னுடைய வாழ்க்கையை மாற்றி அமைக்க போகிறது. மிகுந்த தைரியத்துடன் தான் நான் இப்படி ஒரு முடிவினை எடுத்து இருக்கிறேன் என பதிவு செய்துள்ளார். வெளிநாட்டு வேலை அதிக சம்பளம் ஆகியவற்றை விட என்னுடைய தனிப்பட்ட மகிழ்ச்சி தான் எனக்கு முக்கியமாக தோன்றுகிறது என கூறியுள்ளார். அவரது பதிவு வெளிநாட்டு வேலை மற்றும் அங்கே நிலவும் சூழல்கள் குறித்து சமூகவலைதளங்களில் விவாதத்தை எழுப்பியுள்ளது.
தற்போதைய சூழலில் பிரிட்டனை பொறுத்தவரை வேலை வாய்ப்பு மிகவும் சவாலானதாக மாறிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரிட்டனின் தற்போது வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ளது .நிறுவனங்கள் ஆட்களை வேலைக்கு சேர்ப்பதை குறைத்துள்ளது என ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவிக்கிறது .
Written by: Devika
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications