இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, அதிரடியான பேட்டிங், அருமையான பவுலிங், அபாரமான ஃபீல்டிங் என இந்திய அணியின் நட்சத்திர வீரராக ஜொலித்துவருகிறார். 2016ம் ஆண்டு முதல் இந்திய அணியில் ஆடிவரும் இவர், ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார். இளம் துடிப்பான வீரரான ஹர்திக் பாண்டியா, கிரிக்கெட்டில் கோடிக்கணக்கில் சம்பாதித்துவருகிறார். ஐபிஎல் மற்றும் விளம்பரங்கள் மூலமாகவும் சம்பாதித்துவருகிறார் ஹர்திக் பாண்டியா. சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வந்த ஹர்திக் பாண்டியா, கிரிக்கெட்டின் மூலம் தனக்கு கிடைத்த வாழ்க்கையை ரசித்து, அனுபவித்து வாழ்கிறார். இந்நிலையில், அவரது கைக்கடிகாரத்தின் விலை அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது.

கிரிக்கெட் வீரர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்நாள் முழுவதும் செலவாகும் விலையுயர்ந்த மற்றும் விலையுயர்ந்த கடிகாரங்களை சேகரிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். சிலருக்கு கடிகாரங்களை சேகரிப்பது ஒரு ஆர்வம், சிலருக்கு அது ஒரு முதலீடு. இந்தியாவில் உள்ள பல பெரிய மற்றும் புகழ்பெற்ற நபர்களைப் போலவே, இந்திய கிரிக்கெட் வீரர் ஹார்டிக் பாண்ட்யாவுக்கும் ஆடம்பரமான உடைகள், அணிகலன்களை அணிவதில் தீராத மோகம் உண்டு. குறிப்பாக விலையுயர்ந்த கடிகாரங்களை சேகரிப்பதில் தீவிர பிரியராக உள்ளார்.
பிரபலமான மற்றும் ஆடம்பர கடிகாரமான படேக் பிலிப் மாடல் வாட்ச்சை ஹர்திக் பாண்டியா அணிந்துள்ளார். இந்த விலை உயர்ந்த கைக்கடிகாரம் பற்றி தற்போது சமூக வலைதளங்களில் பேசுப்பொருளாக உள்ளது. ஹார்டிக் பாண்ட்யா ரோஸ் கோல்ட் ப்ரவுன் நிறத்தில் patek philippe nautilus கடிகாரத்தை அணிந்திருந்தார், அந்த வாட்ச்சின் விலை $6.78 மில்லியன் அதாவது, கிட்டதட்ட ரூ.60 கோடி ஆகும். இதேபோல், ROLEX GMT MASTER - 2 விலை 3.8 மில்லியன் டாலர் அதாவது ரூ.33 கோடி ஆகும். இவை இரண்டும் சேர்த்து 11 மில்லியன் டாலர் ரூ.93 கோடி ரூபாய் ஆகும்.
இதற்கு நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒரு பயனர், இதில் ஒரு கடிகாரத்தின் விலையில் ஒரு சூப்பர் காரை வாங்கலாம். மற்றொரு பயனர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாமின் மொத்த நிகர மதிப்பை விட அதிகமாகும். மேலும் ஒரு பயனர் இது பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு சமம் என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
முன்னதாக, துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த ஆட்டத்தில் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா அணிந்த வாட்ச் ரசிகர்களிடையே பேசுபொருளாகி இருக்கிறது. ரிச்சர்ட் மிலே நிறுவனத்தில் RM 27 வகையிலான இந்த வாட்சின் விலை மட்டும் இந்திய மதிப்புப்படி ரூ.6.92 கோடியாகும். இது ஒரு லிமிடெட் எடிஷன் வாட்ச். அதாவது உலகிலேயே அந்த வகையில் 50 வாட்ச்கள் மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த வாட்சின் பேஸ் மட்டும் கார்பனால் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக எவ்வளவு அதிர்வுகளையும் தாங்க கூடிய வகையில் வாட்ச் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் நீண்ட காலம் இந்த வாட்ச் பயன்படுத்த முடியும். வாட்சின் உட்புறம் கிரேடு 5 டைட்டானியம் மூலமாக உருவாக்கப்பட்டிருப்பதால், கைகளில் வாட்ச் கட்டியிருக்கும் உணர்வே மனிதர்களுக்கு இருக்காது. இதன் கண்ணாடி பகுதியில் கிளார் அடிக்காமல் இருப்பதற்காக ஆன்டி-கிளேர் கிரிஸ்டல் பொறிக்கப்பட்டுள்ளது. இதனால் எந்த கீறலும் வாட்சில் விழாது. 70 மணி நேரம் வரை இயங்கக் கூடிய வாட்ச் ஆகும். இதனை லக்சுரி வாட்ச் சந்தையில் டெக்னிக்கல் மார்வெல் என்று புகழ்கிறார்கள்.
லக்சுரி வாட்ச் சந்தையில் இதுவே டாப் பிராண்ட் என்று பலரும் கூறி வருகின்றனர். இந்த வகையான வாட்ச்களை இந்திய அணியின் விராட் கோலி ஏற்கனவே அணிந்திருக்கிறார். டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடால், கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஹாலிவுட் நடிகை மார்கட் ராபி உள்ளிட்ட பலரும் இந்த வகையான வாட்சையே பயன்படுத்தி வருகின்றனர்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications