நம் நாட்டில் கோடை காலம் முடிந்து பருவமழை காலமே தொடங்கிவிட்டது. ஆனால், துபாயில் இப்போது தான் கோடை காலமே ஆரம்பித்துள்ளது. இந்த சூழலில் குடும்பம், வேலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு அரசு ஊழியர்களுக்கு விடுமுறை குறித்த ஜாக்பாட் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அது என்ன என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.
பொதுவாக துபாயில் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் காலம் தான் கோடை காலமாகும். அந்த வகையில், இந்தாண்டுக்கான கோடை காலம் தற்போது தொடங்கியுள்ளது. கோடை காலம் என்றாலே மாணவர்களுக்கு கொண்டாட்டமான காலம் தான். ஆனால், வேலைக்கு செல்லும் பெற்றோருக்கு அப்படி அல்ல. அவர்கள் தங்களது குழந்தைகள் மற்றும் வேலை என இரண்டிலும் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். இது சற்று கடினமாகவும் இருக்கும். இதனை கருத்தில் கொண்டு தான், துபாய் அரசு தற்போது அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை : இதுதொடர்பாக துபாய் அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அரசு ஊழியர்கள் கோடை காலங்களில் தங்களது குடும்ப வாழ்க்கையையும், வேலையையும் சரியாக கையாளும் வகையில், பணி நேரத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளது. அதன்படி, ஊழியர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட உள்ளனர். அதில், குரூப் 1 பிரிவில் இருக்கும் ஊழியர்கள் வாரத்தில் திங்கள் முதல் வியாழன் வரை தினசரி 8 மணி நேரம் பணியாற்ற வேண்டும். இவர்களுக்கு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களும் விடுமுறையாகும்.
அதேபோல், குரூப் 2 பிரிவில் உள்ள ஊழியர்கள் திங்கள் முதல் வியாழன் வரை தினசரி 7 மணி நேரம் மட்டும் பணியாற்றலாம். அதேபோல், அவர்களுக்கு வெள்ளிக்கிழமை அரை நாள் மட்டும் (4.5 மணி நேரம்) வேலை பார்க்கலாம். எனவே, இவர்களுக்கு வெள்ளிக்கிழமை அரை நாள் விடுமுறையும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு விடுமுறையும் என வாரத்தில் மொத்தம் 2.5 நாட்கள் விடுமுறைகளாகும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் ஜூலை 1ஆம் தேதி முதல் செப்டம்பர் 12ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் அந்தந்த அரசுத் துறைகள் தங்களின் விருத்திற்கேற்ப இதை செயல்படுத்திக் கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2024ஆம் ஆண்டின் கோடை காலத்திலேயே இதற்கான முயற்சிகளில் துபாய் அரசு இறங்கியது. சோதனை அடிப்படையில் 21 அரசுத்துறைகளுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையில் வாரத்தில் 4 நாட்கள் ஊழியர்கள் பணிபுரிந்தனர். இந்த புதிய முயற்சிக்கு ஊழியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. அதேபோல், ஊழியர்களும் உற்சாகமாக பணியாற்றியதாகவும், இதனால் திறன் மேம்பாடு நன்கு உயர்ந்ததாகவும் கூறப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தான், இந்தாண்டும் கோடை காலத்தில் அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் நாட்கள் மட்டுமே வேலை என்றும் 3 நாட்கள் விடுமுறை என்றும் அமலுக்கு வரவுள்ளது.
கட்டுமானப் பணியாளர்களுக்கு கட்டுப்பாடு : கோடை காலங்களில் கடுமையான வெயில் அதிகம் இருக்கும் என்பதால், கட்டுமானப் பணியாளர்களின் வேலை நேரத்திலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, உச்சி வெயில் நேரமான பிற்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை நேரடியாக சூரிய வெளிச்சம் படும்படி வேலை செய்யக்கூடாது என்றும், அந்த நேரத்தில் பணியாளர்களுக்கு இடைவெளி விட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இதை அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து விதிகளை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதமும் விதித்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
More From GoodReturns

துபாய் வாழ் இந்தியர்களே உஷார்!! 2 வருஷம் ஜெயில்!! ஈரான் தாக்குதலுக்கு மத்தியில் அரசு எச்சரிக்கை!!

துபாய் விமான நிலையத்தில் விபத்து..? எமிரேட்ஸ் சொன்ன குட் நியூஸ்..!! இந்தியர்கள் ஹேப்பி..!!

துபாய் வாழ் இந்தியர்களே வீட்டை விட்டு வெளியேறினால் நடவடிக்கை: ஈரான் தாக்குதலுக்கு மத்தியில் எச்சரிக்கை

துபாயில் பொட்டி பொட்டியாக தேக்கமடைந்த தங்கம்!! இந்தியாவுக்கு கொண்டு வர முடியாமல் தவிக்கும் டீலர்கள்!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications