ஆனந்த் மஹிந்திரா. கடந்த சில மாதங்களாக நம்மை வீட்டுச் சிறையில் வைத்திருக்கும் கொரோனா வைரஸ் சிக்கல் பெரிதாக இந்தியாவில் வருவதற்கு முன்பே, எல்லோருக்கும் வெண்டிலேட்டர் கொடுக்க வேண்டும் எனச் சொன்னவர்.
அவ்வப் போது ட்விட்டரின் தன் ஜாலி கருத்துக்களை பகிர்ந்து மக்களோடு மக்களாக இருக்கும் பில்லியனர்.
இப்போது கூட தன் பங்குக்கு மஹிந்திரா கம்பெனியின் ரிசார்ட்களை எல்லாம் கொரோனா மருத்துவ சிகிச்சைக்கு கொடுத்து இருப்பதாகச் செய்திகள் வெளி வந்து இருக்கின்றன.
மேஜிக் டீல்
இப்படி ஆனந்த் மஹிந்திராவைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம். இவர் வியாபார திறமைக்கும் பல உதாரணங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று தான் இவர் செய்து முடித்த டீல்கள். அப்படி இவர் செய்த மேஜிக் டீல்களில் சிலவற்றை பற்றித் தான் விரிவாகப் பார்க்க இருக்கிறோம். அதற்கு முன் ஒரு குட்டி இண்ட்ரோ.
வரலாறு
ஜெகதீஷ் சந்திர மஹிந்திரா. இந்த பெயரை எங்கோ கேள்விப்பட்டது போல் இருக்கிறதா? அவர் தான் மஹிந்திரா & மஹிந்திரா குழுமத்தின் நிறுவனர்களில் ஒருவர். அவரின் பேரன் தான் ஆனந்த் மஹிந்திரா. பள்ளி படிப்பு எல்லாம் தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் லவ்டேல் (Lovedale) லாரன்ஸ் பள்ளியில் தானாம். அதன் பிறகு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முடித்தார்.
வேலை
1981-ல் மஹிந்திரா யுஜின் ஸ்டீல் Mahindra Ugine Steel Company Ltd (MUSCO) கம்பெனியின் நிதி இயக்குநருக்கு உதவியாளராக பணியில் சேர்ந்தார்.
1989-ல் அதே யுஜின் ஸ்டீல் கம்பெனிக்கு தலைவராகவும், துணை நிர்வாக இயக்குநராகவும் பதவிக்கு வந்தார்.
நம் ஆனந்த் மஹிந்திரா தான் மஹிந்திரா குழுமத்தின் வியாபாரத்தை ரியல் எஸ்டேட், ஐடி, ஹோட்டல் என பல துறைகளுக்கு அழைத்து வந்தார்.
1991-ல் மஹிந்திரா & மஹிந்திரா கம்பெனியின் துணை நிர்வாக இயக்குநராக பதவிக்கு வந்தார். 1997-ல் மஹிந்திரா & மஹிந்திராவுக்கு நிர்வாக இயக்குநர் ஆனார்.
2007 டீல்
இன்று வரை மஹிந்திரா & மஹிந்திரா கம்பெனிக்கு டிராக்டர்களில் இருந்து கணிசமான வருமானம் வந்து கொண்டு இருக்கிறது. இன்று இந்தியாவில் ஒரு கணிசமான டிராக்டர் சந்தையை இவர்கள் தான் வைத்து இருக்கிறார்கள். இதற்கு 2007-ல் பஞ்சாப் டிராக்டர் நிறுவனத்தில் 64 % பங்குகளை 1,400 கோடிக்கு வாங்கி அன்றே அடி போட்டார் ஆனந்த்.
ஸ்வராஜ் டிராக்டர்ஸ்
பஞ்சாப் டிராக்டர்ஸை வாங்கிய பின் கூட ஸ்வராஜ் பிராண்டை அப்படியே வைத்திருந்தார். அதுவரை நஷ்டத்தில் போய்க் கொண்டிருந்த பஞ்சாப் டிராக்டர்ஸை 2 வருடத்தில் லாபத்துக்கு மடை மாற்றினார். ஸ்வராஜ் டிராக்டர்களுக்கான சந்தையை அடுத்த சில ஆண்டுகளில் 9 %-ல் இருந்து 12 %-ஆக அதிகரித்தது. இன்று வரை இந்தியாவில் அதிக டிராக்டர்களை விற்கும் கம்பெனிகளில் மஹிந்திரா & மஹிந்திராவும் ஒன்று.
2008 டீல்
மஹிந்திரா கஸ்டோ, மஹிந்திரா மோஜோ, மஹிந்திரா செண்ட்ரோ... போன்ற இரு சக்கர வாகனங்களுக்கு அடித்தளம் போட்ட டீல் இது. Kinetic Motors நிறுவனத்தின் இருசக்கர வியாபாரத்தில் சுமாராக 80 % பங்குகளை 110 கோடிக்கு வாங்கினார். பஜாஜ், ஹீரோ, ஹோண்டா அளவுக்கு பெரிதாக ஜெயிக்கவில்லை. ஆனால் பிரீமியம் பைக்கில் மஹிந்திரா மோஜோ பெயர் நிலைத்துவிட்டது.
2009 மரண டீல்
சத்தியம் ஊழல் நினைவிருக்கலாம். சத்தியம் கம்ப்யூட்டர்ஸின் தலைவர் ராமலிங்க ராஜு பல மோசடிகளுக்காக, கைது செய்யப்பட்டார். அதன் பின் சத்தியம் கம்ப்யூட்டர்ஸை தைரியமாக 2,650 கோடி ரூபாய் கொடுத்து வாங்க முன் வந்தது டெக் மஹிந்திரா. விளைவு, இன்று இந்தியாவின் ஐந்தாவது பெரிய ஐடி கம்பெனி டெக் மஹிந்திரா தான்.
2010 சங்யோங் டீல்
பொதுவாக இந்திய கம்பெனிகளைத் தான் வெளிநாட்டு கம்பெனிகள் விலைக்கு வாங்குவார்கள். ஆனால் தென் கொரியாவின் சங்யோங் மோட்டார்ஸ் கம்பெனியில் 70 % பங்கை மஹிந்திரா & மஹிந்திரா 2,100 கோடி ரூபாய்க்கு வாங்கியது. அந்த காலகட்டத்தில் வெளி வந்த ஸ்கார்பியோ, பொலெரோ, XUV 500 எல்லாம் மஹிந்திரா புகழ் பாடும் ரகம்.
வாழ்த்துக்கள்
இப்படி பல டீல்களை செய்து இன்று மஹிந்திரா & மஹிந்திரா குழுமத்தை ஒரு உலக வியாபார குழுமமாக மாற்றிய பெருமை ஆனந்த் மஹிந்திராவையே சேரும். மே 01-ல் பிறந்த நாள் காணும் ஆனந்த் மஹிந்திராவுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications