இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாடியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். ஹர்திக் தனது காதலி மஹிகா சர்மாவுக்காக ஒரு அழகான டாட்டூவை கழுத்து பகுதியின் பின்புறம் செய்துள்ளார்.
ஹர்திக் பாண்டியா திருமண முறிவு, காதல் முறிவு என பல தடுமாற்றத்திற்கு மத்தியில் போராடி வரும் வேளையில், சமீப காலமாக மஹிகா சர்மா உடன் காதலில் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது, இதேவேளையில் ஹர்திக் பாண்டியா கிரிக்கெட் பெர்பாமென்ஸ்-ம் மேம்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா உடனான உறவு, நட்பு என்ற அளவை தாண்டியது என்பதை மிகவும் வெளிப்படையாக காதலர் தினத்தில் தனது ஸ்பெஷல் டாட்டூ மூலம் தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். இந்த டாட்டூ வெறும் அழகுக்காக மட்டுமல்ல, காதல், அடையாளம் மற்றும் பார்னர்ஷிப் கதையைச் சொல்லும் ஒரு கலைப் படைப்பு என அலியன்ஸ் டாட்டூ ஸ்டூடியோவின் பிரபல டாட்டூ கலைஞர் சன்னி பானுஷாலி தெரிவித்தார்.
முதலில் ஹர்திக் தனது கழுத்தின் பின்புறத்தில் எளிமையாக "M" என்ற எழுத்தை மட்டும் டாட்டூ போட நினைத்தார். இது மஹிகாவின் பெயரின் முதல் எழுத்து. ஆனால் இருவரும் டாட்டூ கலைஞர்கள் மற்றும் டிசைனரிடம் பேசியபோது, இருவரும் ஒருவருக்கொருவர் தங்களின் வலிமையை அதிகரிக்கும் துணையாக இருப்பதாகக் கூறினர். இதனால் எளிய "M" டாட்டூவை புதிதாக வடிவமைக்க முடிவு செய்தனர்.
இறுதியில் உருவான டாட்டூவில் இரண்டு சிறுத்தைகள் இடம்பெற்றுள்ளன. ஒன்று தெளிவாகவும் வரையப்பட்டுள்ளது, மற்றொன்று வெறும் கோடுகளால் சிறுத்தை வரையப்பட்டு உள்ளது. இது முதல் சிறுத்தையைச் சுற்றி நிழல்போல் 2வது சிறுத்தை வரையப்பட்டு உள்ளது. இதற்கு மேல் M என்ற எழுத்து உருவாகியுள்ளது - இது மஹிகாவை குறிக்கிறது.
இந்த வடிவமைப்பு இருவரும் ஒன்றாக வலிமையுடன் நகர்வதை அழகாக சித்தரிக்கிறது. சிறுத்தை தனியாகவே ஆற்றல் மிக்கது, ஆனால் ஒன்றாக இருந்தால் தடுக்க முடியாதது என்ற உவமையைப் பயன்படுத்தியுள்ளார் டாட்டூ ஆர்டிஸ்ட். ஹர்திக் பாண்டியா இதை காதலர் தின பரிசாக மஹிகாவுக்கு அளித்துள்ளார்.
யார் இந்த மஹிகா சர்மா?
24 வயதான மஹிகா ஒரு மாடலும், நடிகையும் ஆவார். மேலும் அவர் யோகா ஆசிரியராகவும் பணியாற்றுகிறார். ஹர்திக் பாண்டியாவுடன் 2025 முதல் உறவில் உள்ளார். ஹர்திக் தனது மகன் அகஸ்தியாவுடனும் குடும்பத்தினருடனும் மஹிகா இணைந்து பழகும் வீடியோ, போட்டோ ஆகியவை பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
ஹர்திக் முன்பு 2020-ல் நடனக் கலைஞரும் நடிகையுமான நடாசா ஸ்டான்கோவிக்-ஐ திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு 2023ஆம் ஆண்டு மகன் பிறந்தான். ஆனால் 2024-ல் அவர்கள் பிரிந்தனர். அதன்பிறகு ஜாஸ்மின் வாலியாவுடன் சில காலம் காதலில் இருந்தார், இந்த காதல் முறிவு அடைய தற்போது மஹிகாவை காதலித்து வருகிறார்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது



Click it and Unblock the Notifications