ரூ.10 லட்சத்தை ரூ.18 கோடியாக மாற்றிய ஹர்திக் பாண்டியா.. பஞ்சாப் அணிக்கு மாறியதில் அடித்தது ஜாக்பாட்..!!

ஐபிஎல் கிரிக்கெட் விழாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு பெரிய பிளேயர் டிரேட் நிகழ்ந்துள்ளது. இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, மும்பை இந்தியன்ஸ் அணியை விட்டு விலகி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மாறியுள்ளார். இத்துடன் ஐபிஎல் போட்டிகளில் அவருக்கான சம்பளமும் கணிசமாக உயர்ந்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இடையே மேற்கொள்ளப்பட்ட Player Swap மூலம், ஹர்திக் பாண்டியா பஞ்சாப் அணிக்கு செல்கிறார், அவருக்கு பதிலாக இந்தியாவின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு செல்கிறார்.

ரூ.10 லட்சத்தை ரூ.18 கோடியாக மாற்றிய ஹர்திக் பாண்டியா.. பஞ்சாப் அணிக்கு மாறியதில் அடித்தது ஜாக்பாட்..!!

முன்பு மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியா பெற்றது 16.35 கோடி ரூபாய் சம்பளம், அதுவே தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியில் அவருக்கு 18 கோடி ரூபாயாக சம்பளத்தை உயர்த்தியுள்ளது. உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அவருக்கு சுமார் 1.65 கோடி ரூபாய் ஊதிய உயர்வு கிடைத்துள்ளது. ஆனால், அர்ஷ்தீப் சிங் தனது முந்தைய ஒப்பந்தமான 18 கோடி ரூபாய் சம்பளத்துடனேயே மும்பை அணிக்கு செல்கிறார்.

ஹர்திக் பாண்டியா 2015ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்தார். அது முதல், ஹர்திக் பாண்டியாவின் ஊதியம் பல மடங்கு உயர்ந்துள்ளது. 2015 - 2017 ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெறும் 10 லட்சம் ரூபாய்க்கு விலை கொடுய்த்து வாங்கியது. அதன் பின்னர் 2018-2021 வரை மும்பை இந்தியன்ஸ் அணி இவரது சிறப்பான ஆட்டத்தால் சம்பளம் 11 கோடி ரூபாயாக படிப்படியாக உயர்த்தியது.

Also Read

2022 - 2023 ஆம் ஆண்டில் புதிய அணியான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக மாறியபோது இவரது சம்பளம் 15 கோடி ரூபாயாக உயர்ந்தது. அங்கு தனது முதல் ஆண்டிலேயே ஐபிஎல் கோப்பையையும் வென்று கொடுத்தார். இந்நிலையில் 2024இல் மீண்டும் மும்பை அணிக்கு திரும்பிய போது இவரது சம்பளம் 15 கோடி ரூபாய். அதுவே 2025 மற்றும் 2026 சீசன்களில் மும்பை அணி இவரின் சம்பளம் 16.35 கோடி ரூபாயாக இருந்தது.

தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மாறியுள்ள இவருக்கு புதிய ஒப்பந்தத்தின்படி சம்பளம் 18 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இவருக்கு பதிலாக மாற்றப்பட்ட அர்ஷ்தீப் சிங் முதலில் பஞ்சாப் அணியில் 18 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றவர். எனவே அவர் இடத்தை நிரப்புவதால் ஹர்திக்கிற்கு அதே சம்பளம வழங்கப்படுகிறது.

Recommended For You

கடந்த சில சீசன்களாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட்டாலும் அணியின் செயல்பாடு எதிர்பார்த்தபடி சிறப்பாக அமையவில்லை. இந்நிலையில் ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லாத பஞ்சாப் கிங்ஸ் அணியை பலப்படுத்தும் முக்கிய வீரராக ஹர்திக் பாண்டியா களமிறங்க உள்ளார். மறுபுறம், பஞ்சாப் அணிக்காக நீண்டகாலம் விளையாடி 96 போட்டிகளில் 111 விக்கெட்டுகளை வீழ்த்திய முன்னணி பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கை மும்பை அணி தன்வசப்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+