இந்தியாவின் பணவீக்கம் கடந்த 2 மாதங்களாக அதிகரித்து வரும் வேளையில் நாட்டு மக்களின் விலைவாசி சுமையை குறைக்கும் விதமாக சமையல் சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைத்தது மத்திய அரசு. இந்த நிலையில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹார்தீப் சிங் பூரி பிஜேபி ஆட்சி இல்லாத மாநில அரசுகளை பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
ஹார்தீப் சிங் பூரி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மத்திய அரசு எரிபொருள் மீதான கலால் வரியை நவம்பர் 2021 மற்றும் மே 2022ல் குறைத்தது. இதை தொடர்ந்து பிஜேபி கட்சி ஆட்சி பொறுப்பில் இருக்கும் மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரி குறைக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது பிஜேபி ஆட்சி இல்லாத மாநில அரசுகள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைக்க வேண்டும், மாறாக VAT வரி அதிகரிக்கப்பட்டு வருகிறது. உதாரணமாக பஞ்சாப் மாநிலம் வாட் வரியை அதிகரித்தது என ஹார்தீப் சிங் பூரி இப்பேட்டியில் தெரிவித்தார்.
பிஜேபி ஆட்சி இல்லாத மாநில அரசுகளும் எரிபொருள் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைத்தால், மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க தான் பரிந்துரை செய்வதாக தெரிவித்தார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதன் உச்ச விலையில் இருந்து குறைந்து ஒரு வருடம் ஆன நிலையிலும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை என எதிர்கட்சிகள் குறை கூறும் வேளையில் ஹார்தீப் சிங் பூரி இந்த பேட்டியில் பதில் அளித்தார்.
மத்திய அரசு அதிகரித்து வரும் ரீடைல் பணவீக்கத்தை குறைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. தக்காளி விலை உயரும் போதும் நேபாளத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. இதேபோல் அரசி விலை உயரும் போது ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது, கோதுமை விலை உயரும் போது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டது.
ஆனாலும் ஜூலை மாதம் நாட்டின் ரீடைல் பணவீக்கம் 7.44 சதவீதமாக உயர்ந்த நிலையில் இதை கட்டுப்படுத்தவே சிலிண்டர் விலை குறைப்பட்டு உள்ளதாக கணிக்கப்படுகிறது. அரசி, கோதுமை போன்ற பிற முக்கிய உணவு பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது, இதனால் ஆகஸ்ட் மாதம் மட்டும் அல்லாமல் செப்டம்பர் மாதம் வரையில் பணவீக்கம் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இதேவேளையில் 5 மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல்கள் அடுத்த 7-8 மாதங்களில் நடக்கும் வேளையில் மக்களின் நம்பிக்கையை பெறவேண்டும் என்ற காரணத்தால் சிலிண்டர் விலையை 400 ரூபாய் வரையில் மத்திய அரசு குறைத்துள்ளதாக எதிர்கட்சிகள் கூறியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹார்தீப் சிங் பூரி பிஜேபி ஆட்சி இல்லாத மாநிலத்தில் தமிழ்நாட்டையும் சேர்த்து பெட்ரோல், டீசல் மீதான VAT வரியை குறைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். மத்திய அரசின் விலை குறைப்பிற்கு பின்பு தமிழ்நாடு டீசல் விலை குறைத்தது


Click it and Unblock the Notifications